Pandian stores 2: வீட்டிற்குள் புகுந்த திருடன்.. பாண்டியன் அதிரடி முடிவு.. மாட்டுவாரா தங்கமயில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு 80 சவரன் நகைகள் போடுவதாக தங்கமயில் அம்மா வாக்களித்து அனைத்தையும் போலி நகைகளாக கொடுத்துள்ளார்.
அதை தன்னிடம் எடுத்து வந்து கொடுத்து விடுமாறும் அவர் திருமணத்தின் போது தங்கமயிலிடம் கூறிய நிலையில் தற்போது பாண்டியன் வீட்டில் திருடன் ஒருவன் வந்து பித்தளை வாளியை திருடிச் சென்றதால், பாண்டியன் அதிரடியாக முடிவொன்றை எடுத்துள்ளார். இதனால் தங்கமயிலின் நகைகள் அனைத்தும் போலி என்பது தெரியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் நடந்து முடிந்துள்ள சூழலில் இந்த திருமணத்திற்காக 80 சவரன் நகைகள் போடுவதாக தங்க மயிலின் அம்மா வாக்கு கொடுக்கிறார். ஆனால் சில நகைகள் மட்டுமே அதில் உண்மையானதாகவும் மீதி நகைகள் அனைத்துமே போலி நகைகள் என்பதும் தங்க மயிலை தொடர்ந்து சஞ்சலத்திற்கு உள்ளாக்கி வருகிறது. ஆனாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று பாக்கியம் கொடுத்த நம்பிக்கையால் அவர் திருமணம் செய்துக் கொள்கிறார்.
இந்த வார ப்ரமோ: இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில் பாண்டியன் வீட்டில் புகுந்த திருடன் ஒருவன் வீட்டில் இருந்த பித்தளை வாளியை எடுத்துச் சென்றதை கோமதி மிகவும் அதிர்ச்சியுடன் குடும்பத்தினரிடம் கூறுகிறார். இந்நிலையில் வீட்டில் ராஜி, தங்கமயில் மற்றும் மீனாவின் நகைகள் இருப்பதை பாண்டியனிடம் கோமதி கூறுகிறார். அவற்றை எடுத்து சென்றிருந்தால் என்னவாகியிருக்கும் என்றும் அவர் தனது பயத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கலவரத்திற்கு உள்ளாகின்றனர்.

அச்சத்தில் தங்கமயில்: இந்நிலையில் தன்னுடைய நகைகளை தன்னுடைய அம்மாவின் பேரில் உள்ள லாக்கரில் சென்று வைத்து விட்டு வருவதாக தங்கமயில் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் பாண்டியன் கோமதி பெயரிலேயே லாக்கர் இருப்பதாகவும் அதிலேயே அனைத்து நகைகளையும் வைத்து விடுமாறும் கூறுகிறார். இதனால் தங்கமயில் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். தன்னிடம் உள்ள நகைகள் அனைத்தும் போலி என்பது குடும்பத்தினருக்கு தெரிய வருமா என்று அவர் மிகுந்த பயத்துடன் காணப்படுகிறார். இந்நிலையில் நகைகளை லாக்கரில் வைக்க கோமதி தங்கமயிலிடம் கேட்கிறார்.
உரசி பார்ப்பார்களா?: வேறு வழியில்லாமல் அதை கொடுக்க வரும் தங்கமயில், வங்கியில் நகைகளை உரசி பார்ப்பார்களா என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் சந்தேகம் அடையும் கோமதி, ஏன் முதலில் இருந்தே நகைகளை உரசி பார்ப்பார்களா என்று தொடர்ந்து கேள்வி கேட்கிறாய் என்று கேட்பதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து தங்கமயில் நகைகள் போலி என்பது பாண்டியன் குடும்பத்தினருக்கு தெரிய வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தெரிய வந்தால் பாண்டியன் குடும்பத்தினர் என்ன மாதிரியாக ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











