Top Serial: விஜய் டிவி சீரியல் அப்டேட்.. இந்த வாரமும் தொடர்ந்து முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தொடர்!
சென்னை: நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்கள் சீரியல்களுக்கும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சீரியல்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் அதன் டிஆர்பி கணக்கிடப்பட்டு, சீரியல்கள் பெறும் இடங்களும் கணிக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் எப்போதும் சன் டிவி சீரியல்கள்தான் முதலிடங்களை ஒவ்வொரு வாரமும் பெற்று வருகின்றன. இரண்டாவது இடங்களில் விஜய் டிவியின் சீரியல்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சேனலின் முதலிடத்தை பிடித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. முன்னதாக இந்த சீரியல் முதலிடத்தில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. குறைவான கேரக்டர்களை கொண்டு தனது அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பிவரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.53 டிஆர்பி புள்ளிகளை பெற்று சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. சிறகடிக்க ஆசை தொடர் இந்த வாரம் Urban and Rural பட்டியலில் 9.08 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

டிஆர்பி பட்டியல்: நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சேனல்கள் சீரியல்களுக்கும் கொடுத்து வருகின்றன. ஒவ்வொரு வாரமும் Urban & Rural பட்டியலில் ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி அந்தந்த தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பெறும் வரவேற்பை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளன. இவற்றில் சன் டிவியின் சீரியல்களே அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. முதலிடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் 11.72 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கயல், வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி தொடர்கள் உள்ளன.

சிறகடிக்க ஆசை தொடர்: இரண்டாவது இடத்தில் விஜய் டிவியின் சீரியல்கள் உள்ளன. குறிப்பாக விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த சீரியலில் அண்ணாமலை, முத்து, மீனா, விஜயா என லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். முத்து மற்றும் மீனாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், கடந்த வாரத்தில் மீனாவிற்கு அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்வகையில் முத்து பூக்கடை வைத்து கொடுத்தது அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
2வது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர்: இதேபோல வேலை பறிபோனதை குடும்பத்தினரிடம் சொல்லாமல் மனோஜ் மறைத்ததும், அதை முத்து கண்டுபிடித்து வீட்டாரிடம் போட்டுடைத்ததும் இதனால் ரோகிணி வீட்டை விட்டு வெளியேறியதும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இதனால் கடந்த வாரத்தில் இந்த தொடரின் டிஆர்பி அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 9.08 புள்ளிகளை இந்த தொடர் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர் இடம்பெற்றுள்ளது. இந்த சிரியலிலும் பாக்கியாவின் மகன்கள் எழில் மற்றும் செழியனின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது குறித்த காட்சிகள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன.
டாப் 5ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அடுத்தடுத்த இடங்களில் ஆஹா கல்யாணம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய ஒளிபரப்பை துவங்கியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்பா மற்றும் மகன்களின் உறவை சொல்லும்வகையில் அமைந்துள்ளது. இதன் முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை சொல்லும்வகையில் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த சீரியல் நிறைவடைந்து உடனடியாக இரண்டாவது சீசனும் துவங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சிரியலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











