Pandian stores 2: சரவணனை தங்கமயிலுடன் பார்த்த பாண்டியன்.. அட என்ன இப்படி ரியாக்ட் பண்றாரு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. தன்னுடைய மகன் சரவணன் தனக்கு நிச்சயித்த தங்கமயிலுடன் கோயிலில் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் பாண்டியன், சரவணன் தன்னை அங்கே வைத்துப் பார்த்தால் தான் தவறு செய்து விட்டதாக நினைப்பார் என்று கூறி அங்கிருந்து வெளியேறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
இதனிடையே திருமண ஜவுளி எடுப்பதற்காக குடும்பத்தினர் அனைவரும் அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் திட்டமிடுகின்றனர். முன்னதாக நிச்சயதார்த்தத்திற்காக ஜவுளி எடுத்த சூழலில் தற்போது மீண்டும் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவருக்கும் ஜவுளி எடுக்க பாண்டியன் திட்டமிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. கோயிலுக்கு அன்னதானம் குறித்து பேசுவதற்காக பாண்டியன் மற்றும் பழனிவேல் இருவரும் சென்ற சூழலில் அந்த கோயிலில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கின்றனர். திருமணத்திற்கு முன்பு பேசுவது தேவையில்லாதது என்றும் வாழ்க்கை முழுவதும் விடிய விடிய பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதானே என்றும் கூறும் பாண்டியன் உடனடியாக தன்னுடைய பேச்சை மாற்றிப் பேசுவதை பார்க்க முடிகிறது.
மாற்றி பேசும் பாண்டியன்: சரவணனை தங்கமயிலுடன் பார்த்த பின்பு அப்படியே டோட்டலாக தன்னுடைய வார்த்தைகளை மாற்றி பேசுகிறார் பாண்டியன். தன்னுடைய பேச்சை கேட்டு காத்திருந்து திருமணம் செய்து கொள்ளும் சரவணன், திருமணத்துக்கு முன்னதாகவே பேசுவது நல்ல விஷயம் தான் என்று பாண்டியன் கூறுகிறார். மேலும் அங்கே தான் இருப்பதை பார்த்தால் சரவணன் தான் தவறு செய்ததாக நினைப்பான் என்று கூறி உடனடியாக அந்த கோயிலில் இருந்து அன்னதானம் குறித்து கூட கேட்காமல் வெளியேறுகிறார். அவரது இந்த உடனடி மனமாற்றம் பழனிவேலையும் திகைக்க வைக்கிறது.
கதிரை அவமானப்படுத்தும் குமரன்: இந்நிலையில் ஃபுட் டெலிவரி செய்யும் கதிரை வம்பிழுக்க, குமரன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். ஃபுட் டெலிவரி செய்வது குமரனுக்கு தான் என்று தெரியாமல் கதிர் அதை ஏற்ற சூழலில், அடுத்தடுத்த அட்ரஸ்களை மாற்றி மாற்றி கூறி கதிரை அலைக்கழிக்கிறார்கள் குமரன் மற்றும் அவரது நண்பர்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கதிர் ஃபுட் டெலிவரி செய்ய முற்படும் சூழலில் தான் கம்பளைண்ட் செய்தால் அவரது வேலை பறிபோகும் என்று குமரன் கூறுகிறார். மேலும் டிப்ஸாக பத்து ரூபாயை கதிருக்கு கொடுக்க முற்படுகிறார்.
குமரன் மீது ராஜி ஆத்திரம்: இதனால் அவமானமாக உணர்ந்தாலும் தன்னுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அமைதியாக செல்கிறார் கதிர். ஆனால் உடனிருக்கும் பழனிவேல் இதை பார்த்து ஆத்திரப்படுகிறார். மேலும் தன்னுடைய அண்ணன் மகன் குமரனை திட்டி தீர்க்கிறார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ராஜியிடம் கூறுகிறார் பழனிவேல். இதை கேட்டு ராஜி மிகுந்த ஆத்திரப்படுகிறார். தன்னுடைய அண்ணன் மிகவும் ஓவராக நடந்து கொள்வதாக கூறும் ராஜி, இது குறித்து கதிரிடம் கேள்வி எழுப்புகிறார். எதற்காக பணிந்து போனாய் என்று கேட்கிறார். நானாக இருந்திருந்தால் அவனை அடித்து துவைத்து இருப்பேன் என்றும் கூறுகிறார்.
ஜவுளி எடுக்க பாண்டியன் திட்டம்: இந்நிலையில் தான் தன்னுடைய வேலைக்காக அடங்கிப் போனதாக கதிர் கூறுகிறார். இதனிடையே திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில் பத்திரிகை வைக்கும் படலமும் தொடர்ந்து சிறப்பாக நடக்கிறது. பத்திரிகை வைக்க போன இடங்களில் என்ன மாதிரியான எக்ஸ்பீரியன்ஸ் ஏற்பட்டது என்று மீனா அங்கலாய்ப்பதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரையும் கூப்பிட்டு பேசும் பாண்டியன், திருமணத்திற்கான ஜவுளி எடுக்க செல்லலாம் என்று பேசுகிறார். மறுநாள் விடுமுறை என்பதால் அனைவரும் திருமண ஜவுளியை எடுக்க செல்ல திட்டமிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











