Pandian stores 2: கதிரால் ஏற்பட்ட பிரச்சினை.. சரவணன் திருமணத்தில் சிக்கல் என கோபப்படும் பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து சில தினங்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கப்பட்டு, தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
முதல் சீசனில் அண்ணன் -தம்பிகள் பாசத்தை வெளிப்படுத்திய இந்த தொடர், தற்போது அப்பா -மகன்களின் அன்பை கதைக்களமாக கொண்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 5 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியான இந்த சிரியலில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் மையமாக கொண்டு எபிசோட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தொடர்ந்து டிஆர்பியில் முதல் 3 இடங்களில் இடம்பெற்றுவந்தது இந்த சீரியல்.
எண்ட்கார்ட் போடப்பட்ட முதல் சீசன்: ஆனாலும் 5 ஆண்டுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பப்ட்டு வந்ததால் இந்த சீரியலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு எண்ட் கார்ட் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது ரசிகர்களை கவரும்வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரியலில் பாண்டியனாக ஸ்டாலின் நடித்துவரும் நிலையில் அவரது மனைவி கோமதியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் தன்னுடைய குடும்பத்தை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார் பாண்டியன். இரண்டாவது மகன் செந்தில், மீனா என்பவரை காதலித்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை நினைத்து, அவர்களுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்கிறார் மூன்றாவது மகனான கதிர். இதனால் அதிகமான ஆத்திரம் அடைந்தாலும் செந்திலை நம்பி திருமணம் செய்துக் கொண்ட மீனாவிற்காக இவர்களது திருமணத்தை ஏற்கிறார் பாண்டியன்.
மருமகள் சமைத்ததை ஒதுக்கிவைத்த பாண்டியன்: இருந்தபோதிலும் இந்த திருமணத்திற்கு காரணமான கதிரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதையடுத்து வீட்டிற்குள் நுழையும் மீனா -செந்திலுக்கு அடுத்தடுத்த பிரச்சினைகள் வருகின்றன. ஆனாலும் தன்னுடைய மாமியாரின் மனதை மாற்றும் மீனா, வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட கதிரை வீட்டிற்குள் கொண்டுவருகிறார். மேலும் அவர் சமையல் செய்வதை தொடாமல் பாண்டியன் ஒதுக்கி வைக்கிறார். இதனால் அவரது மனைவி கோமதி மிகுந்த உணர்ச்சிவசப்படுகிறார்.
வாழ்க்கையை துவங்காத செந்தில் -மீனா: இதனிடையே, இவர்களுக்கு தனியாக அறை ஒதுக்கப்படுகிறது. இருந்தபோதிலும் மூத்தவர் சரவணனுக்கு திருமணம் நடக்காமல் இருக்கும்நிலையில் அவர்களுக்குள் எந்தவித உறவும் இருக்கக்கூடாது என்பதை திட்டவட்டமாக கூறுகிறார் பாண்டியன். இதனால் ஆசையுடன் வரும் செந்தில், தன்னுடைய மனைவி மீனாவிடம் இதுகுறித்து நேரடியாக பேசமுடியாமல் தவிக்கிறார். இதனால் அவர்களது வாழ்க்கை தொடங்காமல் கழிவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











