Siragadikka Aasai: என்னை விட்டுடுங்க மீனா.. பேயாட்டம் ஆடிய ரோகிணி.. அலறி ஓட்டம் பிடித்த மனோஜ்!
சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவின் செல்போனை திருடி அதிலிருந்த சத்யாவின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணையில் முத்து மற்றும் மீனா ஈடுபடுகின்றனர்.
முத்துவின் காணாமல் போன செல்போன் கிடைத்த நிலையில் அவர்கள் அடுத்தடுத்து இந்த கண்டுபிடிப்பில் ஈடுபடுவது குறித்து தெரிந்து கொள்ளும் ரோகிணி தன்னுடைய குட்டு வெளிப்படுமோ என்ற மன உளைச்சலில் சிக்குகிறார். இந்நிலையில் மீனா பேயாக மாறி அவரது கழுத்தை நெரிப்பதாக அவர் கனவு காண்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக டிஆர்பிலும் மாஸ் காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய முதல் வாழ்க்கை சரியாக அமையாத சூழலில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அதை மறைத்து அண்ணாமலை -விஜயா தம்பதியின் மூத்த மகன் மனோஜை திருமணம் செய்கிறார் ரோகிணி. இந்த புதிய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள அவர் அடுத்தடுத்த பொய்களை சொல்கிறார். தான் மிகப் பெரிய கோடீஸ்வரி என்றும் தன்னுடைய அப்பா துபாயில் இருப்பதாகவும் பல்வேறு கதைகளை அவர் அவிழ்த்து விட்டுள்ளார்.
ரோகிணியின் தகிடுதத்தங்கள்: ஒவ்வொரு கட்டத்திலும் ரோகிணியின் தகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன. முத்து மற்றும் மீனாவால் ரோகிணியின் ஒவ்வொரு விஷயமும் வெளிப்படும் சூழலில், அதிலிருந்தும் மீண்டும் தப்பிக்க அடுத்தடுத்த பொய்களை ரோகிணி கூறுவதாக காணப்பட்டது. இந்நிலையில் மனோஜிடமிருந்து அவரது முன்னாள் காதலி ஜீவா எடுத்துக் கொண்டு ஓடிய பணத்தை வட்டியுடன் மனோஜ் மற்றும் ரோகிணி வாங்குவதாக காணப்பட்டது. இந்த பணத்தை தன்னுடைய குடும்பத்தினருக்கு சொல்லாமல் புதிய பிசினஸ் துவங்கலாம் என்று ரோகிணி மனோஜ்க்கு ஆலோசனை கூற, அவரும் அப்படியே செயல்படுத்துகிறார்.
மீண்டும் கிடைத்த முத்துவின் செல்போன்: இதனிடையே, இந்த விஷயம் முத்து மூலம் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. அந்த சூழலில் மிகவும் கோபமடையும் விஜயா மருமகள் என்றும் பாராமல் ரோகிணியை அடிப்பதாக காணப்பட்டது. ரோகிணி முன்னதாக விதைத்த பல பொய்களை தற்போது முத்து மற்றும் மீனாவால் அடுத்தடுத்து அறுவடை செய்து வருகிறார். இந்நிலையில் முத்துவின் செல்போனை திருடி அதிலிருந்து அவரது மைத்துனர் சத்யாவின் வீடியோவை அனைவருக்கும் தெரியும் படி ரோகிணி செய்திருந்தார். இதனால் முத்து மற்றும் மீனா மிகப்பெரிய அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் காணாமல் போன முத்துவின் செல்போன் தற்போது கிடைத்துள்ளது.
பேயாக மாறிய மீனா: அந்த செல்போனை வைத்து அதிலிருந்து வீடியோவை யார் சோஷியல் மீடியாவில் பரப்பினர் என்பது குறித்து தெரிந்து கொள்ள முத்து அடுத்தடுத்த காய்களை நகர்த்தி வருகிறார். இதுகுறித்து தெரிந்து கொள்ளும் ரோகிணிக்கு அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தன்னுடைய தோழி வித்யாவிடமும் போய் சண்டை இட்டு வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் இதே மன உளைச்சலுடன் காணப்படும் ரோகிணி, இரவில் மீனா தன்முன்பு வந்து பேயாக காட்சியளிப்பதாக கனவு காண்கிறார். மேலும் பேயாக தோன்றும் மீனா, ரோகிணியின் கழுத்தை நெரிப்பதாகவும் அவரது கனவு விரிகிறது.
பேயாட்டம் ஆடிய ரோகிணி: இந்நிலையில் இந்த கனவால் ரோகிணி தூக்கத்திலேயே பேயாட்டம் ஆடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. கை கால்களை உதைத்து கொண்டு என்னை விட்டு விடு மீனா என்று அலறியடிக்க, அவருக்கு முன்னதாக மனோஜ் அலறி அடித்துக் கொண்டு ஓடி ஒளிகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தன்னுடைய வாழ்க்கைக்காக ரோகிணி செய்யும் அடுத்தடுத்த விஷயங்கள் அவருக்கு வினையாக வந்து முடிகிறது. மாறாக அவரது அம்மா ஆலோசனையின் படி இந்த விஷயத்தை தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் ரோகிணி சொல்வாரா, அவர்களின் மன்னிப்பை பெறுவாரா அல்லது ரோகிணியின் வாழ்க்கை அஸ்தமனம் ஆகுமா என்பது குறித்து அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











