Pandian stores 2 serial: நான் உனக்கு அம்மா இல்லை.. எகிறிய அம்மாவிடம் தவிப்புடன் பேசிய மீனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய பயணத்தை தொடங்கியது. இருந்த போதிலும் குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று வருகிறது. முன்னதாக இந்த தொடரின் முதல் சீசனில் அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு எபிசோட்களை கொடுத்து வந்த இயக்குனர் தற்போது இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவை மையப்படுத்தி அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார்.
தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து வரும் பாண்டியன் வீட்டில் அடுத்தடுத்து இரு மகன்களும் காதல் திருமணம் செய்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளது. அப்பா மெச்சிய மகனாக இருக்கும் சரவணனின் திருமணத்தை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் பாண்டியன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்த தொடரின் முதல் சீசன் அண்ணன் மற்றும் தம்பிகளின் உறவை மையமாகக் கொண்டு வெளியானது. 5 ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களை கவர்ந்து வந்த இந்த தொடர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்று இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. இரண்டாவது சீசன் அப்பா மற்றும் மகன்களின் உறவை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த தொடரில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்த பாண்டியன் இதற்காக ஊர் மக்களால் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறார்.
மன உளைச்சலில் பாண்டியன்: ஆனால் பாண்டியனின் மகன்கள் செந்தில் மற்றும் கதிர் அடுத்தடுத்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவதால் ஊர் மக்களிடம் அவமானத்திற்கு உள்ளாகிறார் பாண்டியன். இரண்டாவது மகன் செந்திலின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் பாண்டியன், மூன்றாவது மகன் கதிரின் திருமணத்தை ஏற்காமல் கறார் காட்டுகிறார். தன்னுடைய மனைவியின் அண்ணன் மகளை தன்னுடைய மூன்றாவது மகன் கதிர் திருமணம் செய்ததால் அவர் அவமானப்பட நேர்கிறது. திருமணத்தின்போது வீட்டை விட்டு வெளியேறிய ராஜி எடுத்துச் சென்ற நகை மற்றும் பணத்தை கதிர் செலவழித்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு பாண்டியனும் உடந்தை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அவமானத்தில் பாண்டியன்: இதனால் பாண்டியன் அவமானத்தால் கூனிக் குறுகுகிறார். அந்தப் பணத்தை திரும்ப கொடுக்குமாறு பாண்டியன் கூற, அவரிடம் கதிர் கோபப்படுகிறார். இதனால் கதிரை பாண்டியன் வெறுத்து ஒதுக்குவதாக எபிசோட்களில் காணப்படுகிறது. பணம் மற்றும் நகையை கேட்டு ராஜியின் அண்ணன் குமரனும் கதிரை அடித்து உதைக்கிறார். இதை எதிர்த்து கேட்டு தன்னுடைய அண்ணனிடம் சண்டை வலிக்கிறார் கோமதி. ஆனால் கதிர் அடிப்பட்டதை பார்த்தும் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் பாண்டியன் இருக்கிறார். இதனால் கோமதி கோபமடைந்து தன்னுடைய கணவனிடம் இது குறித்து கேட்க தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர் பேசுகிறார்.
கோபத்துடன் பேசும் மீனா அம்மா: முன்னதாக கதிருக்கு விருப்பமில்லாத இந்த திருமணத்தை நடத்தி வைத்த கோமதி தன்னுடைய கணவன் இந்த அளவிற்கு கதிரை வெறுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கதிரிடம் மன்னிப்பு கேட்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. இதனிடையே வழியில் தன்னுடைய அம்மாவை பார்க்கும் மீனா அவரிடம் பேச முயல்கிறார். மீனா வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த நிலையில் அவர் தன்னுடைய மகள் இல்லை என்று மீனாவின் அம்மா கோபத்துடன் பேசுகிறார். இதனால் மீனா தவிப்பிற்கு உள்ளாவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











