Pandian stores 2: இந்த கல்யாணமும அம்பேல்தானா.. சரவணன் திருமணத்தில் மீண்டும் விளையாடும் சக்திவேல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிர் இருவரும் வேவ்வேறு சூழல்களில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் திருமணம் செய்து வருவதால் வீட்டில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் செந்திலின் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டியன். ஆனால் தன்னுடைய பகையாளிகளாக இருக்கும் கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்திலிருந்து ராஜியை கதிர் திருமணம் செய்து வந்ததையும் அதனால் திருட்டுப்பழி விழுந்ததையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால் தன்னுடைய மகன் கதிரை அவர் வெறுக்கிறார். ராஜியை ஏமாற்றி திருமண வீட்டிலிருந்து அவரை, நகை பணத்துடன் அழைத்து சென்ற கண்ணன், ராஜியை நடுத்தெருவில் விட்டுவிட்டு பணம் நகையுடன் எஸ்கேப் ஆன நிலையில், அதை கதிர்தான் எடுத்துதாக முத்துவேல் குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் இருவரும் பாண்டியன் குடும்பத்தினரை தொடர்ந்து பழிவாங்கி வருகின்றனர். கதிர், செந்தில் திருமணத்தால் சரவணனின் திருமணம் தொடர்ந்து கேள்விக் குறியாகி வருகிறது. அவரது திருமணத்தை சக்திவேல் மற்றும் குமரன் தொடர்ந்து குலைத்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பட்டையை கிளப்பி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரின் முதல் சீசனில் ஸ்டாலின், வெங்கட், ஹேமா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 5 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டது. தொடர்ந்து இந்த சீரியல் நிறைவு செய்யப்பட்டு உடனடியாக இரண்டாவது சீசனையும் சீரியல் தரப்பினர் துவக்கினர். இந்த சீசனில் அப்பா -மகன்களின் பாசத்தை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் குடும்பத்தினர்: இந்த சீரியலும் முதல் சீசனை போலவே அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் அப்பாவாக ஸ்டாலின் நடித்து வருகிறார். அவரது மனைவியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். கடந்த சீசனில் நடித்திருந்த ஹேமா இந்த சீசனிலும் மீனாவாகவே நடித்து வருகிறார். முதல் சீசனை போலவே தன்னுடைய சிறப்பான நடிப்பால் இந்த சீசனையும் களைகட்டி வருகிறார். தன்னுடைய குடும்பத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன். மூன்று மகன்கள், இரு மகள்கள், மனைவி கோமதியுடன் வாழ்ந்து வருகிறார். இலவச இணைப்பாக மச்சான் பழனிவேலும் இவர்கள் குடும்பத்துடனேயே இருக்கிறார்.
அடுத்தடுத்த திருமணங்கள்: அடுத்தடுத்து வெவ்வேறு சூழ்நிலைகளில் செந்தில் மற்றும் கதிர் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தங்களது திருமணத்தை முடித்து வருகின்றனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகும் பாண்டியன், செந்தில் -மீனா திருமணத்தை ஏற்கிறார். ஆனால் தான் பகையாளியாக கருதும் முத்துவேலின் மகள் ராஜியை கதிர் திருமணம் செய்துவந்தது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. கூடவே திருட்டுப் பட்டத்தை தான் சுமப்பதுடன் தனக்கும் அதில் சம்பந்தம் உள்ளதாக கெட்டப் பெயரை கதிர் ஏற்படுத்தியுள்ளது அவருக்கு மிகப்பெரிய மனச்சுமையை கொடுக்கிறது. கதிரை வெறுத்து ஒதுக்குகிறார். ஆனாலும் அவரது பாசம் அதை தொடர முடியாமல் செய்கிறது.
பாதிப்பில் சரவணன் திருமணம்: இவர்கள் இருவரின் திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் பாதிக்கப்படுவதையும் பாண்டியனால் ஏற்க முடியவில்லை. நாலாபுறமும் சரவணனுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் அவரது திருமணத்தை ராஜியின் சித்தப்பா மற்றும் அவரது மகன் குமரன் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். தற்போது மீனா சார்பில் ஒரு வரன் வருகிறது. பெண்ணை பார்த்து நிச்சயம் செய்யும் சூழலில், இதுகுறித்து அறிந்த சக்திவேல் அந்த திருமணத்தை குலைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. முன்னதாக தான் காதலித்த பெண்ணை தன்னுடைய அப்பாவிற்காக விட்டுக் கொடுத்த சரவணனின் வாழ்க்கை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











