Pandian stores 2: எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு.. குடும்பத்தினர் முன்னிலையில் பேசிய தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. சரவணனின் திருமணம் தங்கமயிலுடன் நிச்சயிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் வீட்டினர் அனைவருக்கும் நான் -வெஜ் விருந்து கொடுத்து தடபுடல் செய்கிறார் பாண்டியன். இந்நிலையில் தங்கமயில் அம்மா, சரவணனுக்கு கால் செய்து தன்னுடைய மகளை பேச வைக்கிறார்.

இருவரும் தட்டு தடுமாறி பேசுகின்றனர். அப்போது தன்னுடைய அம்மா சொன்னதை தொடர்ந்து சரவணனை தான் மாமா என்று கூப்பிடலாமா என்று கேட்கிறார் தங்கமயில். தன்னுடைய குடும்பத்தினர் எதிரில் லவுட் ஸ்பீக்கரில் பேசும் சரவணன். இதனால் டென்ஷனாவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து சரவணனை அவரது தம்பிகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ஓட்டுவதாக காணப்பட்டது.

Vijay TV s Pandian stores 2 serial today 9th April 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. தங்கமயிலை அவர்கள் வீட்டில் சென்று குடும்பத்தினருடன் பெண் பார்க்கும் பாண்டியன், தொடர்ந்து நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கான தேதியையையும் நிச்சயித்துவிட்டு வருகிறார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் இரவு விருந்து ஹோட்டலில் இருந்து வாங்கி வரப்பட்டு தடபுடலாக நடக்கிறது. எப்போதுமே ஒவ்வொரு பைசாவையும் யோசித்து செலவு செய்யும் பாண்டியன், தற்போது தன்னுடைய மூத்த மகன் சரவணனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தொடரும் மீனாவின் சந்தேகம்: தங்கமயில் குடும்பத்தினர் குறித்து மீனா சில சந்தேகங்களை எழுப்பினாலும் நிச்சயமே செய்து விட்ட பிறகு அவர்கள் மீது சந்தேகப்படுவது நியாயம் இல்லை என்று பாண்டியன் கூறியதையும் பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு அவர் தங்கமயில் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக காணப்படுகிறார். அவரது நம்பிக்கை ஒரு கட்டத்தில் தகரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சரவணன் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சரவணனுக்கு பாக்கியம் கால் செய்து தங்கமயிலுடன் பேச வைக்கிறார்.

சரவணன் -தங்கமயில் பேச்சு: சரவணனுடன் பேசும் தங்கமயில் சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டுவிட்டு தன்னுடைய அம்மா கேட்கும் சூழலில் நான் சரவணனை மாமா என்று கூப்பிடலாமா என்று கேட்டு அவரை டென்ஷன் ஆக்குகிறார். மேலும் சரவணனுக்கு தன்னை பிடித்திருக்கிறதா என்று கேட்டு தெரிந்துக் கொள்ளும் தங்கமயில், தனக்கும் சரவணனை பிடித்திருப்பதாக கூறுகிறார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் அனைவரும் ஓட்டுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இவ்வாறு உற்சாக மனநிலையில் சரவணன் மற்றும் குடும்பத்தினர் காணப்படுகின்றனர். இதனிடையே இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் தானும் அரேஞ்சிடு திருமணம் செய்திருப்பேன் என்று செந்தில் கூற, அவரைப் பார்த்து மீனா முறைக்கிறார்.

பாண்டியனின் பேச்சு.. முகம் மாறும் செந்தில் -மீனா: அப்போது வீட்டில் நிச்சயிக்கும் திருமணம் செய்கிறேன் என்று கூறினேனே தவிர வேறு பெண் என்று கூறவில்லையே என்று அவர் எஸ்கேப் ஆகிறார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னை மீனா ஒரு முறையாவது மாமா என்று கூப்பிட்டாரா என்று செந்தில் கேட்க, அதற்கு பாண்டியன் இயல்பாக வீட்டில் பெண் பார்த்து வைத்திருந்தால் இந்த ஆசையெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்று கூறுகிறார். ஆனால் இதை கேட்கும் செந்தில் மற்றும் மீனாவின் முகம் மாறுவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து கோமதியும் தன்னுடைய கணவன் பேசியதை பார்த்து முகம் மாறுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து சரவணன் -தங்கமயில் குடும்பத்தில் நிகழும் கலாட்டாக்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X