Pandian stores serial: விரைவில் நிறைவடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அடுத்த சீசனுக்கு ரெடியா மக்களே!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைந்திருந்தது.
அண்ணன் -தம்பிகளுக்குள் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை ஒற்றுமையாக எதிர்கொள்ளும் சம்பவங்களை இந்த சீரியலின் எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன.

விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகள் பாசத்தையும் அவர்களின் குடும்ப ஒற்றுமையையும் மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பாசம், ஒற்றுமை, பிரச்சினைகள், சவால்கள், அன்பு உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகின.
இந்தத் தொடர் கடந்த சில வருடங்களாக ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்து வரும் நிலையில், 1500 எபிசோட்களை தாண்டி தொடர் ஒளிபரப்பாகியுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடரில் ஸ்டாலின், சுஜிதா, லாவண்யா, வெங்கட், ஹேமா, குமரன், சரவணன், தீபிகா உள்ளிட்ட பல நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
4 அண்ணன் தம்பிகள், அவர்களின் மனைவிகள், குழந்தைகள், உறவுகள் என அடுத்தடுத்த கதைக்களங்களில் கேரக்டர்களை சிறப்பாக பயன்படுத்தி டிஆர்பியிலும் முதல் 5 இடங்களில் சீரியலை வைத்து வருகிறார் இயக்குநர். தற்போது மீனாவின் அப்பா ஜனார்த்தனனை கொலை செய்ய பிரஷாந்த் முயற்சித்த நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இதனிடையே, அவரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஜீவா மற்றும் கதிர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதனிடையே அவர்களை மீட்கும் வகையில், ஜனார்த்தனனை மருத்துவமனையில் வைத்து பிரஷாந்த் மீண்டும் கொலை செய்ய முயலும் சம்பவத்தை வீடியோ எடுக்கின்றனர் மூர்த்தி மற்றும் குடும்பத்தினர். தொடர்ந்து ஜனார்த்தனனும் உயிர் பிழைத்து பிரஷாந்த் தான் குற்றவாளி என்பதை வெளிப்படுத்துகிறார். இதையடுதது ஜீவா மற்றும் கதிர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரஷாந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த தொடரில் வில்லன்களே இல்லாத நிலையில், ஒரே வில்லனாக நடிகர் மகேஷ் நடித்துள்ளார். இந்த கேரக்டரில் நடிக்க தான் முதலில் மிகவும் பயந்ததாகவும் ஆனால் ரசிகர்கள் தன்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்டதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் மகேஷ் கூறியுள்ளார். இந்த தொடரின் இரண்டாவது பாகத்தை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ள அவர், வாய்ப்பிருந்தால் அதில் தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த தொடர் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில், உடனடியாக அடுத்த பாகத்தை துவங்க சீரியல் தரப்பு திட்டமிட்டுள்ளது. முதல் சீசன் ஒளிபரப்பாகிவரும் ஒரே டைம் ஸ்லாட்டில் இந்த இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே கேரக்டர்களை மையமாக கொண்டு அடுத்த சீசன் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சீசன் எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











