Anjali baskar: எனக்கு மேக்கப் போடவே பிடிக்காது.. சக்திவேல் சீரியல் நடிகை அஞ்சலி பாஸ்கர் கூல் பேட்டி!

சென்னை: விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் சக்தியாக மாஸ் காட்டி வருகிறார் அஞ்சலி பாஸ்கர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி, சக்திவேல் சீரியலுக்காக தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்த கேரக்டர் மிகவும் போல்டான கேரக்டர் என்பதால் அவர் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார்.

இதனிடையே இன்றைய தினம் விஜய் டிவியின் முதல் வணக்கம் ஷோவில் பங்கேற்று பேசிய அஞ்சலி பாஸ்கர், தனக்கு விருப்பமான விஷயங்கள் குறித்தும் சக்திவேல் சூட்டிங் ஸ்பாட் குறித்தும் பல விஷயங்களை தன்னுடைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். க்யூட்டான அவரது இந்த பேட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Television Anjali Baskar Sakthivel serial

சீரியல் நடிகை அஞ்சலி பாஸ்கர்: விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் சக்தியாக அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். இன்றைய தினம் விஜய் டிவியின் முதல் வணக்கம் ஷோவில் ஸ்டார்ஸ் டைரி செக்மென்ட்டிற்காக பேசிய அஞ்சலி பாஸ்கர், பல சுவாரஸ்யமான விஷயங்களை ஷேர் செய்ததை பார்க்க முடிந்தது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த அஞ்சலி பாஸ்கர், சக்திவேல் சீரியல் ஆடிஷனில் பங்கேற்று செலக்ட் ஆனவுடன் தான் மேகத்திற்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். அந்த அளவிற்கு தான் உற்சாகமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சக்தி -அஞ்சலி வேறுபாடு: சக்திக்கும் அஞ்சலிக்கும் சிறிதுகூட ஒற்றுமை கிடையாது என்று அஞ்சலி பாஸ்கர் தெரிவித்துள்ளார். அஞ்சலி மிகவும் சைல்டிஷ்ஷான நடவடிக்கையை கொண்டவர் என்றும் எப்போதுரும் துறுதுறுவென அவர் இருப்பார் என்றும் கூறிய அஞ்சலி, ஆனால் சக்தி மிகவும் சீரியலில் மிகவும் போல்டான கேரக்டர் என்றும் குறிப்பிட்டுள்ளார். துவக்கத்தில் சக்திவேல் சீரியலில் நடிக்கும் போது அதிகமான பிரச்சனைகளை தான் சந்தித்ததாகவும் தமிழில் தனக்கு பேச தகராறு இருந்ததாகவும் கூறிய அஞ்சலி பாஸ்கர், தமிழில் அடுத்தடுத்து படங்கள், சீரியல்கள் பார்த்து தற்போது தமிழ் ஓரளவிற்கு சரளமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். சில தினங்களிலேயே சக்திவேல் சீரியல் செட்டில் தான் மிகவும் சிறப்பாக ஒன்றி விட்டதாகவும் அடுத்தடுத்து கொண்டாட்டங்களுடன் நாட்கள் கழிவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேக்கப் போட பிடிக்காது: ரெஸ்டாரெண்ட் ஒன்றில் விதவிதமான டிஷ்களை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே பேசிய அஞ்சலி பாஸ்கர், தான் மிகப்பெரிய சாப்பாட்டுப் பிரியை என்றும் சூட்டிங்கில் சில தினங்கள் கிடைக்கும் இடைவெளிகளில் தான் தன்னுடைய ஊருக்கு சென்று அம்மா கையால் ஆப்பம், கோழிக்கறி என விதவிதமாக சமைத்து தர சொல்லி சாப்பிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அஞ்சலி பாஸ்கர், தனக்கு மேக்கப் செய்து கொள்ளவே பிடிக்காது என்று கூறியுள்ளார். சாதாரணமாக ஒரு டீசர்ட் -ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வெளியிடங்களில் சுற்றுவது தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் ஆனால் நடிகையாக மாறிவிட்டதால் அடுத்தடுத்து மேக்கப் செய்ய வேண்டி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீரியல் டீம் கொடுக்கும் சப்போர்ட்: சக்திவேல் சீரியலில் சக நடிகர்கள், தான் புதிய நடிகை என்பதால் தனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருப்பதாகவும் அதிகமான விஷயங்களை சொல்லிக் கொடுப்பதாகவும் அஞ்சலி பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய நடிப்பை மேம்படுத்திக்கொள்வதற்காக அவர்கள் அதிகமான டிப்ஸ் கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். தனக்கு அதிகமான கனவுகள் இருப்பதாகவும் ஆனால் தற்போது நடிகையாக வித்தியாசமான கேரக்டர்களில் கமிட்டாகி நடிப்பது ஒன்றே தன்னுடைய கனவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X