Pandian stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடைகிறதா.. நீங்களே கேள்வி கேட்டா எப்படி?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது.
அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது. இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதற்கேற்ப தற்போது தனத்தின் நீண்ட நாள் கனவான புதுவீட்டின் புதுமனை புகுவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவு குறித்து ஹேமா இன்ஸ்டாகிராம் பதிவு: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதுமனை புகுவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடர் சேனலின் முன்னணி தொடராக இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நிலைக் கொண்டு வருகிறது. ஆனால் இந்த வார Urban மற்றும் Urban +Rural கேட்டகரியில் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தை பெற்ற நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அண்ணன் -தம்பிகள் நான்கு பேரின் பாசத்தை மையமாக கொண்டு கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இந்தத் தொடரின் கதைக்களம் காணப்படுகிறது. சேனலின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் மற்ற மொழிகளின் ரீமேக்காக உருவாகியுள்ள நிலையில், தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமையையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தக்க வைத்துள்ளது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்தத் தொடர் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. தொடரின் மார்பக புற்றுநோயால் தனம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் மூன்றுபேர் கர்ப்பமாக இருந்த நிலையில், அவர்களுக்கு வெற்றிகரமாக குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில் தனத்தின் நீண்டநாள் கனவான புதுமனை புகுவிழாவிற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான ப்ரமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது குறித்து சீரியலில் மீனாவாக நடித்துவரும் ஹேமா ராஜ்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப் போகுதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடரின் நிறைவு குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவரே கேள்வி எழுப்பியுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதுமனை புகுவிழாவில் அவர் அணிந்திருந்த புடவையுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். தொடரை முடித்துவிட்டு இரண்டாவது சீசனை தயவுசெய்து துவங்கிவிடாதீர்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது போல இரண்டாவது சீசன் அமையுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











