Siragadikka aasai: காலில் விழுந்து கதறிய மீனா.. அழவைத்த அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை இந்தவார ப்ரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை தொடர், தொடர்ந்து சேனலில் அதிக டிஆர்பி பெற்று முன்னணியில் உள்ளது. இந்த சீரியலில் அண்ணாமலை, முத்து, மீனா என முன்னணி கேரக்டர்கள் மிகப்பெரிய வரவேற்பையும் கவனத்தையும் பெற்று சீரியலுக்கு அதிகமான வரவேற்பையும் கொடுத்து வருகின்றன.

சீரியலில் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன் அண்ணாமலையாக, குடும்பத்தின் அமைதியை காக்கும் குடுமபத்தலைவராக சிறப்பான மற்றும் இயல்பான நடிப்பை கொடுத்து வருகிறார். இதேபோல இந்த சீரியலில் முத்து மற்றும் மீனாவின் ஜோடி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக இந்த தொடர் சேனலின் முதலிடத்தை பிடித்து வருகிறது.

television siragadikka aasai serial vijay tv

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் சீரியல்கள் அனைத்துமே மிகச்சிறப்பான டிஆர்பியை பெற்று வருகின்றன. சன் டிவி சீரியல்களுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களிடையே அதிகமான வரவேறபை பெற்று வருகின்றன. இந்த சேனலில் அடுத்தடுத்து தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். இந்தத் தொடரில் அண்ணாமலை, முத்து, மீனா, விஜயா, மனோஜ், ரோகிணி என கேரக்டர்கள் அனைத்தும் ரசிகர்களைகவரும் வகையில் நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் கேரக்டர்களாக அமைந்து வருகின்றன. வில்லியாக நடித்துவரும் ரோகிணிக்கும் தன்னுடைய வாழ்க்கையை தக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தை கொடுத்துள்ளார் இயக்குநர்.

ரோகிணியின் வில்லத்தனம்: தன்னுடைய முதல் திருமணம், அதன்மூலம் தனக்கிருக்கும் மகன் ஆகியவற்றை மறைத்து மனோஜை திருமணம் செய்துக் கொண்ட ரோகிணி, இந்த வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்காக அடுத்தடுத்த வில்லத்தனத்தில் ஈடுபடுகிறார். தன்னுடைய மாமியாரை கைக்குள் போட்டுக் கொண்டு அவர் அடுத்தடுத்து முத்து மற்றும் மீனாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகீறார். அந்த வகையில், சிட்டியிடம் இருந்து தப்பிக்கும்வகையில் தன்னுடைய மாமியாரின் 2 லட்சம் பணத்தை அவர் திருட அந்தப்பழி மீனா மீது விழுகிறது. இந்த பிரச்சினையில் தானே சிக்கும் நிலை உருவாக, அந்தப் பணத்தை திரும்ப கொடுப்பதாகவும் காணப்படுகிறது.

இந்த வார ப்ரமோ: பார்வதி வீட்டில் ரோகிணி திருடிய பணத்தை, திரும்பக் கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் ரோகிணி. பணம் திருடு போகவே இல்லை என்பதாக பார்வதி கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இதனால் முத்து, அண்ணாமலை உள்ளிட்ட அனைவரின் கோபமும் விஜயாமீது விழுகிறது. இந்த விவகாரத்தில் மீனாவின் குடுமபத்தையும் இணைத்து திருட்டுக்குடும்பம் என்று விஜயா முன்னதாக பழிபோட்ட நிலையில், தற்போது பணம் திருடு போகாத நிலையில் அண்ணாமலை விஜயாவை கேள்வி கேட்கிறார். தான் என்ன கொலை குற்றமா செய்துவிட்டேன் என்று விஜயா கேட்பதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது.

கதறி அழும் மீனா: மீனாவின் மனதை உடைத்த விஜயாவின் செயலை கண்டிக்கும் அண்ணாமலை, மீனாவிற்கு அவரது அப்பா இல்லை என்பதால் அவரை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும் அப்பா ஸ்தானத்தில் தான் இருப்பதாகவும் கூறுகிறார். இதை கேட்கும் மீனா, தனக்காக பரிந்து பேசிய அண்ணாமலையை கண்ணீருடன் பார்த்து, அதே கண்ணீருடன் அண்ணாமலை காலில் விழுந்து வணங்குவதாக இந்தவார பிரமோவில் காணப்படுகிறது. வரும் வாரத்தின் எபிசோட்கள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X