Pandian stores 2: மீனாவை பார்க்க வந்த அம்மா.. அட அவங்ககிட்ட இப்படி ஒரு விஷயமா?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் பல சுவாரசியங்களுடன் காணப்பட்டது. பாண்டியன் குடும்பத்தினரிடம் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நபர் வந்து பேசுகிறார். அவர்களது தேவைகளை அனைவரும் கூற வந்தவரோ 40 லட்ச ரூபாய் பட்ஜெட் சொல்கிறார்.
இதை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் திகைக்கின்றனர். இந்நிலையில் 40 லட்ச ரூபாய் இருந்தால் இது போன்று இன்னொரு வீட்டை தான் கட்டி விடுவேன் என்று பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தங்கமயிலின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்று சரவணன் முகம் வாடினாலும், பட்ஜெட் அவரையும யோசிக்க வைக்கிறது. தொடர்ந்து மீனாவை அவரது அம்மா வந்து பார்க்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாக அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் திருமணத்தை நடத்துவதற்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் குரூப்பில் இருந்து ஒரு நபர் வருகிறார். அவரிடம் தங்களது விருப்பங்களை குடும்பத்தினர் ஒவ்வொருவராக கூறுகின்றனர். திருமணத்தை கோயிலிலும் ரிசப்ஷனை தோப்பிலும் வைக்க வேண்டும் என்று பாண்டியனும் பூங்கா போன்ற அட்மாஸ்பியரில் வைக்க வேண்டும் என்று அரசியும் இவ்வாறாக ஒவ்வொருவராக தங்களது ஆசைகள், விருப்பங்களை கூறுகின்றனர்.
அலறிய பாண்டியன் குடும்பத்தினர்: கேலக்ஸி போல அமைக்க வேண்டும் என்று மீனா கூறுகிறார். ஒவ்வொருவரும் தங்களது ஆசைகளை கூறியவுடன் நிகழ்ச்சியின் பட்ஜெட்டை ஈவென்ட் மேனேஜ்மென்ட் நபர் தெரிவிக்கிறார். மற்றவர்கள் போல் இல்லாமல் தாங்கள் எப்போதுமே குறைந்த அளவிலேயே வசூலிப்பதாக அவர் கூறுகிறார். தொடர்ந்து எவ்வளவு என்று பாண்டியன் கேட்க 40 லட்சம் ரூபாய் என்று அவர் கூறுவதை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். தொடர்ந்து அந்த நபரை பேசி அனுப்பி வைத்து விட்டு, அனைவரும் வாய் பிளக்க பேசுகின்றனர். தான் முன்பே கூறியதாக மீனா கூறுகிறார்.
குமரனிடம் மல்லுகட்டிய ராஜி: 40 லட்ச ரூபாய் இருந்தால் இதுபோன்று இன்னொரு வீடு கட்டி விடுவேன் என்று பாண்டியன் கூறுகிறார். தொடர்ந்து தங்கமயிலின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதது குறித்து சரவணன் முகம் வாடுகிறது. ஆனால் தன்னுடைய அப்பா சொன்னால் சரியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். இதனிடையே வீட்டு வாசலில் நின்றபடி மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் குமரனை ஆத்திரத்துடன் பார்க்கும் ராஜி, அவர் மீது கல்லெறிகிறார். இதை பார்த்து அங்கு வரும் கதிர் தான் தன் மீது கல்லெறிந்ததாக குமரன் மல்லுக்கு நிற்கிறார். குமரன் கதிரை அடிக்க பாயும் சூழலில் இடையில் புகும் ராஜி, அண்ணன் என்றும் பார்க்காமல் கதிரை வம்புக்கு இழுத்த குமரனை திட்டித் தீர்க்கிறார்.
கடுகு சிறுத்தாலும்: தன் மீது கோபம் இருந்தால் அதை கதிரிடம் எதற்கு காட்ட வேண்டும் என்று மாற்றி மாற்றி தன்னுடைய அண்ணனிடம் கேள்வி எழுப்புகிறார் ராஜி. இதுபோன்ற சில்லறைத்தனமான நடவடிக்கைகள் தன்னுடைய அப்பாவிற்கு பிடிக்காது என்றும் அவரிடம் சொல்லட்டுமா என்றும் எச்சரிக்கிறார். இதனால் குமரன் அங்கிருந்து செல்கிறார். இதை பார்க்கும் கதிர், தங்களது அறையில் இருந்தபடி இது குறித்து நினைத்து நினைத்து சிரிக்கிறார். தொடர்ந்து ராஜி ஏன் என்னை பார்த்து சிரிக்கிறாய் என்று கேள்வி எழுப்புகிறார். ராஜி சண்டை போட்டது குறித்து சுட்டிக்காட்டும் கதிர் எகிறி எகிறி சண்டை போடுகிறாய் என்று கேட்கிறார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று ராஜி அதற்கு பதில் அளிக்கிறார்.
மீனாவை பார்க்க வந்த அம்மா: தொடர்ந்து கதிர், ராஜி சண்டை போட்டதை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறார். அவர் சிரிப்பதை பார்த்து முறைக்கும் ராஜி ஒரு கட்டத்தில் தானும் சிரித்துக் கொண்டே தூங்க செல்கிறார். மறுநாள் காலையில் மீனாவிற்கு தலையில் எண்ணெய் வைத்து விடுகிறார் கோமதி. தலை மிகவும் வறண்டு காணப்படுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து அங்கு வரும் ராஜியிடம் கை வலிப்பதாக மீனா கூற, அவரது கையைப் பிடித்து விடுகிறார் ராஜி. இந்நிலையில் அங்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறார் மீனாவின் அம்மா. தன்னுடைய மகள் மீனாவிற்கு கோமதி தலையில் எண்ணெய் வைப்பதையும், ராஜி கையமுக்கி விடுவதையும் பார்த்து அவர் நெகிழ்ச்சி அடைகிறார்.
நகைகளுடன் வந்த மீனாவின் அம்மா: தன்னுடைய அம்மா வந்ததை பார்க்கும் மீனா ஓடி சென்று கட்டிக் கொள்கிறார். உள்ளே வருமாறு அனைவரும் கூப்பிடுகின்றனர். ஆனால் அதை மறுக்கும் அவர் மீனாவிடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திறந்து பார்க்கிறார் மீனா. அதில் அதிகமான அளவில் நகைகள் காணப்படுவதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. மீனா காதல் திருமணம் செய்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்த நிலையில், தற்போது மீனாவின் அம்மா, நகைகளுடன் அவரை பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











