Pandian stores: அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்காத மூர்த்தி.. குழப்பத்தில் குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது தனத்தின் சிகிச்சை தொடர்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் அதை மறைக்கிறார். இதனிடையே மீனா மற்றும் முல்லைக்கு இந்த விஷயம் தெரியவருகிறது.
இந்நிலையில் மற்றவர்களுக்கு தெரியாமல் அவரது சிகிச்சையை மேற்கொள்ள அவர்கள் முயற்சிப்பதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன.

தனத்திற்கு அரங்கேற்றப்படும் சிசேரியனுக்கு சம்மதிக்காத மூர்த்தி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் பாக்கியலட்சுமி தொடருக்கு அடுத்த இடத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. 4 அண்ணன் -தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்தத் தொடரில் அண்ணன் தம்பிகளுக்குள் இருக்கும் ஒற்றுமையை போலவே, அவர்களுக்குள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பிரிவினையையும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருந்த இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் மூன்றாக பிரிகின்றனர். கடைக்குட்டி கண்ணனும் தன்னுடைய மனைவியுடன் தனிக்குடித்தனம் போக, வாழும் வழி தெரியாமல் ஆடம்பரமாக பல பொருட்களை கிரெடிட் கார்ட்டில் வாங்கிப் போடுகின்றனர்.

இதனால் ஏற்படும் பிரச்சினையில் வங்கி ஊழியர்கள், கண்ணனை அடித்துத் துவைக்க, அதை கேள்விப்பட்டு அவர்களை தாக்குகிறார் கதிர். இதன்மூலம் சிறைக்கும் செல்கிறார். இதையடுத்து லட்சக்கணக்கில் பணத்தை கொடுதது அவரை மீட்டு வருகிறார் மூத்த அண்ணன் மூர்த்தி. இதையடுத்து கண்ணனை தனியாக விட்டால் சரியாக இருக்காது என்று உணரும் கதிர், அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் மூர்த்தி ஆத்திரப்படுகிறார். ஆனாலும் கதிரின் இந்த நடவடிக்கையை மறுக்க முடியாமல் ஏற்கிறார்.
தொடர்ந்து தான் வாங்கிய கடனுக்காக லஞ்சம் வாங்கும் கண்ணன், ஒரு கட்டத்தில் தான் வாங்காத லஞ்சத்திற்காக கைது செய்யப்படுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அவமானப்பட நேர்கிறது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் மூத்த அண்ணி, தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, அவரோ தனக்கு அதிகமான கடமைகள் உள்ளதாகக் கூறி சிகிச்சையை தள்ளிப் போடுகிறார். இந்த விஷயத்தை தெரிந்த மீனா ஒரு கட்டத்தில் முல்லைக்கு வெளிப்படுத்துகிறார். ஆனால் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த தன்னுடைய கணவனிடம் இந்த விஷயத்தை வெளிப்படுத்துவது மிகப்பெரிய ரிஸ்க் என்று கூறுகிறார் தனம்.

மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர், கூற குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை கூறாமல் சிகிச்சையை செய்ய மீனாவும் முல்லையும் முடிவெடுகின்றனர். இதையடுத்து தனத்திற்கு பொய்யான பிரசவ வலியை உருவாக்கி மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு மருத்துவர், குழந்தையை வெளியில் எடுக்க சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூறுவதாக நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
ஆனால் முதல் குழந்தை நார்மலா பிறந்த நிலையில், இந்த சிசேரியனுக்கு மூர்த்தி ஒப்புதல் கொடுக்காமல் உள்ளார். இந்த மருத்துவர் சரியில்லை என்று கூறுகிறார். அவரை குடும்பத்தினர் இணைந்து சமாதானப்படுததுவதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது. ஆனால் மூர்த்தி குழப்பத்துடன் இதை மறுக்கிறார். ஒரு விஷயத்தை மறைப்பதற்காக பல பொய் நாடகங்களை இந்த தொடரின் கேரக்டர்கள் அரங்கேற்றுகின்றனர். தொடரை பரபரப்பாக்குவதாக கூறி அரங்கேற்றப்படும் இத்தகைய அபத்தங்களையும் ரசிகர்கள் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக ரசிகர்கள் இந்த ப்ரமோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











