Siragadikkaa Asai serial: மீனாவிற்கு தாலி வாங்கிக் கொடுத்த முத்து.. கடுப்பில் விஜயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் சிறகடிக்க ஆசை. கடந்த சில மாதங்களாக அதிகமான டிஆர்பியை பெற்று சேனலின் முதல் தொடராக இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனா, அண்ணாமலை, விஜயா உள்ளிட்ட முன்னணி கேரக்டர்களை வைத்து ரசிகர்களை கவரும் எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். கடந்த சில தினங்களாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் குடும்பத்தினர் அனைவரும் பாட்டி வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு ரோகிணியின் மாமா செய்யும் அலப்பறைகள், பொங்கல் கொண்டாட்டங்கள் என ரசிகர்களை அடுத்தடுத்த எபிசோட்கள் கவர்ந்தன.
தற்போது மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பிய அனைவரும் மீண்டும் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் உடல் அசதியாக இருப்பதாக கூறும் மனோஜ், புதிதாக வேலை தேடுவதில் இருந்து விலகி வீட்டில் சும்மா இருக்கிறார். இதனால் ரோகிணி அவரை கண்டபடி திட்டுகிறார். முன்னதாக தன்னுடைய வீட்டில் இருந்து எந்த நகையும் போட்டு வரவில்லை என்று மீனாவை விஜயா ஆத்திரத்துடன் பேசிய நிலையில், அவர் தனக்கு போட்ட நகைகள் அனைத்தையும் கழற்றி கொடுக்கிறார். இனி தன்னுடைய கணவன் தனக்கு போட்டால் மட்டுமே தான் நகையை அணிவேன் என்றும் கூறினார்.

சிறகடிக்க ஆசை தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். கடந்த சில மாதங்களாகவே சேனலின் அதிக டிஆர்பி பெற்று முதலிடத்தை பிடித்து வருகிறது இந்தத் தொடர். இந்நிலையில் கடந்த சில எபிசோட்களில் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிறுத்தி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்தன. இதனிடையே தான் ஏற்பாடு செய்த நபரை தன்னுடைய மாமாவாக கிராமத்திற்கு அழைத்து வருகிறார் ரோகிணி. அவரால் ஏற்படும் குழப்பங்களும் கடந்த சில தினங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்தன.
பொங்கல் கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது கிராமத்து எபிசோட்கள் நிறைவடைந்து தற்போது தங்களது வீட்டிற்கு அனைவரும் திரும்பியுள்ளனர். வீட்டிற்கு திரும்பிய உடனேயே மீனாவை அடுத்தடுத்து வேலை வாங்குகிறார் விஜயா. தனக்கென்னு ஒரு ரூம் இல்லாததை நினைத்து புலம்புகிறார். முன்னதாக மீனா தன்னுடைய வீட்டிலிருந்து நகை எதுவும் போடாமல் வந்ததை குத்தி காட்டுகிறார் விஜயா. இதனால் வருந்தும் மீனா, அவர் தனக்கு போட்ட நகைகளை கழற்றிக் கொடுப்பதாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மீனாவின் நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு அண்ணாமலை, விஜயாவிடம் கூறுகிறார்.
இந்த வார பிரமோ: இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் தான் ஒன்றும் மீனாவிடம் இருந்து நகைகளை பிடுங்கி வைக்கவில்லை என்று விஜயா பதிலளிக்கிறார். தொடர்ந்து தன்னுடைய கணவன் வாங்கிப்போட்டால் மட்டுமே தான் நகைகளை போடுவேன் என்று மீண்டும் தன்னுடைய மாமனாரிடம் மீனா உறுதியாக கூறுகிறார். தன்னுடைய கணவன் நினைத்தால் அன்றைய தினமே கூட தனக்கு நகை வாங்கிக் கொடுப்பார் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார். இதனிடையே மீனா எதிர்பார்க்கும் அந்த தருணமும் வருகிறது. தன்னுடைய மனைவி மீனாவிற்கு தாலி வாங்கிக் கொடுக்கிறார் முத்து.
மீனாவிற்கு தாலி வாங்கிக் கொடுத்த முத்து: வீட்டிற்கு உற்சாகமாக வரும் முத்து, தன்னுடைய அண்ணன், அண்ணி, தம்பி மற்றும் அவரது மனைவி என அனைவரையும் அழைத்து தான் தன்னுடைய மனைவி மீனாவிற்கு தாலி வாங்கி வந்ததை கூறுகிறார். கார் ஓட்டி நகை வாங்க முடியாது என்று முன்னதாக தன்னுடைய அம்மா சொன்னதையும் முத்து சுட்டிக் காட்டுகிறார். இதையடுத்து மகிழ்ச்சி மற்றும் அளவுகடந்த சந்தோஷத்துடன் அந்த நகையை மீனா வாங்கிக் கொள்கிறார். இதனிடையே, முத்து, மீனாவிற்கு தாலி வாங்கிக் கொடுத்ததை பொருத்துக் கொள்ள முடியாமல் விஜயா பார்ப்பதாக இந்த வார எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











