Pandian stores: என் தம்பி எனக்கு உசத்தி.. ஆத்திரமடைந்த மூர்த்தி.. நெகிழ்ந்த ஜீவா!
சென்னை: விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகின்றது.
அண்ணன் -தம்பிகளின் பாசம், அவர்களுடைய குடும்ப ஒற்றுமை இந்த தொடரில் முதன்மை படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தொடரில் தற்போது புதுமனை புகுவிழா காலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஜீவாவிற்காக கோபப்பட்ட மூர்த்தி: விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் அண்ணன் -தம்பிகளின் பாசம் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அதையொட்டி அடு்த்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன. தற்போது புதுமனை புகுவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக அண்ணன் தம்பிகள் பிரியும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஜீவா மட்டும் தன்னுடைய மாமனார் வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது புதிய வீட்டிற்கு அண்ணன் தம்பிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் தனது அண்ணன் தன்னை புது வீட்டிற்கு வர கூப்பிடவில்லை என ஜீவா, கதிரியக்க வருத்தம் தெரிவிக்கிறான்.
கடைசி வரை மூர்த்தி ஜீவாவை புதிய வீட்டிற்கு கூப்பிடாத நிலையில் விழா நாளன்று ஜீவாவின் மாமனார் உள்ளிட்ட சொந்தங்கள் விழாவிற்கு வருகின்றனர். மீனாவின் தங்கை மற்றும் அவளது கணவன் பிரஷாந்தும் வருகின்றனர்.
முன்னதாக மூன்று மாதத்தில் உழைப்பு எதுவுமில்லாமல் இரட்டிப்பு லாபம் தரும் ஆன்லைன் பிசினஸ் எனக்கூறி மீனாவின் அப்பாவிடம் 25 லட்சம் ரூபாய் பெறுகிறான் பிரஷாந்த். இதுகுறித்து அனைவரிடமும் மீனாவின் அப்பா பெருமையாக பேச அதை கேட்கும் ஜீவா, இதுவெல்லாம் ஏமாற்று வேலை என்று கூறுகிறார்.
இதனால் ஆத்திரமடையும் பிரஷாந்த், தான் தன்னுடைய மாமனாரை ஏமாற்றியதாக ஜீவா கூறுவதாக கோபத்துடன் ஜீவாவின் சட்டையை பிடித்து ஆத்திரமாக மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதனால் விழா மண்டபமே அல்லோல கல்லோல படுகிறது.
இதனிடையே ஜீவா மீது கை வைத்ததை பொருக்க முடியாமல் ஆத்திரப்படும் மூர்த்தி, பிரஷாந்திடம் ஆத்திரமடைந்து அவரை தள்ளி விடுகிறார். இதையடுத்து மீனாவின் அப்பா, தன்னுடைய இரண்டாம் மாப்பிள்ளைக்காக ஜீவாவை வழக்கம்போல மட்டம்தட்டி பேசுகிறார். இதைக்கேட்டு மூர்த்திக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. ஜீவா மாமனாரிடம் ஆத்திரப்படுகிறார்.
அவருக்கு சின்ன மாப்பிள்ளை உசத்தி என்றால் தனக்கு தன்னுடைய தம்பி ஜீவா உசத்தி என ஆத்திரத்துடன் கூறுகிறார். புது வீட்டிற்கு தன்னுடைய அண்ணன் மூர்த்தி கூப்பிடவில்லை என ஆதங்கப்பட்ட ஜீவாவிற்கு தன்னுடைய அண்ணனின் இந்த நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











