பூர்வீக சொத்துக்காக பொண்டாட்டியை டார்ச்சர் செய்கிறாரா மனோஜ்?.. அண்டாகாகசம் ஷோவில் மாகாபா கேள்வி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான பிரமோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தன்னுடைய மொபைலை திருடியது வித்யா தான் என்பதை கண்டுபிடிக்கிறார் முத்து.

இதையடுத்து உண்மையில் அந்த மொபைலை திருடிய ரோகிணி சிக்குவாரா என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே சிறகடிக்க ஆசை டீம் தற்போது மாகாபா தொகுத்து வழங்கி வரும் அண்டாகாகசம் ஷோவில் கலந்துகொண்டு அட்ராசிட்டி செய்துள்ளனர். மீனா அண்ட் டீம் ஒரு பக்கமும் மனோஜ், ரோகிணி அண்ட் டீம் மற்றொரு பக்கமும் இருந்து அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

siragadikka aasai serial

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். இந்த தொடரில் அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா, ரோகிணி, மனோஜ், ரவி, சுருதி என முன்னணி கேரக்டர்களை மையப்படுத்தி அடுத்தடுத்த காட்சிகளை சிறப்பாக்கி வருகிறார் இயக்குநர். தன்னுடைய வாழ்க்கைக்காக தன்னுடைய பழைய வாழ்க்கையை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதற்காக ரோகிணி அடுத்தடுத்து பல பொய்களை கூறுகிறார். பல தகிடுதத்தங்களை செய்கிறார்.

மாட்டிய ரோகிணி: ஒவ்வொரு முறையும் ரோகிணி மாட்டுவதற்கான சூழல் ஏற்படும் நிலையில், அதிலிருந்து எப்படியாவது பிளான் செய்து தப்பிக்கிறார். இந்நிலையில் முத்துவும் அடுத்தடுத்து பல விஷயங்களை கண்டுபிடிக்கிறார். அந்த வகையில் மனோஜிடமிருந்து ஜீவா எடுத்துக் கொண்டு ஓடிய 27 லட்சம் ரூபாயை 30 லட்சமாக ஜீவா திருப்பிக் கொடுத்ததை கண்டுபிடிக்கிறார் முத்து. இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வரும் நிலையில் அதையொட்டி ரோகிணியை விஜயா அடித்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால் தான் மாட்டும் சூழல் ஏற்படும்போது ஒரேயயாக ரோகிணியை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறார் மனோஜ்.

செல்போனை திருடியது யார்?: மீனாவின் தம்பி விவாகரத்திற்கு காரணமான தன்னுடைய செல்போனை திருடியது யார் என்பது குறித்து முத்து கண்டுபிடிக்கிறார். இதுகுறித்த பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் ரோகிணியுடன் இணைந்து செயல்பட்ட வித்யாவிடம் செல்போன் குறித்து முத்து கேள்வி கேட்பதாக காட்சிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த முறையாவது ரோகிணி குடும்பத்தினரிடம் மாட்டுவாரா என்பது குறித்து கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை டீம் தற்போது விஜய் டிவியின் அண்டாகாகசம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மாகாபா ஹோஸ்ட் செய்யும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் அடுத்தடுத்து அட்ராசிட்டியை எடுத்து விட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அண்டாகாகசம் ஷோ: இந்த ஷோவில் இரு தரப்பாக பிரிந்து மீனா அண்ட் டீம் ஒரு தரப்பாகவும் மற்றொரு பக்கத்தில் மனோஜ், ரோகிணி உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் மனோஜ் சீரியலில் பாட்டி வைத்த போட்டியிலேயே இன்னும் வெற்றி பெறவில்லை என்றும் அதனால் இந்த போட்டியிடும் அவர் வெற்றி பெற மாட்டார் என்றும் மீனா கூறுவதாக அமைந்தது. குழந்தை முதலில் பெறுபவர்களுக்கு பூர்வீக சொத்து என்று பாட்டி கூறியதையும் மீனா கூறுகிறார். இதனிடையே, பாட்டி வைத்த இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக மனோஜ், ரோகிணியை வற்புறுத்துவதையும் அவர் சுட்டிக் காட்ட, பூர்வீக சொத்துக்காக பொண்டாட்டியை மனோஜ் டார்ச்சர் செய்கிறாரா என்று மாகாபா இரட்டை அர்த்தத்தில் கேட்பதாக இந்த ஷோவில் காணப்பட்டது.

மீனாவை கலாய்த்த மாகாபா: இதனிடையே தங்களுக்கு தனி ரூம் கிடைக்கவில்லை என்றும் அதனால் தாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாது என்றும் மீனா கூற அதை வைத்து மாகாபா கலாய்க்க மனோஜ் தேடி வந்து மொக்கை வாங்கிக்கொண்டு செல்கிறாயே என்று மீனாவை கலாய்ப்பதாக இந்த ஷோவில் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X