Siragadikka Aasai serial: கவரிங் நகை விவகாரத்தை கிளப்பிய முத்து.. போலீசில் புகார் கொடுக்க ஆலோசனை!
சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் அதிகமான டிஆர்பியுடன் சேனலின் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்த சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜயா கொடுத்த மீனாவின் நகைகள் போலி என்பது தெரியவந்த சூழலில் பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களால் அதை வெளிப்படுத்தாமல் முத்து தன்னுடைய ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இரு தினங்கள் இருக்கிறார்.
இந்நிலையில் இந்த வார பிரமோவில் இந்த கவரிங் நகை குறித்த விவகாரத்தை அவர் தன்னுடைய அப்பா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையிலும் எழுப்புகிறார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால் விஜயா மட்டும் இல்லாமல் மனோஜும் முழிப்பதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து சேனலின் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. அதிக டிஆர்பிக்களுடன் வாரம் தோறும் சேனலின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் முத்து, மீனா, விஜயா, மனோஜ், ரோகிணி உள்ளிட்ட கேரக்டர்களில் நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தான் இனிமேல் நகை அணிந்தால் தன்னுடைய கணவன் வாங்கித் தரும் நகையை தான் அணிவேன் என்று தன்னுடைய மாமியாரிடம் முன்னதாக சபதமிடும் மீனா, தன்னுடைய நகைகள் அனைத்தையும் அவரிடமே கழட்டிக் கொடுத்திருந்தார்.

பாட்டியின் 80வது பிறந்தநாள்: இந்நிலையில் பாட்டியின் 80வது பிறந்த நாளையொட்டி அந்த நகைகளை வைத்து அவருக்கு ரெட்டை வட சங்கிலி வாங்கி தர முத்து மற்றும் மீனா இருவரும் திட்டமிடுகின்றனர். ஆனால் விஜயாவிடம் இருந்த நகைகளை கேட்க அவர்கள் தயக்கம் காட்டி தன்னுடைய அப்பா அண்ணாமலையின் உதவியை நாடுகின்றனர். இதனிடையே முன்னதாக மனோஜ் ஆரம்பித்த ஹோம் அப்ளையன்ஸ் பிசினஸில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அவர் 4 லட்சத்தை இழக்கிறார். இதையடுத்து தன்னுடைய அம்மா விஜயாவின் கையில் காலில் விழுந்து பண உதவி கேட்க தன்னிடம் இருந்த மீனாவின் நகைகளை விஜயா கொடுக்கிறார்.

கவரிங் நகையால் அவமானம்: அடகு வைக்க கொடுத்த நகைகளை பணம் போதிய அளவில் கிடைக்காத நிலையில் மனோஜ் விற்று விடுகிறார். இதனால் மீனாவின் நகைகளை திரும்ப மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலை மீனாவின் நகைகளை கேட்க என்ன செய்வது என்று தெரியாத விஜயா ஒரிஜினல் நகைகளுக்கு பதில் கவரிங் நகையை கொடுத்து விடுகிறார். அந்த நகைகளை கொண்டு போய் பாட்டிக்கு சங்கிலி வாங்க மீனாவும் முத்துவும் செல்கின்றனர். அங்கு அவர்கள் போலி நகையை வைத்து ஏமாற்றும் கும்பலா என்பதாக கூறி அசிங்கப்படுத்துகின்றனர். ஆனால் அந்த கடையின் ஓனர் மீனாவிற்கு தெரிந்தவர் என்பதால் போலீஸ் கம்ப்ளைண்ட் வரை போகாமல் அவர்கள் மீண்டு வருகின்றனர்.

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடியும் வரை இந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் எழுப்பக் கூடாது என்று மீனா சத்தியம் வாங்கி விடுகிறார். இதனிடையே, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடக்கிறது. இந்நிலையில் தற்போது சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மீனாவின் நகைகளை எடுத்து வந்து அண்ணாமலையிடம் காண்பிக்கும் முத்து, இந்த நகை கவரிங் என்று கடைக்காரர் கூறிவிட்டதாக உண்மையை வெளிப்படுத்துகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் அண்ணாமலை, இதுகுறித்த விஜயாவிடம் விசாரிக்கிறார்.

விஜயாவின் அட்டூழியம்: முத்துவும் உண்மையை கூறுமாறு கேட்க, அவரோ இதிலிருந்து தப்பிக்கும் வகையில் மீனாவின் வீட்டில் தான் போலி நகைகளை போட்டிருப்பார்கள் என்பதாக கூறுகிறார். இதையடுத்து மீனாவும் கோபப்படுகிறார். தன்னுடைய வீட்டில் அப்படி எல்லாம் செய்யவில்லை என்றும் அவர் கூறுகிறார். இந்நிலையில் இடையில் பேசும் ரவியின் மனைவி சுருதி, போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். இதனால் விஜயா மட்டும் இல்லாமல் மனோஜும் அதிர்ச்சியடைவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது குறித்து இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











