Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
சென்னை: நடிகை சுஜிதா குழந்தை நட்சத்தரமாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து கவனம் பெற்று வருகிறார். இவரது நடிப்பில் விஜய் டிவியில் 5 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகிவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அமோகமான வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில் சுஜிதா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுஜிதா மறுத்துவிட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், வளர்ந்த மகன்களுக்கு அம்மாவாக நடிக்க சுஜிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்தக் கேரக்டரில் தற்போது நடிகை நிரோஷா நடித்து வருகிறார். சுஜிதா மற்றொரு சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகை சுஜிதா: நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாகவே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த இவர் ஒருகட்டத்தில் சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது திருமணமாகிய நிலையிலும் நடித்துவரும் சுஜிதா நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விஜய் டிவியில் வெற்றிநடை போட்டது. இந்த சீரியலில் மூத்த அண்ணியாக கொழுந்தன்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவராக அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார் சுஜிதா. இந்த சீரியல் நிறைவு பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் சுஜிதா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: ஆனால் இரண்டாவது சீசனில் சுஜிதா இணையவில்லை. மாறாக அவருக்கு பதிலாக நடிகை நிரோஷா இணைந்து நடித்து வருகிறார். 5 வளர்ந்த குழந்தைகளின் அம்மாவாக அவர் நடித்து வருகிறார். அப்பாவாக முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்த ஸ்டாலின் நடித்து வருகிறார். வளர்ந்த மகன்களின் அம்மாவாக நடிக்க சுஜிதா விரும்பாததே அவர் இரண்டாவது சீசனில் இணையாததற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வரும் மே மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ள விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் சுஜிதா குக்காக இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சி இதுவரை தயாரித்து வந்தவர்களிடமிருந்து கைமாறியுள்ளது. மேலும் வெங்கடேஷ் பட் -தாமு கூட்டணியும் பிரிந்து வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். வழக்கத்தைவிட இந்த சீசன் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தடுத்த ப்ரமோக்களை சேனல் வெளியிட்டு வருகிறது. நிகழ்ச்சியின் கோமாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். குக்குகளாக ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலர் இணையவுள்ள சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவும் குக்காக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சேனலுடன் சுமூகம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுஜிதாவை இணையவைக்க சேனல் சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இவை எவற்றிற்கும் சுஜிதா பிடிகொடுக்காமல் இருந்ததால், சேனல் சுஜிதா மீது வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இணைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் இவர் டஃப்பான போட்டியாளராக காணப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











