Pandian stores 2 serial: நடுத்தெருவில் தங்கமயிலுடன் சரவணன்.. பணத்திற்காக அலையும் தம்பிகள்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் ஹோட்டலில் மேலும் 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய சூழலில் உள்ளே செல்ல முடியாமல் தங்கமயிலுடன் சரவணன் ஹோட்டல் வாசலிலேயே காத்திருப்பதாக காணப்படுகிறது. தன்னுடைய தம்பிகளிடம் கால் செய்து அவர் நிலைமையை எடுத்துக் கூற, ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் எல்லாம் பணத்தை ஏற்பாடு செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

தன்னுடைய தம்பிகள் இல்லாமல் அரைமனதாக ஹனிமூன் சென்ற சரவணன், அதையும் என்ஜாய் செய்ய முடியாமல் ஹோட்டல் வாசலில் காத்திருக்கும் சூழல் அவருடைய மனைவி தங்கமயிலால் ஏற்படுகிறது. மேலும் தங்கமயில் மற்றும் அவரது குடும்பத்தினரால் அவர் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க போகிறாரோ என்று தற்போதே ரசிகர்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலுடன் சென்னைக்கு ஹனிமூன் சென்ற சரவணன், தற்போது ஹோட்டலுக்கு உள்ளேயும் செல்ல முடியாமல் வெளியேவும் செல்ல வழி இல்லாமல் ஹோட்டல் வாசலிலேயே காத்திருப்பதாக காணப்படுகிறது. விலை அதிகமான ஹோட்டலில் ஆன்லைன் மூலம் புக் செய்கிறார் தங்கமயில். பின்னர் விஷயம் தெரிந்தும் தன்னுடைய அம்மாவின் ஆலோசனைப்படி அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இந்நிலையில் சென்னைக்கு தங்கமயிலுடன் சென்ற சரவணனுக்கு மேலும் 21,000 ரூபாய் கட்ட வேண்டும் என்பது தெரிய வருகிறது. இதனால் அவர் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.

சரவணன்மீது பழிபோட்ட பாக்கியம்: அவருடைய அப்பா பாண்டியன் செலவிற்காக ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் வேறு ஹோட்டலில் ரூம் பார்க்கலாம் என்றாலும் அதுவும் அந்த காசுக்கு கட்டுபடியாகாத சூழல் தெரிய வருகிறது. இதனிடையே தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து நிலைமையை கூறுகிறார். அவர்கள் செய்த தகிடுதத்தத்தை மறைக்கும் வகையில் பழியை சரவணன் மீது தூக்கிப் போடுகிறார் பாக்கியம். தன்னுடைய மகளை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டீர்களே என்று தன்னுடைய மருமகனை அவர் குற்றம் சாட்டுவதாக காணப்படுகிறது. இதனிடையே தங்கமயிலின் அப்பாவும் தான் வேண்டுமானால் 50,000 பணம் அனுப்பட்டுமா என்று சரவணனிடம் கேட்கிறார்.

Television Pandian stores 2 serial Vijay TV

தம்பிகளுக்கு கால் செய்த சரவணன்: ஆனால் அவர்கள் தன்மானம் பார்ப்பவர்கள் என்றும் பணம் வாங்க மாட்டார்கள் என்றும் தெரிந்துதான் அப்படி கூறியதாக பாக்கியத்திடம் அவர் கூறுகிறார். அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சரவணனும் அவரது பணத்தை மறுக்கிறார். தொடர்ந்து தன்னுடைய சித்தப்பா பழனிவேல் மற்றும் தம்பிகளுக்கும் சரவணன் அடுத்தடுத்து கால் செய்கிறார். கதிர் சரவணனின் காலை எடுத்துப் பேசும் நிலையில், நிலைமையை தான் தெருவில் நிற்கும் சூழலை எடுத்துக் கூறுகிறார் சரவணன். இதனால் கதிரும் மிகவும் வருத்தப்படுகிறார். தொடர்ந்து தான் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்புவதாக கூறுகிறார்.

பணத்திற்காக அலையும் கதிர்: வீட்டுக்கு வந்து பார்க்கும் கதிர், தன்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் இருக்கும் நிலையில் தன்னுடைய நண்பனிடம் கேட்டு மேலும் 5000 ரூபாயை பெறுகிறார். இதனிடையே இந்த விஷயம் தெரியவரும் செந்தில் மற்றும் பழனிவேல் இருவரும் என்ன செய்வது என்று சேர்ந்து ஆலோசனை மேற்கொள்கின்றனர். செந்தில் சரவணனுக்கு கால் செய்து எப்படியாவது இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்புவதாகவும் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக வீட்டிலும் கதிர் எப்படி எல்லாம் பணத்தை புரட்டலாம் என்று யோசிப்பதாகவும் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X