Siragadikka Aasai: சிட்டியை வைத்து ரோகிணி போடும் அடுத்த திட்டம்.. இதுலயாவது சிக்காம இருப்பாங்களா?

சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் மாஸ் காட்டி வரும் நிலையில், சேனலின் நம்பர் ஒன் இடத்தில் பல மாதங்களாக தொடர்ந்து சிறப்பான இடத்தை பிடித்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் பிரபல இயக்குநர் சுந்தர்ராஜன் அண்ணாமலை என்ற கேரக்டரில் நடித்து வரும் சூழலில், முத்து, மீனா, விஜயா என சுவாரஸ்யமான கேரக்டர்கள் சீரியலின் வெற்றியை சிறப்பாக்கி வருகின்றனர்.

முத்து படிக்காத நிலையில் சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். அவரை அவரது அம்மா தொடர்ந்து வெறுத்து வருகிறார். மாறாக தன்னுடைய முதல் மகன் மனோஜை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார். இதற்கு பின்பு பிளாஷ்பேக் ஒன்று உள்ளதாக அவ்வப்போது காட்டப்படுகிறது. இதன் காரணத்தை அறிந்துக் கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

televisiion siragadikka aasai serial vijay tv

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து தொடர்ந்து பல மாதங்களாக டிஆர்பியிலும் சிறப்பாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் லீட் கேரக்டரில் பிரபல இயக்குநர் சுந்தர்ராஜன் நடித்து வருகிறார். மேலும் முத்து, மீனா, விஜயா, மனோஜ், ரோகிணி என அடுத்தடுத்த கேரக்டர்களில் சீரியலின் சுவாரஸ்யத்திற்கு பங்களித்து வருகின்றன. முதுது படிக்காதவராக சொந்தமாக கார் ஓட்டுபவராக உள்ள நிலையில் அவரை வெறுக்கும் அம்மாவாக விஜயா காணப்படுகிறார். மாறாக தன்னுடைய மூத்த மகன் மனோஜை கொண்டாடுகிறார்.

televisiion siragadikka aasai serial vijay tv

முத்து -மீனாவை வெறுக்கும் விஜயா: இந்த அவரது செயலுக்கு பிளாஷ்பேக் இருப்பதாக காட்டப்படுகிறது. முத்துவை எப்போதும் மாட்டி விடும் கேரக்டரில் மனோஜ் காட்டப்படும நிலையில், இந்த பிளாஷ்பேக்கிலும் இதையொட்டியே ஏதோ ஒரு நிகழ்வு நடந்துள்ளதாகவும் அதனால்தான் விஜயா முத்துவை வெறுப்பதாகவும் காட்டப்படுகிறது. முத்துவை மட்டுமில்லாமல் அவரது மனைவி மீனாவையும் தொடர்ந்து அவமானப்படுத்தியும் திட்டியும் வருகிறார் விஜயா. ஆனால் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு சொந்தமாக பூ கட்டும் பிசினசையும் தற்போது அலங்காரம் செய்யும் பிசினசையும் மேற்கொண்டு வருகிறார் மீனா. அவரது அனைத்து முயற்சிகளுக்கும் முத்து துணையாக இருப்பதாக காட்டப்படுகீறது.

30 லட்சத்தை ஏமாந்த மனோஜ்: 3 கோடி ரூபாயில் பங்களா வீட்டை வாங்க நினைக்கும் மனோஜ் மற்றும் ரோகிணி அதற்காக 30 லட்சம் ரூபாயை ஏமாந்த நிலையில், இந்த விஷயத்தில் ஏமாற்றிய நபரை கண்டுபிடிக்கும் பொறுப்பை தன்னுடைய அப்பாவிற்காக ஏற்கிறார் முத்து. மேலும் ஜீவா மூலம் கிடைத்த பணத்தை மனோஜ் மற்றும் ரோகிணி மறைத்து கடை திறந்ததையும் கண்டுபிடித்து வீட்டிலுள்ளவர்களுக்கு சொல்கிறார். இதனால் விஜயாவின் கோபம் ரோகிணி மீது விழுகிறது. தொடர்ந்து விஜயா, ரோகிணியை அடிப்பதாகவும் அவரை வெறுப்பதாகவும் அடுத்தடுத்த எபிசோட்களில் காட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் மனோஜ் மற்றும் ரோகிணியை விஜயா மன்னிக்கிறார்.

televisiion siragadikka aasai serial vijay tv

சிஐடி வேலை பார்க்கும் முத்து & மீனா: இதனிடையே வீடு வாங்கும் விஷயத்தில் அவர்களை ஏமாற்றியவர்களை தன்னுடைய மனைவி மீனாவின் துணையுடன் கண்டுபிடிக்க முயல்கிறார் முத்து. அந்த மோசடி பேர்வழியின் சொந்த ஊர் ஏற்காடு என்பதை கண்டுபிடிக்கிறார். தொடர்ந்து மனோஜிடமிருந்து கோயிலில் வைத்து அவர் பணத்தை வாங்கிய நிலையில், அவரது புகைப்படத்தை கோயிலின் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கவுள்ளதாக முத்து மற்றும் மீனா கூற, அதை ரோகிணி மறுக்கிறார். நாங்களே கண்டுபிடித்துக் கொள்கிறோம் என்று முத்துவிடம் ரோகிணி கூற, தன்னுடைய அப்பா கூறியதற்காக இந்த தேடும் வேலையில் ஈடுபட்ட முத்து, அதிலிருந்து விலகுவதாக கூறுகிறார்.

சிட்டியிடம் உதவி கேட்கும் ரோகிணி: இதனிடையே, அந்த ஏமாற்று பேர்வழியை கண்டுபிடிக்க சிட்டியின் உதவியை ரோகிணி நாடுகிறார். அந்த நபரை கண்டுபிடித்துக் கொடுத்தால், பணம் தருவதாக ரோகிணி கூற, சிட்டியும் 2 சதவிகிதம் கொடுததால் போதும் என்று கூறுவதாக இன்றைய எபிசோட் மற்றும் பிரமோவில் காணப்படுகிறது. முன்னதாக சிட்டியிடம் கடன் வாங்கியும் அவரிடம் ஏமாந்தும் உள்ள ரோகிணி, இதனால் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும அவரிடமே உதவியை கேட்டு பெறுவதாக காணப்படுகிறது. இதனால் அவர் மறைத்துள்ள பல விஷயங்கள் வெளியில் வருமா என்பது குறித்து அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X