Pandian stores 2 serial: என் மகளை ரோட்ல நிக்க வச்சிட்டீங்களே.. சரவணனை கோபப்படுத்திய பாக்கியம்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சிறப்பாக அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து செந்தில் -மீனா மற்றும் கதிர் -ராஜி பேசிக் கொள்வது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே ஹனிமூன் சென்ற சரவணன் -தங்கமயில் தாங்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு செல்கின்றனர்.

அந்த ஹோட்டலில் தங்குவதற்கு மேலும் 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற உண்மை சரவணனுக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். தவறாக புக் செய்த தங்கமயில், தான் செய்த தவறை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து மௌனமாக இருக்கிறார். தனக்கு எதுவுமே தெரியாது என்று அவர் கூறுவதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. தன்னுடைய மாமனாரிடம் சென்று ஆவேசமாக பேசிவிட்டு வருகிறார் செந்தில். மீனா போன்ற ஒரு பெண்ணை பெற்றெடுக்க அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் தான் அவரை விட மிகப்பெரிய ஆபீஸராக கவர்ன்மெண்டில் வேலைக்கு சென்றுக் காட்டுவேன் என்றும் செந்தில் ஆவேசமாக பேசிய நிலையில் அதை வீடியோ எடுத்த கதிர் மீனாவிடம் காட்டுகிறார். இதைப்பார்க்கும் மீனா நெகிழ்ச்சிக்குள்ளாகிறார்.

கண்கலங்கிய மீனா: கல்யாணம் செய்துகொண்ட பெண் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய விஷயத்தை யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் இதைவிட ஒரு சிறந்த மாப்பிள்ளை தன்னுடைய அப்பாவிற்கு அமையாது என்றும் கூறி கண்கலங்குகிறார் மீனா. இதை பார்க்கும் செந்திலும் எமோஷனலாகிறார். இதனிடையே, ராஜிக்கு காசு தேவையென்றால் தன்னிடம் கேட்குமாறும் தன்னுடைய அப்பாவிடம் கேட்க வேண்டாம் என்றும் கதிர் கூறுகிறார். தனக்கு ஏதாவது தேவையென்றால் தானே வாங்கிக் கொள்வேன் என்று ராஜி கூறுகிறார். தொடர்ந்து சமாளிக்கிறார். தான் ஹோம் டியூஷன் செல்வதை அவர் இன்னும் கதிரிடம் கூறாமல் இருக்கிறார்.

அதிர்ச்சியில் சரவணன்: இந்நிலையில் ஹனிமூன் ட்ரிப்பிற்காக சென்னை சென்ற சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் அவர்கள் புக் செய்திருந்த ஹோட்டலிற்கு செல்கின்றனர். அங்கு அனைத்து ஃபார்மாலிட்டியையும் செய்து முடித்தவுடன் மீதமுள்ள 21 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டுமாறு ரிசப்ஷனில் கூறுகின்றனர். இதைகேட்டு சரவணன் அதிர்ச்சியடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தன்னுடைய அப்பாவிடம் இந்த உண்மையை கூறாமல் மறைக்கும் சரவணன், சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கிறார். இந்த விஷயத்தில் தனக்கு எதுவுமே தெரியாது என்று தொடர்ந்து தங்கமயில் சாதிக்கிறார்.

கடுப்பான சரவணன்: தெரியாமல் செய்துவிட்டதாகவும் கூறுகிறார். அட்வான்ஸ் தொகையையும் திரும்பி பெற முடியாமல் சரவணன் திகைக்கும் சூழலில், தங்கமயிலிடம் பேசும் அவரது அம்மா பாக்கியம், அந்த சூழ்நிலையை கேட்டுத் தெரிந்துக் கொண்டு சரவணனிடம் பேசுகிறார். தன்னுடைய மகளுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் அவள் தெரியாமல் அந்த ஹோட்டல் அறையை புக் செய்து விட்டதாகவும் கூறுகிறார். பாண்டியன் வீட்டில் விவரம் தெரிந்தவர்கள் உள்ளநிலையில் இதை எப்படி பார்க்காமல் விட்டு விட்டீர்கள் என்னுடைய மகளை இப்படி ரோட்டில் நிற்க வைத்து விட்டீர்களே என்பதாக பாக்கியம் தொடர்ந்து சரவணனை குற்றம் சாட்டுகிறார். இதனால் சரவணன் பயங்கர கடுப்புடன் அவரது போனை கட் செய்வதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X