Pandian stores: ரொம்ப க்யூட்.. மீனாவை உச்சி முகர்ந்த செந்தில்.. அட உண்மைதான் இல்ல!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக வலம்வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் முதல் சீசன் வெற்றிகரமான சீரியலாக தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் நிறைவடைந்து அடுத்த சீசனும் துவங்கியுள்ளது. முதல் சீசனை போலவே இந்த சீசனும் தற்போது அதிகமான டிஆர்பிகளை பெற்று, சேனலின் முன்னணி சீரியலாக மாறியுள்ளது. இந்த சீரியலில் பிரபல நடிகை நிரோஷா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் மற்றும் ஹேமா ஆகியோரும் இந்த இரண்டாவது சீசனில் இணைந்துள்ளது. இவர்கள் இருவருக்குமே இந்த தொடரில் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ஸ்டாலின். எதுவுமே இல்லாமல் யாருமே இல்லாமல் தனியாக உழைத்து அவர் முன்னேறியுள்ளதாகவும் அதனால் அவர் பயங்கரமாக தன்னுடைய செலவுகளை சுருக்குவதும் அதனால் குடும்பத்தினர் படும் அவதிகள் இந்த சீரியலில் எபிசோட்களாக காட்டப்பட்டு வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை, பரிவை, விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை கதைக்களமாக கொண்டிருந்தார் இயக்குநர். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகிவரும் இரண்டாவது சீசனில் தந்தை மற்றும் மகன்களின் பாசம் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலில் பாண்டியனாக நடித்துவருகிறார் ஸ்டாலின். இவர் முந்தைய சீசனில் மூத்த அண்ணனாக நடித்த நிலையில் தற்போது அப்பாவாக நடித்து வருகிறார்.
உழைப்பால் உயர்ந்த பாண்டியன்: மிகுந்த போராட்டத்திற்கிடையில் உழைத்து முன்னேறிய பாண்டியன். தன்னுடைய மனைவி மற்றும் மகன்களில் அனைத்து விஷயங்களிலும் கறார் காட்டுகிறார். இதனால் அவர்கள் படும் அவதியை இந்த சிரியலில் காட்சிகளாக காட்டி வருகிறார் இயக்குநர். தன்னுடைய மகன்களை மிகவும் கட்டுப்பாடாக வைத்து வருகிறார் பாண்டியன். இதனால் மூத்த மகன் தன்னுடைய காதலையும் தியாகம் செய்யும் நிலையில், தன்னுடைய தம்பியின் உதவியுடன் தான் விரும்பிய மீனாவையே திருமணம் செய்கிறார் செந்தில்.
செந்தில் -மீனா திருமணம்: இந்த திருமணம் அவர்களது வீட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், அவர்களது திருமணத்தை ஏற்கிறார் பாண்டியன். ஆனாலும் 200 ரூபாய்க்கு கூட கணக்கு பார்த்து தன்னுடைய கணவனை, அவர் திட்டுவதை ஏற்க முடியாமல் தவிக்கிறார் மீனா. இதனிடையே, மூத்தவருக்கு திருமணம் ஆகாமல் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று தன்னுடைய தந்தை கூறியதால் மீனாவை தொடர்ந்து அவாய்ட் செய்கிறார் செந்தில். இதனால் மீனா மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்.
குடும்பத்துடன் ஹனிமூன்: தொடர்ந்து தன்னுடைய பெற்றோரும் தன்னை நிராகரித்த நிலையில், செந்திலுடன் ஹனிமூன் செல்வது குறித்து தன்னுடைய மாமனாரிடம் மீனா கேட்கிறார். இதை கேட்ட அவர், குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லலாம் என்று கூறுகிறார். அவர் செலவு செய்ய முன்வந்தது குறித்து குடும்பத்தினரே அதிர்ச்சியடைகின்றனர். இந்த டிரிப்பிற்காக சப்பாத்தி, புளியோதனை என கட்டுச்சோறு கட்டிக் கொண்டு அவர்கள் புறப்படுவதும் மீனாவிற்கு வியப்பை கொடுக்கிறது. இதனுடன் கொடைக்கானல் சென்றும் பாண்டியனின் அலும்பல் தொடர்கிறது.
பாண்டியன் அலப்பறை: அங்கு சென்று 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் வைத்திருந்த தன்னுடைய நண்பரை தேடுகிறார். மேலும் அதிக காசு கேட்ட ஹோட்டலில் இருந்து சத்தம் போட்டுவிட்டு ரோட்டோரக் கடையில் குடும்பத்தினருக்கு இரவு உணவு வாங்கிக் கொடுக்கிறார். இந்நிலையில் தன்னுடைய தந்தைக்கு தெரியாமல் செந்தில் மற்றும் கதிர் இருவரும் மது எடுத்துக் கொள்கின்றனர். அதை சாப்பிட்டுவிட்டு தன்னுடைய மனைவியை செந்தில் வர்ணிக்கிறார். மீனா கியூட் என்று கூறும் செந்தில், வந்த சிறிது நாட்களிலேயே தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் அவர் கவர்ந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது,


Click it and Unblock the Notifications











