Pandian stores: ஜாமீனில் வெளிவந்த கண்ணன்.. குழந்தையை பார்த்து கதறல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரிஜினல் தமிழ் சீரியல் என்ற பெருமையுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியலில் 4 அண்ணன் -தம்பிகள் எவ்வாறு தங்களது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து வெளிவருகின்றனர் என்பது கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது லஞ்சம் வாங்கிய புகாரில் வீட்டின் கடைக்குட்டி கண்ணன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வார ப்ரமோ வெளியானது: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமையை மையமாக கொண்டு சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் தந்து வருகிறது. மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் என 4 அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருப்பதையும் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் சுமூகமாக தீர்ப்பதையும் இந்த சீரியல் கதைக்களமாக கொண்டுள்ளது.
தொடரில் அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்தபோதிலும் இவர்கள் நால்வரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவது சீரியலின் சிறப்பாக காணப்படுகிறது. அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இவர்கள் பிரிவதும், மீண்டும் சூழ்நிலையை உணர்ந்து இவர்கள் அனைவரும் ஒன்றிணைவதும் இந்தத் தொடரின் வாடிக்கையாக அமைந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் இவர்கள் 4 பேரும் மூன்று குடும்பமாக பிரிந்தனர். ஜீவாவும், கண்ணனும் வீட்டைவிட்டு வெளியேறினர்.
தனியாக இருந்தபோது, வாழும் வகை தெரியாமல் அதிகமாக கடன் வாங்குகிறார் கண்ணன். அந்தக் கடன்சுமை அவரை துரத்த, அலுவலகத்தில் லஞ்சம் வாங்குகிறார். இந்த விஷயம் தெரிந்து மூத்த அண்ணி தனம் கண்டிக்க, அதை விட்டுவிடும் மனநிலைக்கு அவர் வருகிறார். ஆனாலும் முன்னதாக கண்ணனால் பாதிக்கப்பட்ட மேலதிகாரி, அவரை மாட்டிவிட, கைதாகி சிறைக்கு செல்கிறார். இதைக் கேள்விப்படும் அவரது மனைவி ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
கண்ணன் சிறையில் அடைபட்டிருக்க, அவரது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. மற்ற விஷயங்களுக்காக கண்ணனை மன்னிக்க தயாராக இருந்த அவரது மூத்த அண்ணன் மூர்த்தி, இந்த விஷயத்தில் கண்ணனை மன்னிக்க தயாராக இல்லை. இதனிடையே, ஜீவாவும் கதிரும் கண்ணனை ஜாமீனில் வெளியில் கொண்டு வருகின்றனர். மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வரும் கண்ணன், தன்னுடைய அண்ணன் மூர்த்தி காலில் விழுந்து கதறி அழுகிறார். தன்னை மன்னிக்கும்படி மன்றாடுகிறார்.
ஆனாலும் லஞ்சம் வாங்கி, தன்னுடைய குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்ட கண்ணனை மன்னிக்க மூர்த்தி தயாராக இல்லை. இதையடுத்து தன்னுடைய பெண் குழந்தையை கையில் ஏந்தும் கண்ணன், உடைந்து அழுகிறார். குழந்தை பிறக்கும்போது அருகில் இருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறார். அவரை தேற்றும் வழி தெரியாமல் குடுமபத்தினர் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். இவ்வாறு இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











