Pandian stores: தனலட்சுமி இல்லம்.. புதுமனை புகுவிழா நடத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துவந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.
தற்போது சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில் உள்ளதால், இந்தத் தொடரும் அடுத்த இடத்திற்கு நகர்ந்துள்ளது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தை முக்கியமாக வைத்து இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரின் புதுமனை புகுவிழா: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இடம்பெற்று வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த வாரம், சிறகடிக்க ஆசை முதலிடத்தை பிடித்துள்ளதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சற்று கீழிறங்கி அடுத்த இடத்தில் உள்ளது. தனலட்சுமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையொட்டி, கடந்த சில தினங்களாக இதன் எபிசோட்கள் காணப்பட்டன. குடும்பத்தினருக்கு சொல்லாமல், அவரது ட்ரீட்மெண்டிற்காக முல்லை, மீனா ஆகியோர் திருச்சி சென்றனர்.
முல்லை அரசு வேலைக்கான தேர்விற்காக திருச்சி செல்வதாக கூறிவிட்டு மூன்று பெண்கள் மட்டும் இரண்டு குழந்தைகளுடன் திருச்சி புறப்பட்டு சென்று, அங்கு தனத்திற்கு முதல்கட்ட அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. இதையொட்டிய குழப்பங்கள் கடந்த சில எபிசோட்களில் ஒளிபரப்பானது. முல்லையையும் குழந்தையையும் பார்க்க கதிர் திருச்சிக்கே வந்த நிலையில், அவரை சமாளிக்க முடியாமல் முல்லையும் மீனாவும் முழிபிதுங்க சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

ஒருவழியாக ஆபரேஷனை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு திரும்ப, இந்த விவகாரத்தை தொடர்ந்து அவர்களால் குடும்பத்தினரிடமிருந்து மறைக்க முடியவில்லை. முல்லையும் தனமும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறார் கதிர். தொடர்ந்து முல்லையிடம் கோபத்துடன் அவர் இதுகுறித்து கேட்க, உண்மையை சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார் முல்லை. தொடர்ந்து இந்த விவகாரத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுவீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெறுவதாக இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது. வீட்டிற்கு அனைவரும் இணைந்து தனலட்மி இல்லம் என்று பெயர் வைத்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் தனம் நெகிழ்ச்சியடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு ரசிகர்களை அழைப்பதாக விஜய் டிவி ப்ரமோ வெளியிட்டுள்ளது.

தான் நினைத்த அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செய்து முடித்துள்ளார் மூத்த அண்ணி தனம். புதிய வீட்டில் அண்ணன் -தம்பிகள் என அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், தற்போது புதுவீட்டின் கிரஹப்பிரவேசமும் நடக்கவுள்ளது. மூன்று அண்ணன் -தம்பிகளும் ஒன்றாக உள்ள நிலையில், ஜீவா -மீனா மட்டும் விலகியுள்ளனர். அவர்களும் மற்றவர்களுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











