Siragadikka aasai serial: தொடர்ந்து விஜயாவின் வெறுப்புக்கு ஆளாகும் ரோகிணி.. சாப்பிடக்கூட விடாத விஜயா
சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னைப் பற்றிய உண்மைகள் தன்னுடைய மாமியார், கணவன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தெரியாமல் தகிடுதத்தம் செய்துவந்த ரோகிணி ஒரு விஷயத்தில் சிக்கிக் கொள்கிறார்.
முத்து மூலம் ஜீவாவிடம் ரோகிணி மற்றும் மனோஜ் 30 லட்சம் ரூபாயை வாங்கி, அதில்தான் ஷோ ரூமை ஓபன் செய்தார்கள் என்ற உண்மை தெரியவந்த நிலையில், அவருக்கு கன்னத்தில் பளார் விட்டு தன்னுடைய வெறுப்பை காண்பிக்கிறார் விஜயா. ஒரு கட்டத்தில் அண்ணாமலை தடுத்ததால் அவரை அடிப்பதை கைவிடுகிறார். ஆனாலும் மனோஜிடம் தன்னுடைய வெறுப்பை அவர் காண்பிக்காத நிலை காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா, ரோகிணி, மனோஜ், ரவி மற்றும் ஸ்ருதி என சில கேரக்டர்களை வைத்து சிறப்பான எபிசோட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார். முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த சீரியல்களின் டிஆர்பியில் 7வது இடத்திலும் இந்த சீரியல் இடம்பெற்றுள்ளது. இந்த சீரியலில் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன் அண்ணாமலை கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த முத்து & மீனா: இவர் மட்டுமில்லாமல் சீரியலின் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சீரியலின் முத்து மற்றும் மீனா கேரக்டர்களில் நடித்துவரும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா அதிகமான அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக ஜீவா தூக்கிக் கொண்டு ஓடிய 27 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து வட்டியுடன் 30 லட்சம் ரூபாயாக ரோகிணி மற்றும் மனோஜ் பெறுகின்றனர். ஆனால் அண்ணாமலையின் ரிடையர்ட்மெண்ட் பணமான இந்த பணம் குறித்து குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் மறைக்கின்றனர்.
வெளியான ரோகிணியின் குட்டு: அந்தப் பணத்தை வைத்து ஷோரூம் ஓபன் செய்கின்றனர். ஆனால் தன்னுடைய அப்பா பணம் அனுப்பியதாக ரோகிணி கூறிய நிலையில், அவரை தலையில் வைத்து கொண்டாடி வந்தார் விஜயா. இந்நிலையில் தற்போது ஜீவா மூலம் உண்மை தெரியவந்த நிலையில், மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சேர்ந்து இந்த வேலையை செய்த நிலையிலும் ரோகிணியை மட்டுமே இந்த விஷயத்தில் விஜயா குற்றவாளியாக்கியுள்ளார். அவரை மருமகள் என்றும் பாராமல் கன்னத்தில் பளார் விடுகிறார். இந்த விவகாரத்தில் ரோகிணியை கோர்த்துவிட்டு மனோஜ் வேடிக்கை பார்த்த நிலையில், ரோகிணி மனமுடைந்து போகிறார்.

இந்த வார பிரமோ: அடுத்தடுத்து ஒருவருக்கொருவர் இவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டு சண்டையிட்ட நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகியுள்ளது. அதில் கோபத்தில் வீட்டைவிட்டு சென்று திரும்பவும் வந்த ரோகிணியை அடுத்தடுத்து விஜயா வெறுப்புடன் நடத்துவதை பார்க்க முடிகிறது. சாப்பிட உட்கார்ந்த ரோகிணியை அவமானப்படுத்தி எழுப்பி விடுகிறார். இதை பார்த்து ரவி அவரை மீண்டும் சாப்பிட சொல்ல, தான் ஆன்ட்டி சொன்னால்தான் சாப்பிடுவேன் என்று ரோகிணி சொல்வதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. மாமியார் மெச்சிய மருமகளாக இருந்த ரோகிணியின் இந்த சூழல் அடுத்தடுத்து எப்படி மாறும் எனப்தை வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











