Pandian stores: லஞ்சப்புகாரில் மாட்டிய கண்ணன்.. ஓகே அடுத்த பிரச்சினை ரெடி!
சென்னை: விஜய் டிவியின் அதிரடி சீரியல்களில் அர்பன் கேட்டகரியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்தத் தொடர் 4 அண்ணன் -தம்பிகள் அவர்களது குடும்பம் என அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
சமீபத்தில் மூத்த அண்ணி தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் தனது கடமைகளை முடித்துவிட்டு, வீட்டிலுள்ளவர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

லஞ்சப்புகாரில் மாட்டிய கண்ணன்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழில் நேரடியாக உருவான தொடர் என்ற பெருமையை கொண்டுள்ள இந்தத் தொடர், தொடர்ந்து அர்பன் கேட்டகரியிலும் இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது. அடுத்தடுத்த பரபரப்பான மற்றும் சுவாரஸ்யமான எபிசோட்களை கொடுத்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஒற்றுமையை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
சரியான நேரத்தில் சரியான காட்சிகளுடன் குடும்பத்தினரின் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர். அந்த வகையில் சிறப்பான காட்சி அமைப்புகளை கொண்டதாகவும் இந்தத் தொடர் விளங்குகிறது. நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் வருவது சகஜம் என்ற யதார்த்தத்தையும் இந்த தொடர் முன்வைக்கிறது. அந்த வகையில் இந்தத் தொடர் ரசிகர்களிடையே தொடர்ந்து சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாக பிரிந்த இவர்கள், தொடர்ந்து கண்ணனால் பிரச்சினை வர, அதை சமாளித்து, அவரை விட்டுக் கொடுக்காமல் தங்களுடன் இணைத்து கொள்கின்றனர்.இதனிடையே, முல்லையின் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலையும் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து தங்களின் தொடர் பிரார்த்தனைகளால் சிறப்பாக எதிர்கொள்கின்றனர். அவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது.
இதனிடையே மூத்த அண்ணி தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அவர் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, ஆனால் அவரோ, தன்னுடைய கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவிட்டுதான் தான் மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்வேன் என்று அடம்பிடிக்கிறார். இந்த செய்தி குறித்து தெரியவரும் மீனா, அவரை எப்படி சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ள வைப்பது என்று தெரியாமல் திணறுகிறார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா வளைகாப்பிற்காக கடன் வாங்கும் கண்ணன், அந்த கடனை அடைப்பதற்காக தான் பணிபுரியும் வங்கியில் லஞ்சம் வாங்குகிறார். முன்னதாக அவரால் லஞ்சப்புகாருக்கு உள்ளாகும் மேலதிகாரி, இந்த விஷயத்தில் சூழ்ச்சி செய்து கண்ணனை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மாட்டி விடுகிறார். இதனிடையே, இந்த விஷயத்தை கேள்விப்படும் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











