Pandian stores 2 serial: பிறந்த வீட்டை ஏக்கத்துடன் பார்த்த ராஜி.. ஜன்னலில் எட்டிப்பார்த்த முத்துவேல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சேனலின் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் 5 ஆண்டுகளை கடந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது. உடனடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கப்பட்டது. இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. சீரியலின் முதல் சீசனில் நடித்திருந்த ஸ்டாலின் மற்றும் ஹேமா இருவரும் இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த சீரியலில் பிரபல நடிகை நிரோஷா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் ஸ்டாலின் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு மனைவியாக நிரோஷா கோமதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதாக இந்த சீரியலில் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் பாண்டியன். இதனிடையே தன்னுடைய மகன்கள் செந்தில் மற்றும் கதிர் இருவரும் இருவேறு சூழ்நிலைகளில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வந்தது அவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் பாசம் மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாகி உள்ளது. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசன் 5 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் 5 ஆண்டுகளை கடந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. உடனடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கப்பட்டு அடுத்தடுத்து சுவாரசியமான எபிசோடுகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
மூன்னணி சீரியல்: இந்த சீரியல் துவங்கி சில மாதங்களிலேயே சேனலில் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பிக்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் சீசனில் அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டிருந்த இந்த சீரியல் இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையப்படுத்தியுள்ளது. அப்பா பாண்டியனாக முதல் சீசனில் நடித்திருந்த ஸ்டாலின் நடித்து வருகிறார். அவரது மனைவி கோமதியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதாகவும் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கொப்பாக வைத்திருந்த பாண்டியனுக்கு அடுத்தடுத்து தன்னுடைய மகன்களின் திருமணம் எப்படி மன உளைச்சலையும் அவமானத்தையும் கொடுக்கிறது என்பதாகவும் இந்த சீரியலின் கதைகளம் காணப்படுகிறது.
அடுத்தடுத்த திருமணங்கள்: முன்னதாக அவரது இரண்டாவது மகன் செந்தில் தான் விரும்பிய மீனாவை குடும்பத்திற்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து வந்தார். இவர்களை முதலில் இந்த குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாத போதிலும் தொடர்ந்து மீனாவின் நல்ல குணத்தை பார்த்து அவரை தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்கின்றனர். இதனிடையே கோமதியின் அண்ணன் மகள் ராஜி திருமணத்தின் போது வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலனுடன் ஓடி விடுகிறார். பின்னர் அவர் தன்னுடைய காதலனால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் அங்கு அவரை சந்திக்கும் கோமதி அவரது வாழ்க்கைக்காகவும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காகவும் தன்னுடைய மகன் கதிருக்கு அவரை திருமணம் செய்து வைக்கிறார்.
சங்கமம் எபிசோட்கள்: கடந்த சில தினங்களாக நடந்து வந்த சங்கமம் எபிசோடுகளில் கோமதியின் இந்த முடிவிற்கு பாக்கியலட்சுமி சீரியலின் பாக்யா மற்றும் அவரது குடும்பத்தினர் உதவுவதாக காட்டப்பட்டது. இந்நிலையில் வீடு திரும்பிய ராஜி மற்றும் கதிரை அவரது குடும்பத்தினர் அவமானப் படுத்துகின்றனர். ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி வைக்கின்றனர். அதிகமாக கோபப்பட்டாலும் மிகப்பெரிய மனப்போராட்டத்திற்கு இடையில் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கிறார் பாண்டியன். ஆனாலும் அந்த திருமணத்தை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய கடையில் தங்குகிறார்.
மனஉளைச்சலில் பாண்டியன்: அவரை சமாதானப்படுத்துகிறார் மூத்த மகன் சரவணன். எந்த காலத்திலும் தன்னுடைய தந்தையை மீறி தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் உறுதியளிக்கிறார். இதனிடையே எதிர் வீட்டிலேயே இருக்கும் தன்னுடைய அப்பா மற்றும் குடும்பத்தினரை ஏக்கத்துடன் பார்க்கிறார் ராஜி. அவரை சமாதானப்படுத்தும் மீனா, வீட்டு வேலைகளில் அவரை ஈடுபடுத்த முயல்கிறார். வீட்டுக்கு வெளியில் வாசல் தெளித்து கோலம் போட அவரை அழைத்து வருகிறார். அந்த நிலையில் தன்னுடைய சித்தி வீட்டிற்கு வெளியில் வருவதை பார்க்கும் ராஜி அவரிடம் பேச்சு கொடுக்கிறார்.
ராஜியின் ஏக்கம்: ஆனால் அவரோ முகம் கொடுத்தும் பேசாமல் வீட்டுக்குள் சென்று விடுகிறார். இதனால் அழுதபடியே அந்த வீட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார் ராஜி. அப்போது ஜன்னல் வழியாக அவரது அப்பா முத்துவேல் எட்டிப் பார்ப்பதாக காணப்படுகிறது. ராஜி அழுதபடி அப்பாவை பார்க்க, அவரோ அங்கிருந்து நகர்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது தன்னுடைய வாழ்க்கையில் ஏமாந்து தற்கொலைக்கு முயன்ற ராஜிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார் கோமதி. இனி அடுத்தடுத்த எபிசோட்களில் அவரது வாழ்க்கை எந்த வகையில் மாறும் என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications











