லவ் மேரேஜ் -அரேஞ்ச்ட் மேரேஜ் வித்தியாசம்.. தங்கமயிலை வைத்து மீண்டும் கடுப்புகளை கிளப்பிய பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் தங்கமயிலின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது. காலையில் உணவு எடுத்துக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு சென்ற சரவணனுக்கு கடைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்று கொடுக்க தயாராகிறார் தங்கமயில்.
ஆனால் கோமதியோ சரவணன் பசித்தால் அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வான் அல்லது வீட்டுக்கு வருவான் என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனால் அங்கு வரும் பாண்டியன், தங்கமயிலின் இந்த செயலுக்கு ஓகே சொல்வதுடன் ஆட்டோவும் புக் செய்து தருவதாக காணப்பட்டது. இதனால் மீனா மற்றும் ராஜி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினமும் சிறப்பான காட்சிகள் அமைந்திருந்தன. இன்றைய தினம் ராஜி பார்ட் டைம் வேலை செய்வதற்காக தன்னுடைய மாமியார் மற்றும் மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் தங்கமயில், ராஜியிடம் டியூஷன் எடுக்கலாம், சோப்பு தயாரிக்கலாம் என பலவாறாக ஐடியா கொடுக்கிறார். இதில் டியூஷன் ஐடியா ராஜி, மீனா இருவருக்கும் பிடித்து போகிறது. மேலும் கோமதியும் அதற்கு ஒப்புதல் அளிக்கிறார், ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட தப்பித்தால் போதும் என்று தங்கமயில் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.
தங்கமயில் கிரேட் எஸ்கேப்: ஒருவராக டியூஷன் எடுத்தால் பத்து பேருக்கு மட்டும் தான் எடுக்க முடியும் என்றும் கூட ஒரு ஆளை சேர்த்துக் கொண்டால் 20 பேருக்கு கூட எடுக்கலாம் என்றும் ராஜி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. யாரை மற்றொரு ஆளாக சேர்க்கப் போகிறாய் என்று தங்கமயில் கேட்க, வேறு யார் நீங்கள் தான் என்று ராஜி கூறுகிறார். உடனே மீனாவும் ஆமாம் நீங்கள் எம்ஏ அதுவும் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து உள்ளீர்கள் அதனால் நீங்கள் சரியான சாய்ஸ் என்று கூறுகிறார். இதனால் தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிடும் என்று பயப்படும் தங்கமயில் உடனடியாக அங்கிருந்து பலவற்றை பேசிவிட்டு நழுவுகிறார்.
சரவணனுக்கு சாப்பாடு: இந்நிலையில் சரவணன் காலையில் சாப்பாடு கொண்டு செல்லாததால் அவரது கடைக்கு சென்று சாப்பாடு எடுத்து செல்ல தயாராகிறார் தங்கமயில். கூடவே கறி குழம்பு உள்ளிட்டவற்றையும் செய்து கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். கோமதி, மீனா மற்றும் ராஜி மூவரும் இதற்கு என்ன அவசியம் என்று கேட்கின்றனர். ஆனால் வேலை செய்யும் ஆண்களுக்கு நாம் தான் தேவையான உணவை கொடுக்க வேண்டும் என்று தங்கமயில் கூறுகிறார். தொடர்ந்து கோமதி மறுக்க, அங்கு வரும் பாண்டியனோ உடனடியாக ஓகே சொல்வதுடன் ஆட்டோவும் புக் செய்து கொடுப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.
கடுப்பை கிளப்பிய பாண்டியன்: இதை பார்த்து மீனா மற்றும் ராஜி இருவரும் ஆச்சரியம் அடைகின்றனர். கோமதி அதிர்ச்சி அடைகிறார். தொடர்ந்து மீனா மற்றும் ராஜியை பாண்டியன் கடுப்பாக்குகிறார். அவர்கள் தங்களது கணவர்களுக்கு இதுபோல சாப்பாடு கொடுக்க என்றாவது நினைத்துள்ளார்களா என்று அவர் கேட்கிறார். இதுதான் லவ் மேரேஜ் மற்றும் அரேஞ்ச்ட் மேரேஜிற்கு இடையிலான வித்தியாசம் என்று அவர் கூறுகிறார். இதனிடையே சரவணன் கடைக்கு சாப்பாடு கொண்டு செல்கிறார் தங்கமயில். இதை பார்த்து மிகவும் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைகிறார் சரவணன்.
தெரியவருமா தங்கமயில் தகிடுதத்தம்?: தன்னுடைய கணவனை கைக்குள் போட்டுக் கொள்ளும் வித்தையை தன்னுடைய அம்மாவிடம் இருந்து கற்று வருகிறார் தங்கமயில். அதற்கு ஏற்ப தன்னுடைய ஒவ்வொரு அஸ்திரமாக செயல்படுத்தி வீட்டில் தன்னுடைய கணவன் சரவணன் மற்றும் மாமனார் பாண்டியன் இருவரையும் வெகுவாக இம்ப்ரஸ் செய்துள்ளார். அவர் பல தகிடுதத்தங்களை செய்துதான் இந்த திருமணத்தை முடித்துக் கொண்டு பாண்டியன் வீட்டிற்குள் வந்துள்ளார். அது ஒவ்வொன்றாக தெரிய வந்தால் அடுத்ததாக பாண்டியன் குடும்பத்தினரின் மனநிலை எப்படி இருக்கும் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











