கைகள் கோர்த்து.. நெற்றியில் முத்தமிட்டு.. சிறப்பாக நடந்த வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம்!
சென்னை: நடிகர் வெற்றி வசந்த் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியுடன் இவரது நிச்சயதார்த்தம் கடந்த மாதத்தில் நடந்து முடிந்த நிலையில் இன்றைய தினம் இவர்கள் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தினர். இதன் வீடியோ தற்போது instagram-ல் பகிரப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த வீடியோவில் வைஷ்ணவியின் கைகளை கோர்த்த படியும் நெற்றியில் முத்தமிட்ட படியும் வெற்றி வசந்த் காணப்படுகிறார். தொடர்ந்து அவரது கழுத்தில் தாலி கட்டும்படியாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.

நடிகர் வெற்றி வசந்த்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ஹீரோவாக நடித்து வருபவர் வெற்றி வசந்த். முன்னதாக யூடியூப் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்த இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியல் மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்துள்ளது. இந்த சீரியலில் அவரது இயல்பான மற்றும் காமெடியான பேச்சுக்கள் சீரியலுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து வருகிறது. இந்த சீரியலின் முத்து மற்றும் மீனா கேரக்டர்க மிகப்பெரிய ரொமான்ஸ் பக்கத்தை ரசிகர்களுக்கு காட்டுவதாகவும் அமைந்து வருகிறது.
வெற்றி வசந்த் -வைஷ்ணவி திருமணம்: இந்நிலையில் நடிகர் வெற்றி வசந்த்திற்கு இன்றைய தினம் சென்னையில் மிகச் சிறப்பான வகையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியின் பொன்னி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்துவரும் வைஷ்ணவிக்கும் வெற்றி வசந்திற்கும் இன்றைய தினம் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்றைய தினம் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஏராளமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வீடியோ: இதன் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி வசந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வெற்றி வசந்த் -வைஷ்ணவி ஜோடியின் அழகு அள்ளுகிறது. மேலும் திருமணத்தின் நிகழ்வுகளும் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைகள் கோர்த்து இருவரும் நடக்கும் படியாகவும் வைஷ்ணவியின் நெற்றியில் வெற்றி வசந்த் முத்தமிடும்படியாகவும் அமைந்துள்ள இந்த வீடியோவின் காட்சிகள் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. இதை எடுத்து அனைவரும் வாழ்த்துக்களை கூற வெற்றி வசந்த் வைஷ்ணவி கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.
பிரபலங்கள் வாழ்த்து: இந்த திருமணத்தில் விஜய்டிவியின் பிரபலங்கள் பலரும் நேரில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவர்கள் தங்களது காதலை அறிவித்த நிலையில் தற்போது இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. சங்கீத், ஹல்டி என இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களாகவே கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், தற்போது திருமணமும் நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











