Pandian stores serial: பிரஷாந்த் மீது சந்தேகப்படும் மீனா.. இனி நடக்கப்போவது என்ன!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் நிலையில், மீனாவின் அப்பாவை, அவரது இரண்டாவது மருமகன் பிரஷாந்த் கத்தியால் குத்துகிறான்.

Vijay TVs Pandian stores serial this week promo released fans thrilling

முன்னதாக மேனேஜரையும் கீழே தள்ளி கொலை செய்கிறார் பிரஷாந்த். இந்தக் கொலைப்பழி ஜீவா மற்றும் கதிர் மீது விழுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வார ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாஸ் காட்டி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்தத் தொடர், ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவருகிறது. அண்ணன் -தம்பிகள் 4 பேரின் ஒற்றுமை மட்டுமில்லாமல் அவர்களது மனைவி, குடும்பத்தினரின் ஒற்றுமையும் இந்தத் தொடரில் கதைக்களப்படுத்தப்பட்டு வருகின்றன.

Vijay TVs Pandian stores serial this week promo released fans thrilling

இந்தத் தொடரில் அதிகமாக கேரக்டர்களின் வில்லத்தனங்கள் காட்சிப் படுத்தப்படுவதில்லை. மாறாக, வாழ்க்கைச்சூழலே வில்லனத்தனமாக மாறி, அண்ணன் -தம்பிகளை அலைக்கழிக்கிறது. பிரிந்திருந்த அண்ணன் -தம்பிகள் நால்வரும் புதுவீட்டு கிரஹப்பிரவேசத்தின்போது ஒன்றிணைகின்றனர். அந்த நிகழ்ச்சியில் மீனாவின் அப்பா மற்றும் அவரது இரண்டாவது மருமகன் பிரஷாந்த், பிரச்சினைகளை ஏற்படுத்த, அந்த நேரத்தில் அண்ணன் -தம்பிகள் ஒருவருக்கொருவர் செய்யும் சப்போர்ட் அவர்களை இணைக்கிறது.

இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில் வீட்டின் அனைத்து பிரச்சினைகளையும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தீர்த்து வைத்துள்ளனர். தனத்தின் முக்கியமான விருப்பமான புதுமனை புகுவிழா சமீபத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. தனத்திற்கு வந்த வியாதியும் தீர்க்கப்பட்டுள்ளது. கண்ணனுக்கு பரிபோன வேலையும் கிடைத்து அவரும் வேலைக்கு செல்லத் துவங்கியுள்ளார்.

Vijay TVs Pandian stores serial this week promo released fans thrilling

அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்ததாக நினைத்தபோது, திடீரென மீனாவின் அப்பா ஜனார்த்தனன் மற்றும் அவரது இளைய மருமகனுக்கிடையில் பிசினசில் ஏற்பட்ட பிரச்சினையில் பிரஷாந்த், தன்னுடைய மாமனாரை கத்தியால் குத்துகிறார், மேனேஜரையும் கீழே தள்ளி கொலை செய்கிறார். இந்தப் பழி, ஜீவா மற்றும் கதிர் மீது விழும்படி சாட்சி சொல்கிறார். இதனால் கைதாகும் ஜீவா மற்றும் கதிர், சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காத நிலை காணப்படுகிறது.

Vijay TVs Pandian stores serial this week promo released fans thrilling

இந்நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ஜனார்த்தனனுக்கு நினைவு திரும்பினால், தன்மீது மேனேஜர் கொலை குற்றம் விழும் என்பதால் மருத்துவமனையிலேயே அவரை கொலை செய்ய பிரஷாந்த் திட்டமிடுகிறார். அவரது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளால் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. இதனால் தன்னுடைய அப்பாவின் இந்த நிலைக்கு கதிர்தான் காரணம் என்று நினைத்து அவர்மீது ஆத்திரத்தில் இருக்கும் மீனாவிற்கு குழப்பம் ஏற்படுவதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X