மீனா கையால் தண்ணீர் வாங்கிக் குடிக்காத பாண்டியன்.. மீனா -ராஜியை ஒதுக்கிவைத்த குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்துள்ளது. ராஜி குடும்பத்தினருக்கு தெரியாமல் ஹோம் டியூஷன் எடுக்கச் சென்ற நிலையில், அவரது சித்தப்பா சக்திவேல் மூலமாக அனைவருக்கும் தெரியவருகிறது.

இதையடுத்து வீட்டிற்கு வந்த மருமகளை வேலைக்கு அனுப்பி பாண்டியன் வீட்டில் உலை வைப்பதாக சக்திவேல் கேவலமாக பேசுகிறார். இதை பாண்டியனால் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு காரணமான ராஜி மற்றும் மீனாவிடம் பேசாமல் அனைவரும் ஒதுக்குகின்றனர்.

pandian stores 2 serial vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். அதிக டிஆர்பியுடன் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாகவே அமைந்திருந்தது. தனக்காக அடுத்தடுத்த வேலைகளுக்கு சென்று கதிர் கஷ்டப்படுவதை பார்த்து பொறுக்க முடியாத ராஜி, ஹோம் டியூஷன் எடுக்கிறார். வீட்டில் சொன்னால் பர்மிஷன் கிடைக்காது என்று தெரிந்து யாருக்கும் தெரியாமல் அவர் ஹோம் டியூஷன் எடுக்க, அங்குவரும் ராஜியின் சித்தப்பா சக்திவேல் மூலம் அனைவருக்கும் தெரியவருகிறது.

ஒதுக்கி வைக்கப்படும் மீனா -ராஜி: இதையடுத்து பாண்டியனை முத்துவேல், சக்திவேல் உள்ளிட்டவர்கள் கேவலமாக பேசுகின்றனர். வீட்டிற்கு வந்த மருமகளை வேலைக்கு அனுப்பி அதில் பாண்டியன் வீட்டில் உலை வைத்து சாப்பிடுவதாக சக்திவேல் பேச, இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் பாண்டியன். தன்னுடைய அப்பா இப்படி அவமானப்பட்டதை நினைத்து கதிர், செந்தில் உள்ளிட்டவர்களும் கோபமும் ஆத்திரமும் அடைகின்றனர். அது அப்படியே இதற்கு காரணமான ராஜி மற்றும் மீனா மீது திரும்புகிறது. ராஜி மற்றும் மீனாவிடம் கோமதி, பாண்டியன், கதிர் மற்றும் செந்தில் என யாருமே பேசாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.

மீனா மனக்குமுறல்: அவர்கள் தரப்பு நியாயத்தை அவர்கள் வெளிகாட்டும் சந்தர்ப்பத்தை குடும்பத்தினர் யாரும் கொடுக்காத நிலை காணப்படுகிறது. பாண்டியனுக்கு மீனா தண்ணீர் கொடுக்க அவர் அதை வாங்காத நிலை இன்றைய எபிசோடில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிலைமையை சமாளிக்கும்வகையில் பழனிவேல் மீனாவிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார். இதனிடையே, ராஜி -கதிர் மற்றும் மீனா -செந்திலிடையே தொடர்ந்து சண்டையும் மனஸ்தாபமும் காணப்படுகிறது. இந்நிலையில், மீனாவிடம் கோபித்துக் கொண்டு செந்தில் மொட்டை மாடிக்கு சென்று தூங்குகிறார். இதுகுறித்து ராஜியிடம் தன்னுடைய மனக்குமுறலை மீனா வெளிப்படுத்துகிறார்.

வருத்தத்தில் கோமதி: காலையில் எழுந்தவுடன் அத்தையிடம் பேசி நாளை துவங்கும் தான், இரவு தூங்கப்போவதற்கு முன்னதாக செந்திலிடம் பேசி அன்றைய நாளை சிறப்பாக நிறைவு செய்வேன் என்றும் ஆனால் தற்போது அதற்கு வழியில்லாமல் போய்விட்டதாக மீனா கூறுகிறார். ராஜியும் தன்னால்தான் இந்த பிரச்சினை என்று அழுதுக் கொண்டே கூற, இதை கோமதி பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. செந்தில் தனியாக தூங்குவதையும் கோமதி பார்த்து வருத்தப்படுகிறார்.

https://www.youtube.com/watch?v=ge_FSd6L2yA

சிக்கலில் தங்கமயில்: இதனிடையே, லாக்கரில் இருந்து எடுத்துவந்த நகைகளில் ராஜியின் நகைகளை மட்டும் அவரது வீட்டிற்கு பழனிவேல் மூலமாக கொடுத்தனுப்பிய கோமதி, தங்கமயில் உள்ளிட்ட மற்றவர்களின் நகைகளை திரும்பவும் லாக்கரிலேயே கொண்டு சென்று வைத்து வருகிறார். தன்னுடைய நகைகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ள தங்கமயில் கூறிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் கோமதி. இதனிடையே, தன்னுடைய நகைகளில் காசுமாலை கருத்துப் போனதை தன்னுடைய அம்மாவிடம் பயத்துடன் கூறுகிறார் தங்கமயில். ஏதாவது செய்து நகைகளை மீண்டும் எடுத்துவரலாம் என்று பாக்கியம் சமாதானம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X