Pandian stores: தனத்திற்கு இந்த கொடிய நோயா.. மீனாவிற்கு தெரியவந்த உண்மை.. என்ன நடக்கும்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் பல தொடர்கள் ரீமேக்காக உருவாகிவரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் அனைவரும் பல பிரச்சினைகளை கடந்து ஒற்றுமையாக இருப்பது கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.

Vijay TVs Pandian stores new promo and episodes makes fans shocking

தனம் குறித்து மீனாவிற்கு தெரியவந்த உண்மை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்தத் தொடர் கடந்த வார டிஆர்பியிலும் சேனலின் இரண்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் பல தொடர்கள், ரீமேக்காக உருவாகிவரும் நிலையில், தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்துள்ளது. சகோதரர்களின் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

நான்கு அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களின் உறவுகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும் தங்களின் ஒற்றுமையை மறக்காமல் இவர்கள் தங்களது வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து வருவது இந்தத் தொடரில் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூன்றாக பிரிந்த இவர்களில் ஜீவா மட்டும் தற்போதுவரை இணையாமல் உள்ளார்.

இவர்களின் ஒற்றுமைக்கு இவர்களின் மனைவிகளும் துணையாக இருப்பதே இந்த தொடருக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களில் தனம், முல்லை மற்றும் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களில் வில்லன் ஒருவனால் கீழே தள்ளப்பட்டு, முல்லை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், குடும்பத்தினரின் பிரார்த்தனைகளுக்கிடையில், உடல்நலம் தேறி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

Vijay TVs Pandian stores new promo and episodes makes fans shocking

இந்தப் பிரச்சினை ஒருவாறாக முடிந்த நிலையில், அடுத்ததாக தனத்திற்கு நெஞ்சில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுகிறார். அவர் மோமோகிராம் டெஸ்ட் எடுக்க வலியுறுத்துகிறார். அவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர் சந்தேகிக்கும் நிலையில், தனம் இடிந்து போகிறார். தான் இல்லாத தன்னுடைய குடும்பத்தின் நிலை குறித்து அவர் வருத்தம் கொள்கிறார். மேலும் தன்னுடைய குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்றும் அச்சம் கொள்கிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு எதேச்சையாக வரும் ஜீவாவின் மனைவி மீனாவிற்கு, தனம் குறித்த உண்மை தெரியவருகிறது. அவர் குடும்பத்தினரிடம் சொல்லிவிடலாம் என்று கூற, அனைவரும் பதட்டமடைவார்கள் என்று தனம் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். இந்நிலையில் மோமோகிராம் டெஸ்ட் எடுப்பதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது. தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்காது என்று மீனா உறுதியாக கூறி அவருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். இதையே ரசிகர்களும் நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X