Pandian stores 2 serial: பழனிவேலின் கல்யாண கனவை தகர்த்த அண்ணன்கள்.. நின்றுபோன நிச்சயதார்த்தம்!

சென்னை:விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து துவக்கத்திலிருந்தே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் இருந்த நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் இந்த சீரியல் நிறைவு செய்யப்பட்டு இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் சீசனில் இருந்த ஒன்றிரண்டு நடிகர்கள் தவிர்த்து, இரண்டாவது சீசனில் முற்றிலும் புதியவர்களை கொண்டு அப்பா -மகன் பாசத்தை மையமாக கொண்டு இந்த சீசன் உருவாகியுள்ளது. முதல் சீசனில் மூத்த அண்ணனாக பாசம் காட்டிய ஸ்டாலின் இந்த சீசனில் அப்பாவாக அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது மனைவியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.

television vijay tv pandian stores 2 serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் சிறப்பான கவனத்தை பெற்று வருகின்றன. வாரந்தோறும் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதல் 10 இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதியின் மகன்கள், மகள்கள், மருமகள்கள், கோமதியின் அண்ணன்களின் பகை உள்ளிட்ட விஷயங்களை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை காட்சிப்படுததி வருகிறார் இயக்குநர். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நல்லது கெட்டதுகளை இந்த சீரியல் அழகியலோடு கொடுத்து வருகிறது.

கறார் காட்டும் பாண்டியன்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கண்டிப்பை மட்டுமே தன்னுடைய மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினரிடம் காட்டும் பாண்டியனுக்கு பின்னால் அழகான பாசம் ஒட்டிக் கொண்டிருப்பதை அவரது குடும்பத்தினர் அனைவருமே உணர்ந்தே உள்ளனர். மகன்களிடம் மட்டுமில்லாமல் மருமகள்களிடமும் கறார் காட்டுகிறார் பாண்டியன். பாண்டியன் -கோமதி தம்பதியின் 3 மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணமான நிலையில், இன்னும் ஒரு மகள் உள்ளார். இதனிடையே , சிறுவயது முதலே தன்னுடனேயே இருக்கும் கோமதியின் தம்பி பழனிவேலுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்கிறார் பாண்டியன்.

பழனி திருமணத்தை நிறுத்தும் அண்ணன்கள்: தன்னுடைய தம்பிக்கு திருமணம் செய்ய பாண்டியன் யார் என்ற ஈகோ அதிரடியாக எட்டிப்பார்க்க அவரது திருமணத்தை குலைக்கின்றனர் முத்துவேல் மற்றும் சக்திவேல். 40 வயதை நெருங்கிய நிலையில் தன்னுடைய தம்பிக்கு நடக்கும் நல்ல விஷயம் தாங்கள் செய்ததாகவே இருக்க வேண்டும் என்றும் பாண்டியன் செய்ததாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் பெண் வீட்டாரிடமே போய் கண்டதையும் சொல்லி அவருக்கு நடக்கவிருந்த நிச்சயத்தை நிறுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. கோயிலில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் முன்னதாகவே தன்னுடைய குடும்பத்தினருடன் மாப்பிள்ளை பழனிவேலை அழைத்துக் கொண்டு வருகிறார் பாண்டியன்.

தகர்ந்த பழனியின் திருமண கனவு: வரமாட்டார்கள் என்று நினைத்த பழனிவேலின் அம்மா மற்றும் அண்ணிகளும் கோயிலுக்கு வந்த நிலையில், பெண் வீட்டார் வராத சூழலில் அவர்களுக்கு கால் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்காத நிலையில் வீட்டிற்கே சென்று சரவணன், செந்தில், மீனா மற்றும் தங்கமயில் பேசுவதாகவும் ஆனால் பழனிவேலின் அண்ணன்கள் கூறியதை சொல்லி இந்த திருமணம் நடக்காது என்று பெண் வீட்டார் கூறுவதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன. தன்னைவிட இளையவர்களுக்கும் திருமணம் நடந்த நிலையில் தனக்கு நடக்க நிச்சயிக்கப்படும் திருமணத்திற்காக மிகுந்த ஆவலுடன் காணப்படுகிறார் பழனிவேல். அவரது இந்த திருமணக் கனவை அவரது அண்ணன்களே தகர்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X