Pandian stores 2 serial: பர்ஃபார்மன்ஸ் பண்றதை நிறுத்து.. ராஜியிடம் எரிந்து விழுந்த கதிர்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகள் பாசத்தை அடித்தளமாக கொண்டு மிகச்சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து இந்த சிரியல் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமான சீரியலாக டிஆர்பியிலும் அதிக புள்ளிகள் பெற்று நடைபோட்ட நிலையில் தற்போது தொடரின் இரண்டாவது சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் 27 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த பாண்டியன் -கோமதி தம்பதி, இதனால் முத்துவேல், சக்திவேல் குடும்பத்தினரிடம் பகைமை பாராட்டி வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் தன்னுடைய அண்ணன்களின் பாசத்தை பெற முடியாமல் ஏக்கத்தில் உள்ளார் கோமதி. இந்நிலையில் தன்னை போலவே திருமணத்தின்போது வீட்டை விட்டு ஓடும் தன்னுடைய அண்ணன் மகனை மீட்கும் கோமதி, தன்னுடைய மகனின் மற்றும் ராஜியின் விருப்பத்திற்கு மாறாக அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதனால் இரு குடும்பத்தினரிடையே அதிகமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் முதல் 5 இடங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு செய்யப்பட்டு இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசம் மையமாக இருந்த நிலையில் தற்போது அப்பா மகன்களின் பாசம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் சீசனில் மூத்த அண்ணனாக தன்னுடைய தம்பிகளின் வாழ்க்கைக்காகவே வாழும் அண்ணனாக நடித்த ஸ்டாலின் இந்த சீசனில் அப்பாவாக, தன்னுடைய மகன்களின் வாழ்க்கையின் சிறப்பை மட்டுமே குறிக்கோளாக செயல்படுவதாக கதைக்களம் அமைந்துள்ளது.
சிதைந்த பாண்டியனின் நம்பிக்கை: தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்துவரும் பாண்டியனின் நம்பிக்கையை அவரது அடுத்தடுத்த மகன்கள் செந்தில் மற்றும் கதிரின் திருமணங்கள் சிதைக்கின்றன. தன்னுடைய அப்பாவிற்கு பயப்படும் செந்தில், கதிர் கொடுத்த தைரியத்தில் தான் காதலித்த மீனாவையே மணமுடித்து வருகிறார். இதனால் ஊராரின் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறார் பாண்டியன். இதை எதிர்கொண்டு அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்குள்ளாகவே அடுத்த இடியாக தன்னுடைய பகையாளியாக இருக்கும் கோமதியின் அண்ணன் முத்துவேல் மகள் ராஜியை திருமணம் செய்து வருகிறார் கதிர்.
ராஜியின் வாழ்க்கையை காக்கும் கோமதி: திருமணத்தின்போது வீட்டைவிட்டு வெளியேறும் ராஜியை அவரது காதலன் கண்ணன் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இதனால் அவர் நடுத்தெருவில் நிற்கிறார். அவரை மீட்கும் கோமதி தன்னுடைய மகன் கதிர் மற்றும் ராஜிக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் மட்டுமில்லாமல் ராஜியின் வீட்டிலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ணன் தூக்கி சென்ற பணம் மற்றும் நகையை ஏமாற்றிய பழி கதிர்மீது விழுகிறது. இதனால் அவர் அடிஉதைபடும் சூழலும் ஏற்படுகிறது. தன்னுடைய அப்பாவின் அன்பையும் அவர் இழக்க நேர்கிறது.
கேள்விக்குறியாகும் சரவணனின் வாழ்க்கை: செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் மூத்த அண்ணன் சரவணனின் காதல் கேள்விக்குறியாகிறது. அவரது முந்தைய காதலை தன்னுடைய தந்தைக்காக அவர் துறந்த நிலையில் தற்போது ராஜி மூலம் அந்த காதல் குடும்பத்தினருக்கு தெரியவருவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. மேலும் தன்னுடைய அப்பா மற்றும் சித்தப்பாவின் வண்டி சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்து பார்க்கிறார் ராஜி. இதை பார்க்கும் கதிர், அவரிடம் எரிந்து விழுகிறார். ஜன்னலில் இருந்து வீட்டு வாசலில் இருந்து அடிக்கடி தன்னுடைய அப்பா உள்ளிட்ட குடும்பத்தினரை பார்க்கும் பர்பார்மென்சை எத்தனை நாட்களுக்கு தொடர்வாய் என்று கதிர் கோபத்துடன் கேட்கிறார். இதனால் ராஜி அழுகிறார்.


Click it and Unblock the Notifications











