Pandian stores 2 serial: மீண்டும் கல்லூரிக்கு சென்ற கதிர்& ராஜி.. அண்ணன்களை வம்பிழுத்த கோமதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இணைந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய தினமும் கலகலப்பான எபிசோடால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ராஜி மற்றும் கதிரின் திருமணத்தை திருச்செந்தூரில் வைத்து நடத்துகிறார் கோமதி. கதிர் மற்றும் ராஜி இருவரும் முன்னதாக தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில் இவர்களின் திருமணத்தை இரு குடும்பத்தினராலும் ஏற்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. குறிப்பாக ராஜியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்று கதிர் செலவழித்து விட்டதாக கூறுவதை வைத்து அவர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.

மேலும் பாண்டியன்தான் தன்னுடைய மகனை இத்தகைய செயலில் ஈடுபட வைத்ததாக அவர்கள் குற்றம் சாட்ட, பாண்டியனால் இதை ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்த கதிர் மற்றும் ராஜி இருவரும் இன்றைய தினம் மீண்டும் தங்களது கல்லூரி வாழ்க்கையை தொடர்வதாக எபிசோடில் காணப்பட்டது. தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் ராஜிதான் என கதிர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக கல்லூரிக்கு புறப்பட்டு செல்கின்றனர். எதிர்வீட்டில் இருந்தபடி ராஜியின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர் இதை பார்ப்பதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது.

 Vijay TVs Pandian stores 2 serial todays (26th february 2024) episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் வீட்டை விட்டு திருமணத்தின் போது வெளியேறி தன்னுடைய காதலன் கண்ணனால் ஏமாற்றப்படுகிறார் ராஜி. அவரை அந்த நிலையிலிருந்து மீட்கும் கோமதி, தன்னுடைய மகனுக்கும் அவளுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். சங்கமம் எபிசோடில் நடந்த இந்த திருமணத்திற்கு பாக்யாவும் மற்றும் அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்தனர். பாக்யாவின் உதவியுடன் ராஜி மற்றும் கதிரை வீட்டிற்கு அழைத்து வர வைக்கிறார் கோமதி.

கதிர் -ராஜி திருமணம்: கோமதியின் அண்ணன்கள் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. இந்த திருமணத்தை ஏற்காவிட்டாலும் பாண்டியன், கதிர் மற்றும் ராஜியை வீட்டிற்குள் அனுமதிக்கிறார். மேலும் கதிர் செலவழித்ததாக கூறும் ராஜியின் நகைகள் மற்றும் பணத்தை திரும்ப கொடுக்கும்படி தன்னுடைய மகன் கதிரிடம் கூறுகிறார். ஆனால் ராஜியின் காதலன் கண்ணன் இந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடியதால் தன்னுடைய அம்மாவை காப்பாற்றும் வகையில் இந்த பழியை தானே ஏற்ற கதிர், அந்த பணம் மற்றும் நகைகள் செலவழித்து விட்டதாக தன்னுடைய அப்பாவிடம் மீண்டும் கூறுகிறார்.

 Vijay TVs Pandian stores 2 serial todays (26th february 2024) episode

மகனை தள்ளிவைத்த பாண்டியன்: மேலும் தன்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்றும் பாண்டியனிடம் கதிர் கோபத்தில் கூறுகிறார். இதனால் அவன் தன்னுடைய மகன் இல்லை என்று பாண்டியனும் ஆத்திரத்திலும் கூறுகிறார். அதற்கு ஏற்ப கதிரிடம் தொடர்ந்து பேசாமல் இருக்கிறார். இந்நிலையில் தான் இனிமேல் கல்லூரிக்கு செல்ல போவதில்லை என்றும் கல்லூரிக்கு சென்றால் தன்னுடைய திருமணம் குறித்து அனைவரும் கேலி பேசுவார்கள் என்றும் கதிர் தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறுகிறார். ஆனால் இன்னும் சில மாதங்களே உள்ள கல்லூரி படிப்பை முடிக்கும் படியும் அப்போதுதான் அவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று அவருடைய தந்தை பாண்டியன் கோபமாக இருந்தாலும் அவரும் மகிழ்ச்சி அடைவார் என்றும் மூத்த அண்ணன் சரவணன் கூறுகிறார்.

கல்லூரிக்கு செல்லும் கதிர் -ராஜி: இதையடுத்து கல்லூரிக்கு செல்ல கதிர் சம்மதிக்கிறார். இதே போல ராஜியும் தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர முடிவெடுக்கிறார். இன்றைய எபிசோடில் இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு கிளம்பிய நிலையில் ராஜியை அழைத்து செல்லும்படி கோமதி கூறுவதாக எபிசோடில் காணப்பட்டது. ஆனால் இது குறித்து தன்னுடைய அம்மாவிடம் கோபப்படுகிறார் கதிர். தொடர்ந்து இருவரும் தனித்தனியாக கல்லூரிக்கு செல்கின்றனர். கல்லூரிக்கு புறப்படும் முன்பு வீட்டு வாசலில் வைத்து ராஜியை தங்களால் கைவிட முடியாது என்று கோமதி தனது அண்ணன்களுக்கு கேட்கும்படி ஜாடை பேசுகிறார். இதைக் கேட்டு ராஜியின் அம்மா, அப்பா மற்றும் பாட்டி மூவரும் வீட்டு வாசலுக்கு வந்து பார்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X