பைக்கை தலைக்கு மேல் தூக்கி.. சுடச்சுட எண்ணெயில் கைவிட்டு.. நீயா நானாவில் அதிர்ச்சி கொடுத்த நபர்கள்!

சென்னை: விஜய் டிவியில் வாரந்தோறும் நடந்துவரும் ஷோ நீயா நானா. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு சர்வதேச அளவில் ஏராளமான தமிழ் ரசிகர்கள் காணப்படுகின்றனர். நிகழ்ச்சியை ரசிகர்களை கவரும்வகையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக கொண்டு சென்று வருகிறார் ஆங்கர் கோபிநாத்.

இதனிடையே விஜயதசமி சிறப்பு எபிசோட் நாளைய தினம் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. கைகளால் மேற்கொள்ளப்படும் சாகசங்கள் மற்றும் செலிப்ரிட்டீஸ்கள் என வித்தியாசமான தலைப்பில் நாளைய தினம் காலை 10.30 மணிக்கு இந்த நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

television neeya naana show gopinath

நீயா நானா ஷோ: விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக நாளை காலை 10:30 மணிக்கு விஜய் டிவியின் சிறப்பு நீயா நானா ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி வருகின்றன. இதில் அபூர்வ கைகள் கொண்டவர்கள் மற்றும் செலிபிரிட்டிஸ் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் ஒருபுறம் சின்னத்திரை டிவி பிரபலங்கள் சீரியல் நடிகர்கள் உள்ளிட்டவர்களும் மற்றொரு புறம் தன்னுடைய கைகளால் சாதனைகளையும் வித்தைகளையும் மேற்கொண்டு வரும் நபர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்களிடையே அடுத்தடுத்து பேசி கோபிநாத் கைகளால் அவர்கள் செய்யக்கூடிய பல விஷயங்களை நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளார்.

கைகளால் வெளிப்படுத்திய உணர்ச்சிகள்: இதனிடையே, சின்னத்திரையில் கைகளைக் கொண்டு தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விஷயம் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்ப, சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியாக நடித்து வரும் நடிகை இதை செய்கையாலே செய்து காட்டி அசத்தினர். தன்னுடைய மகன் எதிரில் இருந்தும் அவனை சொந்தம் கொண்டாட முடியாது மற்றும் அவனிடம் அம்மா என்று கூற முடியாத சூழலில் இருக்கும் பெண்ணின் உணர்ச்சியை ரோகினி தன்னுடைய கைகளாலும் கண்களாலும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். சிறகடிக்க ஆசை சீரியலில் அவர் இத்தகைய கேரக்டரையே ஏற்று நடித்து வருகிறார்.

எண்ணெய் சட்டிக்குள் கைவிட்ட நபர்: இந்நிலையில் தன்னுடைய கைகளால் பெரிய பைக்கை தலைக்கு மேலே தூக்கி வைத்துக்கொண்டு கண்ணன் என்பவர் நடை போட்டதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. முன்னதாக இதை சீரியல் நடிகர் ஒருவர் மேற்கொள்ள முயற்சித்த நிலையில் அவரால் சிறிதளவு மட்டுமே தூக்க முடிந்தது. ஆனால் கண்ணன் என்ற அந்த நபரோ தலைக்கு மேல் பைக்கை வைத்துக் கொண்டு சில அடி தூரம் நடந்து காண்பித்தது பார்வையாளர்களை அசத்தியது. இதையடுத்து எண்ணெய் சட்டிக்குள் சுடசுட பஜ்ஜியை கைகளாலேயே சுட்டு எடுத்த நபரையும் இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டியது.

பதறிய பங்கேற்பாளர்கள்: அந்த பஜ்ஜியை தொட்டு சாப்பிடவும் சக பங்கேற்பாளர்கள் கஷ்டப்பட்ட நிலையில் அவர் சட்டிக்குள் சர்வசாதாரணமாக கையை விட்டது அனைவரையும் பதற செய்தது. இவ்வாறு இந்த சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ள நிலையில் நிகழ்ச்சியில் பல சுவாரசியங்கள் இடம் பெற உள்ளது. இதையொட்டி விஜய் டிவியின் அடுத்தடுத்த பிரமோக்கல் வெளியாகி வருகின்றன. இன்றும் நாளையும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி விஜய் டிவியில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள், புதிய படங்கள் ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X