சூப்பர் சிங்கர் மேடையில் ஒலித்த விஷ்ணுவின் ஏக்கம்.. சம்பவம் செய்த லாரன்ஸ் மாஸ்டர்!
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 9 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த ஷோவின் 10வது சீசன் துவங்கி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குக்கிராமங்களில் இருந்தும் ஏழ்மை நிலையிலிருந்தும் பல ஜூனியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
சிறு வயதிலேயே பல்வேறு போராட்டங்களை இவர்கள் சந்தித்து வரும் நிலையில் முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஏராளமான பாடும் திறமைகளை வெளிக் கொண்டுவந்த விஜய் டிவி, இவர்களின் வாழ்க்கையையும் பிரகாசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் குருகுளயாப்பட்டியை சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறான்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஷோ: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜூனியர், சீனியர் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியின் சீனியர் ஷோ நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து ஜூனியர் ஷோ துவங்கியது. அடுத்தடுத்த எபிசோட்களில் இந்த ஷோவில் ஜூனியர்கள் மிகச்சிறப்பானவகையில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்தும் ஏழ்மை சூழ்நிலையில் இருந்தும் இந்த போட்டியில் பல ஜூனியர்கள் இணைந்துள்ளனர்.
போட்டியாளர் விஷ்ணு: அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ம் குருக்குளையாபட்டியை சேர்ந்த விஷ்ணு தன்னுடைய பாடும் திறமையால் அடுத்தடுத்து நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். இவர் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே அத்த மக உன்னை நினைச்சி என்ற பாடலை சிறப்பாக பாடி அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். இதையடுத்து தன்னுடைய ஏழ்மையான சூழல் குறித்து நிகழ்ச்சியில் விஷ்ணு பேசிய நிலையில் அவரது வீட்டிற்கு டிவி, காஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவற்றை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாகாபா, பிரியங்கா மற்றும் நடுவர் இமான் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
கிராமத்திற்கு விடிவு கிடைத்தது: தன்னுடைய நிகழ்ச்சியை தான் பார்க்க முடியாத சூழ்நிலையில் இருந்த விஷ்ணுவிற்கு டிவி கொடுக்கப்பட்டதன்மூலம் அவரது அடுத்தடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. இதனிடையே, விஷ்ணுவின் கிராமம் குறித்தும் தண்ணீருக்கான கிராம மக்களின் போராட்டம் குறித்தும் அனைவருக்கும் தெரியவந்தது. அவர்களது கிராமத்தில் உப்புநீர் மட்டுமே கிடைத்த நிலையில் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தூரம் அவரது கிராம மக்கள் நடந்து செல்வது குறித்து விஷ்ணு மூலம் நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. இதனிடையே இது குறித்து கேள்விப்பட்ட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது அந்த மக்களின் பல ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளார்.
களத்தில் இறங்கிய ராகவா லாரன்ஸ்: உரிய அனுமதி பெற்று அந்த கிராமத்திற்கு ஆழ்துளை மூலம் தண்ணீர் கிடைக்க ராகவா லாரன்ஸ் வழிவகை செய்துள்ளார். இதனால் கிராம மக்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தற்போது விஜய் டிவி புதிய பிரமோவை வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் சிங்கர் ஜூனியர்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக இந்த பிரமோ மூலம் தெரியவந்துள்ளது. ராகவா லாரன்சை விஷ்ணுவின் கிராம மக்கள் கொண்டாடுவதாக இந்த பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. ஒரு ஏழை சிறுவன் தன்னுடைய கிராமத்தின் துயரை துடைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











