திருமணத்துக்கு தயாரான சிறகடிக்க ஆசை முத்து.. பொண்ணு யாரு தெரியுமா.. அவங்களும் சீரியல் நடிகைதான்!
சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் வெற்றி வசந்த். இந்த சீரியல் சேனலில் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பியுடன் இருந்து வருகிறது. இந்த சீரியலில் முத்து மற்றும் மீனாவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா இருவரும் நிஜ கணவன் மனைவியை நம் கண் முன்னே நிறுத்தி வருகின்றனர்.
இதனிடையே வெற்றி வசந்த் தன்னுடைய ரியல் லைஃப் குறித்தும் தற்போது அறிவித்துள்ளார். இந்த வாரத்தில் தனது நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார் வெற்றி வசந்த். விஜய் டிவியின் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி சுந்தரை தான் இவர் திருமணம் முடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக தொடர்ந்து பல மாதங்களாக அதிகமான டிஆர்பியுடன் இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர்/ இந்த தொடரில் முத்து மற்றும் மீனாவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா இருவரின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இணங்க இவர்களுக்குள் சண்டை சச்சரவுகளும் காணப்படுகிறது. அதே நேரத்தில் விட்டுக் கொடுத்தல்களும் அதிகமாக உள்ளது.
வெற்றி வசந்திற்கு நிச்சயதார்த்தம்: இந்த சீரியலில் முத்துவாக நடித்துவரும் வெற்றி வசந்த், தன்னுடைய முதல் சீரியலிலேயே மிக சிறப்பாக ஸ்கோர் செய்து வருகிறார். முன்னதாக வாய்ப்பு தேடி மிக அதிகமான, கடினமான பாதைகளில் சென்றதாக இவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதுவே இவரை முத்துவாக சிறப்பாக செயல்பட வைப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் நடத்தப்பட்ட விஜய் விருதுகளில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்துள்ளார். இந்த வாரத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
வெற்றி வசந்த் -வைஷ்ணவி நிச்சயதார்த்தம்: இவரை மணமுடிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை முன்னதாக ராஜா ராணி 2 சீரியலில் கேரக்டர் ரோலில் நடித்தவரும் தற்போது பொன்னி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்துவரும் வைஷ்ணவி சுந்தர்தான் வெற்றி வசந்தை மணமுடிக்க போகிறார். இது குறித்து உற்சாகமாக அறிவித்துள்ள வெற்றி வசந்த், தன்னுடைய வருங்கால மனைவியுடன் இணைந்திருக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இவரது இந்த நிச்சயதார்த்த அறிவிப்பு ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விரைவில் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை தெரிவிக்க உள்ளதாக வெற்றி வசந்த் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த சந்தோஷ செய்தியை தெரிவித்துள்ளார்.
இருவீட்டார் சம்மதம்: விரைவில் இவரது திருமணமும் நடக்கவுள்ள நிலையில் சின்னத்திரை வட்டாரமே இவரது திருமண நிகழ்வில் இணையும் என்று எதிர்பார்க்கலாம். தங்களுடைய காதல் திருமணத்தில் முடிவது குறித்து இருவருமே மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளது. இதனிடையே, நிச்சயதார்த்தத்தை மிகவும் எளிமையாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இணைய நடத்தவுள்ளார் வெற்றி வசந்த்.


Click it and Unblock the Notifications











