Pandian stores 2: 200 ரூபாய் படுத்திய பாடு.. எமோஷனலாகி அழுத மீனா.. தவிப்பில் செந்தில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் தற்போது சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகை நிரோஷா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடன் முதல் சீசனில் நடித்திருந்த ஸ்டாலின், ஹேமா உள்ளிட்டவர்களும் தற்போது இந்த சீசனில் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக்கிய இந்தத் தொடர், இந்த சீசனில் அப்பா -மகன்களின் உறவை கதைக்களமாக கொண்டுள்ளது.

தன்னுடைய பிள்ளைகள் வளர்ந்த நிலையிலும் தன்னுடைய குடும்பத்தை கட்டுக் கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன். மகன்களின் திருமணம் நடந்தால் தெரியும் சேதி என்று அந்த ஊர் மக்களே கூறும்வகையில் அவர் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருந்த நிலையில், அதற்கான நேரமும் தற்போது வந்துள்ளது. பாண்டியனின் இரண்டாவது மகன் செந்தில் தான் காதலித்த மீனாவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்த நிலையில், இந்த திருமணம் அவர்களது குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மீனாவை அவரது மாமியார் ஏற்றுக் கொண்ட நிலையில், இவர்களது திருமணத்தை ஏற்காமல் அதிரடி காட்டி வருகிறார் பாண்டியன்.

Vijay TVs Pandian stores 2 serial todays (23rd december 2023) episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: சிறப்பான டிஆர்பியுடன் ரசிகர்களை கவர்ந்து வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இருந்த போதிலும் 5 ஆண்டுகளை கடந்து இந்த சீரியல் தன்னுடைய அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வந்ததாலோ என்னவோ இந்த தொடர் எண்ட் கார்ட் போட்டது. இதையடுத்து சில தினங்களிலேயே இந்த தொடரின் அடுத்த சீசன் துவங்கப்பட்டது. எளிமையான குடும்ப உறவுகளை மையமாக கொண்டு தன்னுடைய ஒளிபரப்பை தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கொடுத்து வருகிறது. இந்த சிரியலில் அப்பா -மகன் உறவினை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர்.

செந்தில் -மீனா திருமணம்: இந்த சீரியலில் அப்பாவை மீறி எதையும் செய்யத் துணியாத செந்தில் தான் காதலித்த மீனாவை சூழ்நிலை காரணமாக திருமணம் செய்கிறார். இந்த திருமணத்திற்கு அவரது தம்பி கதிரும் உதவி செய்ய, இந்த திருமணம் குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தன்னுடைய வீட்டில் சுதந்திரமாக இருந்து பழகிய மீனாவிற்கு பாண்டியன் வீட்டில் இத்தகைய அதிகாரங்கள் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும் தான் நினைப்பதை நேரடியாக தன்னுடைய மாமனாரிடமே கூறும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார் மீனா.

சினிமாவிற்கு போன செந்தில் -மீனா: முன்னதாக செந்திலுடன் இணைந்து சினிமாவிற்கு சென்று வருகிறார் மீனா. இதற்கு பாண்டியனே டிக்கெட் வாங்கிக் கொடுக்கிறார். இந்நிலையில் செந்திலுடன் எங்காவது இரண்டு நாட்கள் வெளியூருக்கு குறிப்பாக கொடைக்கானலுக்கு செல்லவும் அவர் விருப்பப்பட்டு அவரது மாமனாரிடம் கேட்பதாகவும் இதையடுத்து அவரது மாமியார் கோமதி அதிர்ச்சி அடைவதாகவும் இன்றைய எபிசோட் காணப்படுகிறது. முன்னதாக அவர்கள் இருவரும் ஹோட்டலுக்கு செல்கின்றனர். இதற்காக தன்னுடைய கடையில் இருந்து கணக்கில் எழுதாமல் பணத்தை எடுத்ததாக தன்னுடைய அப்பாவிடம் கடுமையாக வசை வாங்குகிறார் செந்தில்.

திட்டிய பாண்யன்.. அழுத மீனா: இதை பார்க்கும் மீனா, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். 200 ரூபாய்க்காக தன்னுடைய கணவனை, மாமனார் பாண்டியன் அசிங்கப்படுத்தியதை பொருக்க முடியாமல் அழுகிறார். அந்தக் காசை தன்னுடைய கணவனிடம் கொடுத்து அப்பாவிடம் திரும்ப கொடுக்க சொல்கிறார். ஆனால், செந்தில் தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்துகிறார். எல்லாம் சரியாகிவிடும என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் உள்ளது. இருந்தபோதிலும் தன்னுடைய மனைவியின் அழுகையை செந்திலால் பொறுக்க முடியாமல் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X