Actress Sangeetha: என்னது சிறகடிக்க ஆசை சீதா டாக்டரா.. அவங்களே சொன்ன விஷயம்!
சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக அதிகமான டிஆர்பியை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டருமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாகவே அமைந்து வருகிறது. சீரியலில் முத்து மற்றும் மீனா முதன்மை கேரக்டர்களின் மாஸ் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கையாக நடித்து வரும் சீதாவும் அதிகமான காட்சிகளில் தொடர்ந்து காணப்படுகிறார். தற்போது சீதா மூலமாகவே நீண்ட நாட்களாக மறைக்கப்பட்டு வந்த ரோகிணி குறித்த உண்மை ஒன்று வெளிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீதாவாக நடித்து வரும் நடிகை சங்கீதா ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக அதிகமான டிஆர்பிஐ பெற்று மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் முத்து, மீனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக இந்த தொடர் தொடர்ந்து இருந்து வருகிறது. தொடரில் மீனாவின் அப்பா உயிரிழந்த நிலையில், தன்னுடைய தம்பி மற்றும் தங்கையின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் துணை நிற்பதாக காணப்படுகிறது.
சீதா கேரக்டர்: சமீபத்தில் மீனாவின் தங்கை சீதா தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மருத்துவமனை ஒன்றில் வேலையில் சேர்ந்துள்ளதாக காணப்படுகிறது. இதையடுத்து சீதா கேரக்டருக்கு இந்த சீரியலில் அடுத்தடுத்த காட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இவர் மூலமாகவே நீண்ட நாட்களாக மறைக்கப்பட்டு வரும் ரோகிணி குறித்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அடுத்த குழந்தைக்காக ரோகிணி சீதா பணிபுரியும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான உண்மை சீதா மூலம் மீனாவிற்கும் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.
நடிகை சங்கீதா ஒரு மருத்துவர்: ரோகிணிக்கு முன்னதாக திருமணமாகி குழந்தை இருப்பதையும் மறைத்து தான் அவர் மனோஜை திருமணம் செய்துள்ளார். ஆனால் தற்போது மீனா மூலம் அந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வார பிரமோவின் காண்பிக்கப்பட்டுள்ளது. ரோகிணியை வலுக்கட்டாயமாக நிறுத்தி இதுகுறித்து விஜயா கேள்வி கேட்பதாகவும் காணப்பட்டது. அந்த அளவிற்கு தற்போது சீதா கேரக்டர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் சீதா கேரக்டரில் நடித்துவரும் நடிகை சங்கீதா, தன்னுடைய மருத்துவ படிப்பை நிறைவு செய்து விட்டேன் சீரியலில் நடிக்க வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
அம்மாவின் விருப்பம்: தனக்கு சயின்சில் ஆர்வம் அதிகம் என்று தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள நடிகை சங்கீதா, அதனால் முன்னதாக தான் நர்சிங்கில் சேர்ந்து படித்ததாகவும் ஆனால் அதில் விருப்பம் இல்லாமல் வெளியில் வந்து, அடுத்ததாக டாக்டர் படிப்பில் இணைந்து அதை 5 வருடம் கஷ்டப்பட்டு நிறைவு செய்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய அம்மாவின் விருப்பப்படி தான் ஒரு டிகிரியை கம்ப்ளீட் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து தனக்கு விருப்பமான டான்ஸ் மற்றும் நடிப்பை தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











