Pandian stores 2 serial: பற்ற வைத்த பரட்டை.. சரவணன் திருமணத்தில் கலகம் செய்த சக்திவேல்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் எபிசோட்களை கொடுத்து வருகிறது. கதிர் மற்றும் செந்திலின் அடுத்தடுத்த திருமணங்களால் தற்போது மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு பாண்டியன், கோமதி உள்ளிட்டவர்கள் உள்ளாகின்றனர். மீனா மூலமாக ஒரு வரனை பிக்ஸ் செய்ய குடும்பத்தினர் அனைவரும் சென்ற நிலையில் திருமணமும் முடிவாகும் சூழலுக்கு வருகிறது. அந்த நேரத்தில் பெண்ணின் அப்பாவிற்கு கால் செய்யும் ராஜியின் சித்தப்பா சக்திவேல், சரவணன் குறித்து அவதூறாக பேசுகிறார். இதனால் சரவணனின் திருமணம் தடைபடுகிறது.

இதனால் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த ராஜியிடம் செந்தில் அதிகமான கோபத்தை காட்டுகிறார். தன்னுடைய அண்ணன் தன்னுடைய ஃபீலிங்சை காட்டாததால் அனைவரும் அவரை வைத்து செய்வதாகவும் அவர் வருத்தத்துடன் தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். திருமணம் நின்றதற்கான காரணம் தெரியாமல் மீனா மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகிறார். இதனிடையே தன்னுடைய அண்ணன் மகள் ராஜியை கதிருக்கு திருமணம் செய்து வைத்ததால் தான் சரவணன் திருமணம் தடைபடுவதாக கோமதி புலம்பி தள்ளுகிறார். தன்னுடைய மகனின் திருமணம் நின்றதால் பாண்டியனும் மிகவும் தளர்ந்து போகிறார். காரை விட்டு இறங்கி நடந்தே கடைக்கு செல்வதாக கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கவலைக்கு உள்ளாகின்றனர்.

Vijay TV s Pandian stores 2 serial today 9th March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் சீரியல்களில் தொடர்ந்து முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். தற்போது சேனலின் 3வது சீரியலாக முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் இந்த சீரியலை குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்டவற்றை சேர்த்து இயக்குனர் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலுடன் சங்கமம் எபிசோடுகளை கொடுத்து வந்த இந்த சீரியல், அதிகமான கவனத்தை பெற்றது. கதிர் மற்றும் ராஜி திருமணத்தால் பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சரவணனின் திருமணம்: தற்போது சீரியலின் முக்கியமான பிரச்சினையாக சரவணனின் திருமணம் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிர் இருவரும் திருமணம் செய்த நிலையில் மூத்த அண்ணன் இருக்கும்போது இவர்களின் திருமணம் நடந்தது அவரது திருமணத்திற்கு பிரச்சனையாக உள்ளது. சரவணனின் திருமணத்தை முடிக்க பாண்டியன் மிகவும் மும்முரம் காட்டி வருகிறார். ஆனால் தன்னுடைய அண்ணன் மகளை திருமணத்தின்போது இழுத்துச் சென்று அதன் மூலம் தன்னுடைய வீட்டை ஊரார் முன்னிலையில் அவமானப்படுத்திய கதிர் மற்றும் அவரது அப்பா பாண்டியனை பழிவாங்கும் நோக்கில் சக்திவேல் சரவணனின் திருமணத்தை அடுத்தடுத்து நிறுத்துகிறார்.

பற்ற வைத்த சக்திவேல்: தற்போது தன்னுடைய அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பெண்மணியின் மகளை சரவணனுக்கு பேசி முடிக்கிறார் மீனா. பாண்டியன், கோமதி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சக்திவேல் பெண்ணின் அப்பாவிடம் சரவணனுக்கு உடலளவில் பிரச்சினை இருப்பதாக கூறி இந்த திருமணத்தை நிறுத்துகிறார். திருமணம் வரையில் சென்ற பேச்சு திடீரென முத்துவேலால் நிறுத்தப்படுகிறது. இது குறித்து உண்மை தெரியாமல் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலில் சிக்குகின்றனர்.

மீனாவிடம் கோபப்படும் செந்தில்: தன்னுடைய அண்ணனின் இந்த திருமணமும் நின்ற நிலையில் இதற்கு காரணம் மீனாதான் என்று செந்தில் கோபப்படுகிறார். ஆனால் சரவணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மீனா, இதனால் சங்கடத்திற்கும் தன்னுடைய கணவனின் கோபத்திற்கும் உள்ளாகிறார். இதனிடையே தன்னால்தான் தன்னுடைய அண்ணன் சரவணனின் திருமணம் தடைபடுகிறது என்று நினைக்கும் கதிர், சரவணன் வேலை செய்யும் இடத்திற்கே சென்று சந்திக்கிறார். எதை எதையோ பேசுகிறார். சரவணனை பாராட்டி பேசுகிறார். இதனால் அவரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சரவணன், தான் மன உளைச்சலில் இருப்பதால் தன்னை சமாதானப்படுத்த தானே வந்தாய் என்று கதிரிடம் கேட்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

கவலையில் பாண்டியன்: முன்னதாக தன்னுடைய மகனின் இந்த திருமணமும் நின்றதால் கவலையும் மன உளைச்சலும் அடைந்த பாண்டியன், தன்னுடைய கடைக்கு நடந்தே செல்கிறார். அவரின் துவண்ட நடை கோமதி உள்ளிட்ட மற்றவர்களையும் அதிகமாக கவலைக்கு உள்ளாக்குகிறது. முன்னதாக தன்னுடைய அப்பாவிற்காக தான் காதலித்த பெண்ணையே நிராகரித்த சரவணன், இந்த அடுத்தடுத்த பிரச்சினைகளால் மனவருத்தம் கொண்டாலும் குடும்பத்தினரை தொடர்ந்து சமாதானப்படுத்தி தன்னுடைய திருமணம் முக்கியமானது அல்ல என்று புரியவைக்க முயற்சிக்கிறார். இதனிடையே, தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக தன்னுடைய மகன் கதிருக்கு ராஜியை திருமணம் செய்து வைத்ததை நினைத்து கோமதி தற்போது கண்கலங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X