Pandian stores 2: என்னது முகூர்த்தப்புடவை 1 லட்சம் ரூபாயா.. பாண்டியனுக்கு வந்த ஹார்ட் அட்டாக்!
சென்னை: விஜய் டிவியின் சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட், திருமண ஜவுளி எடுப்பதற்காக பாண்டியன் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர் ஜவுளி கடைக்கு செல்வதாக அமைந்துள்ளது. முன்னதாக நிச்சயதார்த்தத்திற்கு தங்கமயில் குடும்பத்தினர் வராத சூழலில் தங்களது பட்ஜெட்டுக்குள் நிச்சயதார்த்த புடவையை எடுத்து தங்கமயிலுக்கு கொடுத்திருந்தனர் பாண்டியன் குடும்பத்தினர்.
இந்நிலையில் தற்போது தங்கமயில் மற்றும் அவரது அம்மா, அப்பா என அனைவரும் ஜவுளி எடுக்க வந்த சூழலில் பாண்டியனின் மொத்த பட்ஜெட்டையும் சேர்த்து தங்க மயிலின் முகூர்த்த புடவைக்கு மட்டுமே செலவழிக்கும் சூழல் பாண்டியனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஒரு நிமிடம் ஹார்ட் அட்டாக்கே வரும் சூழல் ஏற்பட்டதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியலாக நடைபோட்டு வருகிறது. இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய தினம் பெண் வீட்டாரை அழைத்துக் கொண்டு முகூர்த்த புடவை மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஜவுளி எடுக்க பாண்டியன் திட்டமிட்டு அனைவரையும் அழைத்து செல்கிறார். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாகவே யாருக்கெல்லாம் புடவை எடுக்க வேண்டும் வேட்டி எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர் சிறிய அளவில் பட்ஜெட் போடுகிறார். மொத்தமாக ஒரு லட்சம் பட்ஜெட்டுடன் அவர் கடைக்கு குடும்பத்தினரை அழைத்து செல்கின்றார்.
தங்கமயிலின் முகூர்த்தப்புடவை: ஆனால் அங்கே அனைத்து புடவைகளும் மிகவும் விலை அதிகமாக காணப்படுகிறது. முதலில் தங்க மயிலுக்கு முகூர்த்த புடவை எடுப்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் செல்கின்றனர். அங்கே புடவைகள் அனைத்தும் 65 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய்களாக இருப்பதையடுத்து தன்னுடைய பட்ஜெட்டை விட அதிகமாக இருப்பதாக கடைக்காரரிடம் சென்று 25 ஆயிரத்திற்கு எங்கே புடவை இருக்கும் என்று கேட்டு வருகிறார் பாண்டியன். தொடர்ந்து கடைக்காரர் சொன்ன இடத்தை விட்டுவிட்டு ஒரு லட்சம் ரூபாய் புடவைகள் இருக்கும் கவுண்ட்டருக்கு செல்கிறார் பாண்டியன். இதை பார்க்கும் மீனா அவருக்கு ஜாடைமாடையாக விஷயத்தை புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
ஒரு லட்சத்தில் முகூர்த்தப்புடவை: ஆனால் மீனா சொல்ல வந்ததை புரிந்து கொள்ளாத பாண்டியன், சீக்கிரமாக புடவை எடுக்க வலியுறுத்துகிறார். இதையடுத்து தங்கமயிலுக்கு முகூர்த்தப் புடவை எடுக்கப்படுகிறது. தங்கமயில் ஒருவருக்கு மட்டுமே ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு புடவை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து ரிசப்ஷனுக்கு புடவை எடுக்க வேண்டும் என்று தங்கமயிலின் அம்மா கூறுகிறார். அது வேறு அடுத்த கூடுதல் செலவு என்று நினைக்கும் பாண்டியன் தொடர்ந்து மீனாவிடம் பட்ஜெட்டை பார்த்து ரிசப்ஷன் புடவையை எடுக்குமாறு கூறுகிறார். இதையடுத்து மீனா, தொடர்ந்து பட்ஜெட்டை பார்த்து அடுத்த புடவையை செலக்ட் பண்ணுவதாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.
5 சவரனுக்கு தாலி: முன்னதாக மணப்பெண்ணுக்கு 5 சவரனுக்கு தாலி செய்து போட வேண்டும் என்று கோமதி கூறுகிறார். தங்கள் குடும்பங்களில் அவ்வாறு தான் போடுவார்கள் என்றும் அவர் தெரிவிப்பதாக காணப்படுகிறது. இதனிடையே கல்யாண செலவுக்கு 5 லட்சம் ரூபாய் பட்ஜெட் போடுகிறார் பாண்டியன். எப்படி என்றாலும் பத்து லட்சத்திற்கு மேல் செலவு இழுத்து விடும் என்று அவர் பேசிக் கொண்டதாக காணப்படுகிறது. 3 மகன்களுக்கும் அவர் திருமணத்திற்காக காசு சேர்த்து வைத்த சூழலில் செந்தில் மற்றும் கதிர் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்ததால் அந்த காசையும் சேர்த்து சரவணனின் திருமணத்திற்கு செலவழிக்க பாண்டியன் விரும்பினார்.


Click it and Unblock the Notifications











