Pandian stores serial: பிரஷாந்தின் சூழ்ச்சிக்கு பலியாகும் மீனா எடுத்த விபரீத முடிவு.. அடுத்தது என்ன?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து நிலைப்பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகள் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் மையமாக கொண்டு எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
எந்த பிரச்சினைகள் வந்தாலும் நமக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்ற பாதுகாப்பு உணர்வு ஒரு நபருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பரபரப்பான இந்த வார ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்த சிறப்பான காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நிறைவடையவுள்ளதாகவும் அடுத்ததாக இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தொடர்ந்து கூறப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில் நடிக்க தனம் மற்றும் கதிர் கேரக்டர்களில் நடித்துவரும் சுஜிதா மற்றும் குமரன் ஆகியோர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இந்த திட்டம் இழுபறியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருவதால் சீரியல் நிறைவடைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே மீனாவின் அப்பா ஜனார்த்தனன் தன்னுடைய இரண்டாவது மாப்பிள்ளை பிரஷாந்துடன் இணைந்து எம்எல்எம் பிசினசில் ஈடுபடுகிறார். தான் இன்வெஸ்ட் செய்யும் தொகை பல மடங்காக திரும்பி வரும் என்று ஆசை வார்த்தை கூறி, அவருடைய பணத்தை கைப்பற்றுகிறார் பிரஷாந்த். இதுகுறித்து ஜீவா தொடர்ந்து எச்சரிக்கை விட்ட போதிலும், படிக்காத அவரது வார்த்தைகள் அந்த இடத்தில் எடுபடாமல் போகிறது. வெளிநாட்டில் சென்று படித்துவிட்டு வந்த பிரஷாந்த் சொல்வதை கண்மூடித்தனமாக நம்புகிறார் ஜனார்த்தனன்.
இதனிடையே, தன்னுடைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் அனைத்து பணமும் எடுக்கப்பட்டதை அறிந்து ஆத்திரமடையும் ஜனார்த்தனன், அதுகுறித்து பிரஷாந்திடம் கேட்கிறார். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தன்னுடைய பணத்தை திரும்பித் தருமாறு பிரஷாந்திடம் சண்டையிடுகிறார். இந்த நேரத்தில் அவர்களுக்குள் ஏற்படும் சண்டையை தடுக்கவரும் மேனேஜரையும் கீழே தள்ளி விடுகிறார் பிரஷாந்த். அவர் அந்த இடத்திலேயே உயிரிழக்கிறார்.

இதனால் ஆத்தரமடையும் ஜனார்த்தனன், பிரஷாந்தை வெட்ட பாய்கிறார். அவரை தடுக்கும் பிரஷாந்த், அவரை கத்தியால் குத்துகிறார். அவர் இறந்துவிட்டதாக கருதும் பிரஷாந்த், ஊரை கூட்டி, தன்னுடைய மாமனாரை ஜீவா வெட்டிவிட்டதாகவும் மேனேஜரையும் கொலை செய்துவிட்டு, தன்னையும் தாக்கியதாக புகார் தெரிவிக்கிறார். இதையடுத்து ஜீவா மற்றும் அவரது தம்பி கதிரை போலீசார் கைது செய்கின்றனர். தன்னுடைய கணவனின் கைதால் மீனா குழப்பமடைகிறார்.
தொடர்ந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தன்னுடைய அப்பாவை பார்க்க போகும் மீனா, அங்கு பிரஷாந்த்தின் வாக்குமூலத்தை கேட்கிறார். ஜீவா மற்றும் கதிர், சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடைய மாமனாரை வெட்டியதாக பிரஷாந்து கூறுவதைக் கேட்டு ஆத்திரமடையும், மீனா, அதை உண்மை என்று நம்பி, தன்னுடைய வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேறுவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











