Pandian stores: மாமனாரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு.. பிரஷாந்த் நாடகம்.. கைது செய்யப்பட்ட ஜீவா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
விரைவில் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தொடர், தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜனார்த்தனனை கொலை செய்ததாக கைது செய்யப்படும் ஜீவா -கதிர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். வாரந்தோறும் வெளியாகிவரும் டிஆர்பி பட்டியலில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடங்களை பிடித்து இந்தத் தொடர் மாஸ் காட்டி வருகிறது. 5 ஆண்டுகளையொட்டி இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வரும் சூழலில் விரைவில், தொடர் நிறைவு செய்யப்பட்டு, அடுத்த பாகம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்தத் தொடர் தொடர்ந்து நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரின் இரண்டாவது பாகத்தில் நடிக்க தனம் மற்றும் கதிர் கேரக்டர்களில் நடித்துவரும் சுஜிதா மற்றும் குமரன் மறுப்பு தெரிவித்ததாகவும் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை கொண்டு தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்ட நிலையில், முதல் பாகத்தை தற்போது நிறைவு செய்யும் எண்ணம் இல்லை என சீரியல் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் சீரியலில் ஒவ்வொரு விஷயமாக நிறைவு செய்யப்பட்டு வருகிறது. புது வீட்டில் அண்ணன் -தம்பிகள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். தனத்திற்கும் கேன்சருக்கான ட்ரீட்மெண்ட் நிறைவடைந்து அவர் தேறியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது மருமகன் பிரஷாந்திடம் தான் ஏமாந்தது குறித்த உண்மை ஜீவா மாமனார் ஜனார்த்தனனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரஷாந்திடம் தன்னுடைய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு அவர் சண்டையிடுகிறார்.
இதையடுத்து அவரிடம் பதிலுக்கு சண்டையிடுகிறார் பிரஷாந்த், தடுக்க வந்த மேனேஜரையும் பிடித்து தள்ளி விடுகிறார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் ஜனார்த்தனன், பிரஷாந்தை அரிவாளால் வெட்டப் பாய்கிறார். அவரை தடுக்கும் பிரஷாந்த், கத்தியால் குத்துகிறார். இதனால் அவர் நிலைகுலைந்து சரிகிறார். இதையடுத்து அங்கே வரும் காவல்துறையிடம் ஜீவாதான் தன்னுடைய மாமனாரை கத்தியால் குத்தியதாக கூறுகிறார் பிரஷாந்த்.
இதையடுத்து ஜீவா மற்றும் கதிரை காவல்துறையினர் கைது செய்கின்றனர். தான் எதையும் செய்யவில்லை என அவர் மீனாவிடம் பரிதவிப்புடன் கூறுகிறார். மீனா மற்றும் தனம் அழுகையுடன் அவர்களை கைது செய்ய வேண்டாம் என்று காவல்துறையினரை கேட்பதாக இந்த வாரத்திற்கான ப்ரமோ காணப்படுகிறது. இதையடுத்து ஜீவா மற்றும் கதிரை மீட்க மூர்த்தி எடுக்கும் நடவடிக்கைகள், கத்திக்குத்து வாங்கிய ஜனார்த்தனன் நிலைமை உள்ளிட்டவற்றை அடுத்த வார எபிசோட்களில் காணலாம்.


Click it and Unblock the Notifications











