Pandian stores 2 serial: என்னது மாப்பிள்ளை -பெண் நேரில் சந்திக்க வேண்டுமா.. அக்கப்போரில் பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. நம் அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயங்களை இந்தத்தொடரில் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சீரியலின் இயக்குநர். 28 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, வீட்டை எதிர்த்து கோமதியை திருமணம் செய்கிறார் பாண்டியன்.இதனால் அவரது அண்ணன்களுடன் பிரச்சினைகளுடன் கழிகிறது வாழ்க்கை. இதனிடையே, கோமதியின் அண்ணன் மகள் ராஜியை கதிர் திருமணம் செய்துக் கொண்டு வருகிறார். இதனால் அவர்களின் பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது.
முன்னதாக செந்திலும் தான் காதலித்த மீனாவை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு வருகிறார். அடுத்தடுத்த இவர்களின் திருமணங்களை ஏற்காவிட்டாலும் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கிறார் பாண்டியன். செந்திலுடன் பேசினாலும் கதிருடன் அவர் பேசாமல் உள்ளார். தன்னுடன் பகைமை பாராட்டும் கோமதியின் அண்ணன் மகள் ராஜியை திருமணம் செய்ததுடன், அவரது பணம் மற்றும் நகையை ஏமாற்றி கதிர் எடுத்துச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பாண்டியனின் கோபத்திற்கு இதுவே காரணமாக அமைகிறது. இதனால் கதிருடன் அவர் பேசாமல் உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த சில மாதங்களாகவே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியல் துவங்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், இயல்பான கதைக்களத்தால் முதல் சீசனை போலவே இந்த சீசனிலும் கலக்கி வருகிறது. அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் உருவாகியுள்ளது. இருந்தபோதிலும் நம் பக்கத்து வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பதை போலவே இந்த சீரியலின் கதைக்களத்தை அமைத்து வருகிறார் இயக்குநர். அப்பா பாண்டியனாக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கோமதியாக நடிகை நிரோஷா இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.
செந்தில், கதிர் திருமணங்கள்: பாண்டியன் மற்றும் கோமதியின் மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் கோமதியின் அண்ணன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை மையமாக வைத்து இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. மூத்தவர் சரவணன் இருக்க செந்தில் மற்றும் கதிரின் திருமணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களையொட்டிய எபிசோட்கள் களைகட்டிய நிலையில், தற்போது சரவணனின் திருமணம் நடக்காதது குறித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பாண்டியன் சபதம்: சரவணனின் திருமணத்தை 50 நாட்களுக்குள் முடிப்பேன் என்றும் அதுவரை காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் போடுகிறார். தொடர்ந்து தன்னுடைய திருமணத்தால் வீட்டில் அடுத்தடுத்த பிரச்சினைகள் ஏற்பட, சந்நியாசி ஆகி வீட்டிற்கு வந்து தந்தையிடம் அடிபடுகிறார் சரவணன். அவரின் அடுத்தடுத்த திருமணங்களை தடுத்து நிறுத்துகிறார் கோமதியின் அண்ணன் சக்திவேல். இந்நிலையில் மேட்ரிமோனி மூலம் சரவணனுக்கு பெண் பார்க்க பதிவு செய்கிறார்கள் கதிர் மற்றும் செந்தில். இதுகுறித்து ஒரு பெண்ணிடம் பேச, அந்தப் பெண், தன்னுடைய திருமணம் குறித்து தானே பேச இது சரிபட்டு வராது என்று கூறுகிறார் பாண்டியன்.
சரவணனுடன் பேச விரும்பும் பெண்: இதனிடையே, அந்தப் பெண் சரவணனை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் பாண்டியன், திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை மற்றும் பெண் நேரில் சந்தித்து பேசுவதா என்று கேட்கிறார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சமாதானப்படுத்துகின்றனர். தானும் மீனாவும் காதலிக்கும்போது தினந்தோறும் சந்தித்து பேசிக் கொண்டதை செந்தில் கூறுகிறார். இதனால் கோபமடைந்தாலும் பாண்டியன் இதற்கு சம்மதிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. பெண் பார்ப்பதற்கே இந்த அக்கப்போரா என்பதே அனைத்து தரப்பினரின் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











