Siragadikka Aasai serial: அப்பாவை கடை ஓனராக்கி அழகு பார்த்த முத்து.. அவமானத்தில் கூனி குறுகிய மனோஜ்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்றுவரும் இந்தத் தொடர் இந்த வாரத்தில் மேலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தன்னுடைய அம்மாவால் வெறுக்கப்படும் முத்து அவரது அன்புக்காக ஏங்குவதாக இந்த தொடரின் கதைக்களம் காணப்படுகிறது. தன்னை ஏமாற்றும் மனோஜ் மற்றும் அவரது மனைவி ரோகிணியை பெரிதாக நம்பி முத்துவின் மனைவி மீனாவை ஏளனப்படுத்தும் விஜயாவிற்கு மிகப்பெரிய ஆப்பாக மனோஜ் மற்றும் ரோகிணியின் செயல்பாடு அமைந்துள்ளது.

vijay tv siragadikka aasai serial

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வாரந்தோறும் டிஆர்பியிலும் சிறப்பாக அமைந்து வருகிறது. இந்தத் தொடர் விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அமைந்துள்ள நிலையில் இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயாவின் மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களை மையமாக வைத்து கதைக்களம் காணப்படுகிறது. தன்னுடைய மூத்த மகன் மனோஜை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விஜயா, மருமகள் ரோகிணியையும் கொண்டாடுகிறார்.

ரோகிணியை அடித்த விஜயா: மனோஜ் செய்யும் தப்புகளை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்தும் அதை சப்போர்ட் செய்து பேசுவதும் என விஜயா அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஒருகட்டத்தில் மனோஜ் செய்த மிகப்பெரிய தவறு முத்து மூலம் தெரியவர, இதற்கு மனோஜ் காரணமாக இருக்க முடியாது, உண்மையை மறைத்த ரோகிணிதான் காரணம் என அவரை திட்டுவதுடன் அடிக்கவும் செய்கிறார். இதனால் ரோகிணி மனோஜிடம் சண்டையிடுவதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்பட்டது. முன்னதாக தன்னுடைய அப்பா அண்ணாமலையின் ரிடையர்ட்மெண்ட் பணத்தை தூக்கிக் கொண்டு மனோஜ் ஓட, அதை அவரிடமிருந்து அவரது காதலியாக இருந்த ஜீவா பறித்ததாக காணப்பட்டது.

அப்பாவை ஓனராக்கிய முத்து: இந்த விஷயத்தில் ரோகிணியால் ஜீவாவிடம் இருந்த அந்தப் பணம் திருப்பி கிடைக்க அதைக் கொண்டு கடையை ஓபன் செய்கிறார் மனோஜ். அதை அவர் செய்ய ரோகிணியும் உறுதுணையாக இருககிறார். இந்த விவகாரம்தான் தற்போது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய அப்பாவின் பணத்தை கொண்டுசென்று மனோஜ் கடையை துவங்கியதால் இனிமேல் அந்தக் கடைக்கு தன்னுடைய அப்பாதான் ஓனர் என்று கூறும் முத்து, மறுநாள் தன்னுடைய அப்பாவை அழைத்து சென்று கல்லாவில் உட்கார வைத்து அதை நடைமுறைப்படுத்தி காட்டுகிறார்.

அவமானத்தில் குறுகிய மனோஜ்: அந்த நேரத்தில் அவருக்கு டீலர்ஷிப் கொடுத்த சந்தோஷி சாரும் அங்கே வர, இதனால் மனோஜ் அவமானப்பட நேர்கிறது. கடை ஊழியர்கள் முன்னிலையிலும் முத்துவின் இந்த செயலால் மனோஜ் அதிகமான அவமானத்திற்கு உள்ளானதாக விஜயா வீட்டிற்கு வந்து சத்தம் போடுகிறார். மனோஜை அவமானப்படுத்தவே முத்து இப்படி நடந்துக் கொண்டதாகவும் கோபத்துடன் அவர் பேசுகிறார். இந்நிலையில் முன்னதாக வீடு விற்கும் விஷயத்தில் மனோஜிடம் 30 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கதிரை கண்டுபிடிக்க முத்து புதிய திட்டத்தை தீட்டுகிறார். இதே விஷயத்தை மனோஜிடம் ரோகிணியும் பேசுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X