Pandian stores 2: உளறிய கோமதி.. யாருக்கு தெரிய கூடாதுன்னு நினைச்சாங்களோ.. முழிக்கும் ராஜி -மீனா!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் மீண்டும் டியூஷன் விவகாரமே தலை தூக்கியுள்ளது. முன்னதாக வீட்டில் வைத்து ராஜி டியூஷன் எடுப்பதற்கு தங்கமயிலின் பேச்சை கேட்டுக் கொண்டு முட்டுக்கட்டை போட்ட பாண்டியன், இதையடுத்து ராஜியை மிக அதிகமாக திட்டி தீர்த்ததை பார்க்க முடிந்தது. இந்த விஷயத்தில் கதிரும் திட்டு வாங்குவதாக காணப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் தானே டியூஷன் எடுக்கக்கூடாது, ஹோம் டியூஷன் எடுக்கலாமே என்று மீனா கூற, உடனடியாக ஓகே சொல்லும் ராஜி இதுகுறித்து உரியவர்களை சென்று சந்திக்கின்றனர். இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் மாமாவிடம் இந்த விஷயத்தை கூறும் வகையில் தங்கமயில் காதுக்கு இந்த விஷயம் சென்று விடக்கூடாது என்று ராஜியும் மீனாவும் மிகுந்த உறுதியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மீண்டும் டியூஷன் விவகாரத்தை கையில் எடுப்பதாக காணப்பட்டது. எப்படியாவது வீட்டு செலவில் கதிருக்கு துணையாக நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராஜி. இதனிடையே மீனாவின் அலுவலக தோழி வீட்டில் அவர்களது குழந்தைகளுக்கு ஹோம் டியூஷன் எடுப்பதற்காக ராஜியிடம் மீனா கூறிய நிலையில், இருவரும் அவர்களை அந்த வீட்டிற்கு நேரில் சென்று பார்த்து விட்டு வருவதற்காக கிளம்புகின்றனர். கோமதியிடம் சொல்லிவிட்டு போகலாம் என்றால் அவர் தங்கமயிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ராஜி -மீனா உறுதி: மாமாவிற்கு தெரிவதற்கு முன்னால் இந்த விஷயம் தங்கமயிலுக்கு தெரியக்கூடாது என்பதில் இந்த முறை ராஜியும் மீனாவும் மிகவும் கவனமாக செயல்படுகின்றனர், அதனால் கோமதியிடம் கூட கூறாமல் ஹோம் டியூஷன் எடுக்க வேண்டிய வீட்டிற்கு அட்ரஸை மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடித்து மீனாவும் ராஜியும் சென்று பேசுகின்றனர். கோமதியிடம் இது குறித்து கூறி மாமாவிடம் பக்குவமாக பேச வைக்க வேண்டும் என்று இருவரும் திட்டமிடுகின்றனர். வீட்டிற்கு வந்து தங்கமயில் இல்லாத நேரமாக பார்த்து இதை கோமதியிடம் அவர்கள் கூறுகின்றனர். இதை கேட்டு கோமதி அதிர்ச்சியடைகிறார்.
மழுப்பும் ராஜி -மீனா: தொடர்ந்து இந்த விஷயம் குறித்து மாமாவிடம் நீங்கள்தான் பேச வேண்டும் என்று கோமதியிடம் அவர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் கோமதிதான் ராஜிக்கு உதவ வேண்டும் என்றும் கேட்கின்றனர். இந்த விஷயத்தில் தான் உதவ முடியாது என்று கூறும் கோமதி, கடந்த முறை பாண்டியன் அடைந்த ஆத்திரத்தை சுட்டிக் காட்டுகிறார். இந்நிலையில் அங்கு வரும் தங்கமயில், அத்தையிடம் என்ன உதவி கேட்கிறீர்கள் சொன்னால் நான் எந்த உதவியாக இருந்தாலும் செய்கிறேன் என்று கூறுகிறார். தங்க மயிலுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது என்பதாக பலவாறு கூறி ராஜி, கோமதி மற்றும் மீனா மழுப்புகின்றனர்.
உளறிய கோமதி: இதையடுத்து தன்னை இந்த வீட்டில் இருந்து அனைவரும் ஒதுக்கி வைப்பதாக கூறி தங்கமயில் தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார். அவர் வருத்தமடைவதை பார்க்கும் கோமதி, யாருக்கு தெரியக்கூடாது என்று நினைத்தார்களோ அந்த டியூஷன் விஷயத்தை தங்கமயிலிடம் கூறி விடுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியடையும் தங்கமயில், மாமா அவ்வளவு தூரம் சொல்லியும் மீண்டும் ராஜி டியூஷன் எடுக்க முயற்சிப்பதை எடுத்துக் கூறுகிறார். இதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுமோ என்று முன்னதாகவே கூறுகிறார். இந்நிலையில் ராஜி மற்றும் மீனா கோமதியை பார்த்து முறைக்கின்றனர்.
கோமதி சமாதானம்: தங்கமயில் அன்பு, பாசம் என்று கூறியதால் வேறு வழியில்லாமல் தான் உண்மையை சொல்லிவிட்டதாகவும் வீட்டிற்கு மாமா வந்தவுடனேயே ராஜியின் டியூஷன் விவகாரத்தை, தங்கமயில் எதுவும் பேசுவதற்கு முன்னதாக உடனடியாக தானே கூறி விடுவதாகவும் கூறி கோமதி அவர்களை சமாதானம் செய்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











