மருமகள்கள் கொடுத்த சர்பிரைஸ்.. கண்கலங்கிய பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரமோ!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த எபிசோட்களுக்கான ப்ரோமோவும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தன்னுடைய அண்ணன் குமரன், முன்னதாக சரவணன் திருமணத்தில் தன்னையும் மீனாவையும் கடத்தியது குறித்து ராஜி இரு குடும்பத்தினர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார்.
இந்த விஷயத்தை இத்தனை நாட்களாக மீனா மற்றும் ராஜி இருவரும் மறைத்துவந்த நிலையில், ராஜி தற்போது விஷயத்தை வெளிப்படுத்திய நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனிடையே அடுத்ததாக வெளியாகியுள்ள பிரமோவில் பாண்டியனின் 50வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து பல மாதங்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தற்போது சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளை இயக்குனர் இணைத்து வருகிறார். அந்த வகையில் சக்திவேலின் மகன் குமரனை பெண் வீட்டார் வந்து பார்க்கவிருந்த சூழலில், அவர்கள் முன்னதாக பாண்டியனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவரிடம் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் என்ன பேச்சு என்பதாக சக்திவேல் பெண் வீட்டாரை அழைக்க தொடர்ந்து அவர்கள் இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜி போட்டுடைத்த ரகசியம்: இதைதொடர்ந்து சக்திவேல், முன்னதாக தன்னுடைய தங்கையும் அடுத்ததாக தற்போது தன் அண்ணனின் மகள் ராஜியும் வீட்டை விட்டு ஓடியது குறித்தும் கேவலமாக பேசுகிறார். இதை கேட்டு அனைவரும் ஆத்திரப்பட்டாலும் பெண் பார்க்க வந்த இந்த நேரத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று அங்கிருந்து வீட்டிற்குள் செல்ல முயல்கின்றனர். இந்த விஷயத்தில் மிகவும் கோபப்படும் ராஜி, தான் ஒரு விஷயத்தை கூறவிருப்பதாகவும் அனைவரும் அங்கேயே இருக்கும் படியும் இன்றைய எபிசோடில் கூறுவதாக காணப்படுகிறது. தொடர்ந்து சரவணன் திருமணத்தில், தன்னையும் மீனாவையும் குமரன் கடத்தியது குறித்து அவர் அனைவர் முன்னிலையிலும் போட்டுடைக்கிறார். இதனால் இரு குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

குமரனை அடித்த பாண்டியன்: இதனிடையே குமரன் செய்த செயலுக்காக பாண்டியன் அவரை அடிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே அடுத்ததாக இந்த சீரியலின் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. பாண்டியனின் 50வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை மருமகள்கள் மூவரும் இணைந்து செய்த நிலையில், இந்தப் பிரமோவில் அவரை சர்ப்ரைஸ்படுத்தி கேக் வெட்ட வைப்பதாகவும் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி கொள்வதாகவும் காணப்படுகிறது. தொடர்ந்து மருமகள்கள் கொடுக்கும் பரிசையும் வாங்கிக் கொள்ளும் பாண்டியன் கண்கலங்கி தன்னுடைய நெகழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

கண்கலங்கிய பாண்டியன்: இதுவரை தான் பிறந்த நாளை கொண்டாடியதில்லை என்று அவர் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. சிறுவயதிலேயே அநாதையான பாண்டியன், தொடர்ந்து பல வேலைகளை செய்து ஒரு கட்டத்தில் கோமதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 50 ஆண்டுகளும் அவர் ஓய்வில்லாமல் உழைத்து வருவதாக காணப்படுகிறது. தன்னுடைய குடும்பம், மகன்கள், மகள்கள் தற்போது மருமகள்கள் என அவர்கள்மீது அக்கறையுடன் செயல்படுகிறார் பாண்டியன். சிறுவயதிலேயே பணத்திற்காக திண்டாடிய நிலையில் அவர் ஒவ்வொரு காசையும் எண்ணிச் செலவழிப்பது சமயத்தில் அவரது மகன்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இனிவரும் நாட்களில் பாண்டியன் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











