Pandian stores 2 serial: கதிரோட வைராக்கியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உற்சாகத்தில் பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் கதிர் -பாண்டியன் இடையிலான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு காணப்பட்டது. தானும் தன்னுடைய மனைவி ராஜியும் வீட்டில் சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் பணம் கொடுக்கிறார் கதிர். இதையடுத்து பாண்டியன் மிகுந்த ஆத்திரமடைவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

தொடர்ந்து இருவர் தங்கி சாப்பிடுவதற்கு 6 ஆயிரம் ரூபாய் எப்படி போதும் என்று கோபத்துடன் பாண்டியன் கேட்பதாகவும் அடுத்த மாதத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாய் தருவதாக கதிர் கூறுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது. குடும்பத்தினர் முன்னிலையில் கதிரை திட்டி தீர்த்தாலும் கடையில் தன்னுடைய சித்தப்பா முன்பு கதிரின் இந்த ரோஷம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக பாண்டியன் கூறுவதாகவும் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாகவே கவர்ந்துள்ளது/ எப்போதும் கறாராகவும் கண்டிப்பாகவும் தன்னுடைய மகன்களிடம் நடந்து கொள்ளும் பாண்டியன் இன்றைய தினம் தன்னுடைய உண்மையான மனநிலையை தன்னுடைய சித்தப்பாவிடம் வெளிப்படுத்தும் சூழல் காணப்பட்டது. தான் மற்றும் தன்னுடைய மனைவி ராஜி இருவரும் வீட்டில் சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் பணம் கொடுக்கிறார் கதிர். இதற்கு கோமதி மறுப்பு தெரிவிக்கிறார். பாண்டியனும் கோபமடைகிறார்.

கதிர் விளக்கம்: தற்கு பதிலளிக்கும் கதிர், தன்னை தண்டம் என்றும் தான் அழைத்து வந்த பெண்ணிற்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டியதாக உள்ளது என்றும் முன்னதாக பாண்டியன் சொன்னதை சுட்டிக்காட்டுகிறார். இதைக் கேட்கும் கோமதி அது ஏதோ கோபத்தில் கூறியது என்று சொல்ல, தொடர்ந்து மூத்த அண்ணன் சரவணன் வேலை செய்து சம்பளம் கொடுக்கிறார், இரண்டாவது அண்ணன் செந்தில் கடையில் வேலை செய்கிறார், தான் எதுவுமே செய்வதில்லை அதனால்தான் தற்போது இந்தப் பணத்தை கொடுப்பதாக கூறுகிறார். இந்நிலையில் பாண்டியனும் கோபத்தில் கதிரும் ராஜியும் சாப்பிடுவதற்கு 6000 போதாது என்றும் குறைந்தபட்சம் 10,000 ஆகும் என்றும் கூறிவிட்டு செல்கிறார்.

புலம்பும் கோமதி: தொடர்ந்து கதிரும் அடுத்த மாதத்தில் இருந்து தான் 10000 ரூபாய் கொடுப்பேன் என்று ரோஷத்துடன் பேசுவதாக இன்று எபிசோட் காணப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து கேள்வி கேட்கும் கோமதியிடம் தன்னை நம்பி வந்த ராஜி, மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறுவதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இதை வெளியில் இருந்து கேட்கும் ராஜியும் உற்சாகமான மனநிலையை அடைகிறார். இந்நிலையில் கதிர இப்படி நடந்து கொண்டது குறித்து மீனாவிடம் கோமதி புலம்புகிறார். இதைக் கேட்கும் மீனாவோ கதிர் ரோஷத்துடன் பணம் கொடுத்தது குறித்து பாண்டியன் கண்டிப்பாக சந்தோஷம்தான் அடைந்து இருப்பார் என்று கூறுகிறார்.

உச்சி குளிர்ந்த பாண்டியன்: தே போல கடையில் அனைவர் முன்னிலையிலும் கதிரை திட்டுவது போல பாண்டியன் காணப்படுகிறார். ஆனால் தனியாக தன்னுடைய சித்தப்பாவுடன் இருக்கும்போது கதிரின் இந்த ரோஷம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் சிறுவயதில் தன்னை பார்த்தது போலவே கதிர் இப்போது காணப்படுவதாகவும் பெருமையாக பேசுகிறார். கதிரின் இந்த ரோஷம் கண்டிப்பாக அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

மொக்கை வாங்கும் தங்கமயில்: இதனிடையே கோமதி, மீனா மற்றும் ராஜி கதிர் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் தங்கமயில், கதிர் பேசியது மிகவும் தவறு என்று கூறுவதாகவும் ஆனால் மற்றும் மூவரும் அதில் என்ன தவறு, பாண்டியன் கண்டிப்பாக கதிரை உயர்வாகத்தான் நினைப்பார் என்றும் கூறுவதாக காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் அங்கிருந்து எழுந்து செல்கின்றனர். இதையடுத்து தங்கமயில் தனித்து விடப்படுவதாக யோசிக்கிறார். இவ்வாறு இன்றைய எபிசோடின் காட்சிகள் காணப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X